ஸ்கூட்டர்ல ரைடு போகும் போதே கிரிக்கெட் லைவ் ஸ்கோர் எல்லாம் வரும்! வேற லெவல் டிவிஎஸ் ஸ்கூட்டர் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இன்று தனது ஜுபிடர் 125 ஸ்கூட்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய புதிய ஆப்ஷன் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக டூவீலர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருக்கிறது. நீண்ட ஆண்டுகளாக இந்த ஸ்கூட்டர் விற்பனையில் இருக்கிறது. இந்நிலையில் இன்று டிவிஎஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது.

tvs jupiter 125 smartxonnect

அதன்படி டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் தற்போது ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன் இருக்கிறது. இந்த வசதி கொண்ட இந்த செக்மெண்டிலேயே முதல் வாகனமாக இந்த ஜூபிடர் 125 ஸ்கூட்டர் தான் இருக்கிறது. இந்த ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன் இந்த செக்மென்டிலேயே புதிய மைல்கல்லை உருவாக்கி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கிறது.

இது மட்டுமில்லாமல் இந்த ஸ்கூட்டரில் இரண்டு பெயிண்ட் ஸ்கீம்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி எலகன்ட் ரெட் மற்றும் மேட் காப்பர் பிரான்ஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்களில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்மார்ட் கனெக்ட் ஸ்கூட்டர் தற்போது ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் டிஎப்டி டிஜிட்டல் கிளஸ்டர் டிஸ்ப்ளே உடன் விற்பனைக்கு வருகிறது.

tvs jupiter 125 smartxonnect

இதில் ஸ்மார்ட் எக்ஸ் டிராக் என்ற ஆப்ஷன் இருக்கிறது. இதில் ரைடர்கள் தங்கள் ஸ்மார்ட் போனை கனெக்ட் செய்து டிவிஎஸ் கனெக்ட் மொபைல் அப்ளிகேஷன் மூலம் செல்போனையும் ஸ்கூட்டரையும் இணைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் வாய்ஸ் அசிஸ்டன்ட், கால் மற்றும் எஸ்எம்எஸ் நோட்டிபிகேஷன்,

டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ரியல் டைம் ஸ்போர்ட்ஸ் கோர்ஸ், சோசியல் மீடியா தளங்களில் இருந்து வரும் அப்டேட்கள், மழை பெய்வதை கணிக்கும் வெதர் அப்டேட் தற்போதைய செய்திகள் குறித்த அப்டேட் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்களை இதில் நாம் எளிதாக பெற முடியும்.

tvs jupiter 125 smartxonnect

இதுபோக இந்த ஸ்கூட்டரில் ஃபாலோமி ஹெட்லைட் அம்சம் இருக்கிறது . அதன்படி நீங்க ஸ்கூட்டர் இன்ஜினை ஆப் செய்து விட்டாலும் அடுத்த 20 நொடிகள் ஹெட் லைட் ஆஃப் ஆகாமல் இருக்கும் இது இரவு நேரங்களில் இருட்டான பகுதியில் பைக்கை பார்க் செய்து விட்டு அப்பகுதியில் இருந்து இறங்கி செல்பவர்களுக்கு வசதியாக வெளிச்சம் தரும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இதுபோக இந்த ஸ்கூட்டர் வடிவமைப்பில் பின்சீட்டில் அமர்வோர்களுக்கு பின்பக்கம் தங்கள் குறுக்குப் பகுதியை சாய்த்துக் கொள்வதற்காக ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. இது நீண்ட தூர பயணம் செய்யும்போது பயனுள்ளதாக இருக்கும். இந்த ஸ்கூட்டரின் இன்ஜினை பொறுத்தவரை 124.8சிசி சிங்கிள் சிலிண்டர், 2 வால்வு, ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8 பிஎச்பி பவரை 6500 ஆர்பிஎம்மிலும் 10.5 என்எம் டார்க் திறனை 4500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இந்த ஸ்கூட்டர் தற்போது இந்தியாவில் ரூபாய் 96,855 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகமாகி உள்ளது. தற்போது இந்தியா முழுவதும் இந்த பைக்கை நாம் புக் செய்து பெற முடியும். டிவிஎஸ் ஷோரூமிற்கு சென்று இந்த பைக்கை தற்போது புக்கிங் செய்து பெற்றுக் கொள்ளலாம் என டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஸ்கூட்டர்களில் ஸ்மார்ட் ஃபோன்களை கனெக்ட் செய்யும் ஆப்ஷன் தற்போது டிவிஎஸ் நிறுவனம் மூலம் அறிமுகமாகியுள்ளது. மக்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் கனெக்டெட் வாகனம் குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்படும். எதிர்காலங்களில் கனெக்டெட் வாகனங்கள் மிகப்பெரிய புரட்சியை செய்யப்போகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 17, 2023, 20:00 [IST]
English summary
Tvs jupiter 125 with bluetooth connectivity now available at inr 96 855
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X