TVS Jupiter Electric Scooter வரப்போகுது! ஓலா ஏத்தர் எல்லாம் ஓரமா போங்க!

டிவிஎஸ் நிறுவனம் தனது ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பிற்குப் பின்பு தனது இவி போர்ட்ஃபோலியோவில் புதிய ஸ்கூட்டர்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

தற்போது மிகப்பெரிய டூவீலர் தயாரிப்பாளர்களான டிவிஎஸ், பஜாஜ், மற்றும் ஹூரோ ஆகிய நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் காலடி தடத்தை பதித்து தலா ஒரு ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் ஸ்கூட்டருக்கு மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

tvs-jupiter-electric-scooter-patent-leaks-1

இந்நிலையில் இந்த செக்மெண்டில் தனது தயாரிப்புகளை அதிகப்படுத்த டிவிஎஸ் நிறுவனம் 5கிலோ வாட் ஹவர் பவர் முதல் 25 கிலோ வாட் ஹவர் பவர் வரை கொண்டு 10 ஸ்கூட்டர்களை களம் இறக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ கேஎன் ராதா கிருஷ்ணன் ஒரு கூட்டத்தில் பேசினார்.

அதன்படி டிவிஎஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லைன்அப்களை வரிசையாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காகக் காப்புரிமைக்காக அந்நிறுவனம் பதிவு செய்துள்ளது. அதில் முதல் ஸ்கூட்டராக தனது ஜூபிட்டர் ஸ்கூட்டரில் எலெக்ட்ரிக் வெர்ஷனை வெளியிட முடிவு செய்துள்ளது.

tvs-jupiter-electric-scooter-patent-leaks- 2

இந்த ஜூபிட்டர் எலெக்டரிக் ஸ்கூட்டர் விரைவில் வரவுள்ள ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம். ஐக்யூப் ஸ்கூட்டரை பொருத்தவரை ஹப் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அமைதியாகவும் குறைந்த பவரிலும் இயங்கும் திறன் கொண்டது.

ஆனால் இந்த ஹப் மோட்டார் 5 கிலோ வாட்டிற்கு மேல் பவர் வந்தால் இந்த அளவிற்குத் திறனுடன் இயங்க முடியாது. அதனால் இந்த முறை டிவிஎஸ் 5-25 கிலோ வாட் பவரை வெளிப்படுத்தும் மோட்டாராக மிட் மவுண்டட் மோட்டார்களை திட்டமிட்டுள்ளது. இதற்காகப் பதிவு செய்த காப்புரிமையில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

tvs-jupiter-electric-scooter-patent-leaks-3

அதன்படி இந்த மிட் மவுண்டெட் மோட்டாருக்கும் ரியர் வீலுக்கும் இடையே சிம்பிளான டிரான்ஸ் மிஷன் பொருத்தப்படவுள்ளது. மோட்டார் பகுதியில் உள்ள கேஸ் பிவியாட்உடனும், பின் வீல் பகுதியில் உள்ள கேட் ரியர் ஆக்ஸில் உடனும் இணைக்கப்படுகிறது. இதனால் வாகனத்தின் எடை வெகுவாக குறையும்.

மோட்டாருக்கும் வீலுக்கும் இடையே இருப்பது டிரைவ் கியர் என்றும். இதை டிவிஎஸ் நிறுவனம் "எண்ட்லெஸ் டிரான்ஸ்மிஷன் டிரைவ்" எனக் குறிப்பிட்டுள்ளனர். ஹப் மோட்டாரில் மோட்டாரும் வீலும் ஒரே வேகத்தில் சுற்றும் தன்மை கொண்டதாக இருக்கும்.

ஆனால் இந்த மிட் மவுண்டெட் மோட்டார் ஸ்பீடு ரிடெக்ஷன் ரேஷியோவில் செயல்படும் திறன் கொண்டது. இதனால் மோட்டார் மற்றும் பின்பக்க வீல் வேறு வேறு ஸ்பீடில் சுற்றும். ஒட்டு மொத்தத்தில் சொல்லப்போனால் இந்த டிவிஎஸ் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய பவர் டெரைன் பழையதை விட மேம்படுத்தப்பட்ட தொழிற்நுட்பத்தை கொண்டது.

மிட் மவுண்டெட் மோட்டார்கள் கொண்ட ஸ்கூட்டரில் அதிகமான பவர் வெளிப்படும். கிட்டத்தட்ட இதே சிஸ்டத்தை தான் ஏத்தர் 450 எக்ஸ், ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய ஸ்கூட்டர்களில் அந்தந்த நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளனர். இதை தற்போது டிவிஎஸ் நிறுவனமும் கையில் எடுத்துள்ளது. இதனால் இந்த செக்மெண்டில் பெரிய போட்டியை இது கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது ஐக்யூப் ஸ்கூட்டர் 0-40 கி.மீ வேகத்தை வெறும் 4.2 நொடியில் பிக்கப் செய்கிறது. அதுவும் இந்த ஸ்கூட்டரில் உள்ள 4.4 கிலோ வாட் மோட்டாரை கொண்டே இதைச் செய்கிறது. தற்போது டிவிஎஸ் மிட் மவுண்டெட் மோட்டாரை பயன்படுத்தினால் இதை செயல்பாடு இன்னும் சிறப்பாக இருக்கும்.

இந்த மிட் மவுண்டெட் மோட்டார் தொழிற்நுட்பத்தில் டிவிஎஸ் ஜூபிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் விற்பனைக்கு வரப்போகிறது. இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தால் வரும் 2024ம் ஆண்டு ஜனவரியில் அறிமுகமாகவுள்ள ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக இருக்கும்.

தற்போது டிவிஎஸ் ஜூபிட்டர் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் இரண்டாவது ஸ்கூட்டராக இருக்கிறது. முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா இருக்கிறது. அடுத்த ஆண்டு இதே போன்ற போட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டிலும் வரப்போகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 28, 2023, 16:08 [IST]
English summary
Tvs jupiter electric scooter and other ev plans revealed by tvs ceo
மேலும்... #டிவிஎஸ் #tvs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+