இனி ஹெல்மெட் உள்ளேயே பேசிக்கலாம்! ஜாலியா பாட்டும் கேட்கலாம்! டிவிஎஸ் அறிமுகப்படுத்திய புதிய கருவி!

டிவிஎஸ் நிறுவனம் தற்போது கோவாவில் தனது மோட்டோ சோல் Motosoul என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவிஎஸ் பைக்குகளின் ரசிகர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது டிவிஎஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி வருகிறது . இந்த விழாவின் முதல் நாள் தனது ரோனின் பைக்கில் 4 கஸ்டம் பைக்குகளை அறிமுகப்படுத்தியது.

நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான இன்று டிவிஎஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் எஸ்10எக்ஸ் மற்றும் எஸ் 20எக்ஸ் ஆகிய ஹெல்மெட் கம்யூனிகேனுன் கருவிகளை (Helmet Communication Device)அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி எப்படி வேலை செய்கிறது? எப்படி கையாள்வது என காணலாம் வாருங்கள்.

இனி ஹெல்மெட் உள்ளேயே பேசிக்கலாம்! ஜாலியா பாட்டும் கேட்கலாம்! டிவிஎஸ் அறிமுகப்படுத்திய புதிய கருவி!

டிவிஎஸ் நிறுவனம் இந்த கருவியை எந்த ஹெல்மெட்டில் வேண்டுமானாலும் ஃபிட் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு கிளாம்ப் மற்றும் ஓட்டும் வகையிலான இருண்டு செட்டப்கள் உள்ளன. இந்த இரண்டு கருவிகளும் டிவிஎஸ் கனெக்ட் தொழிற்நுட்பத்துடன் இணைந்து செயல்படும்.

இந்த டிவிஎஸ் கனெக்ட் ஆப் மூலம் ஏகப்பட்ட அம்சங்களைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக ஒரு குழுவாக தனித்தனி பைக்கில் பயணம் செய்தால் அவர்கள் எல்லோரும் அணிந்திருக்கும் ஹெல்மெட்டிற்குள் இந்த ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் கருவியை பொருத்திவிட்டால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியும். இதன் மூலம் பயணம் சுவாரஸ்யமாகவும் இனிமையாகவும் அமையும்.

இனி ஹெல்மெட் உள்ளேயே பேசிக்கலாம்! ஜாலியா பாட்டும் கேட்கலாம்! டிவிஎஸ் அறிமுகப்படுத்திய புதிய கருவி!

எஸ்10 எக்ஸ் மற்றும் எஸ்20எக்ஸ் ஆகிய இரண்டு கருவிகளும் பல அம்சங்கள் பொருந்திய மார்டன் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பில் X போன்ற 3 பட்டன்கள் நடுவில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் லைட்டிங்களும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த எஸ்10எக்ஸ் மற்றும் எஸ்20எக்ஸ் ஆகிய ஆகிய இரண்டு கருவிகளும் முன்னர் சொன்னபடியே ஒரு குழுவாக செல்லும் போது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள உதவும், கிட்டத்தட்ட ஒரு இண்டர் காம் போல இது செயல்படும். ஒரே நேரத்தில் 20 ரைடர்கள் இதில் ஒரே நேரத்தில் கனெக்ட் செய்து கொள்ளலாம். சுமார் 1.2 கி.மீ தூரம் வரை கனெக்ட் செய்ய முடியும்.

இனி ஹெல்மெட் உள்ளேயே பேசிக்கலாம்! ஜாலியா பாட்டும் கேட்கலாம்! டிவிஎஸ் அறிமுகப்படுத்திய புதிய கருவி!

இந்த கருவிகளை ப்ளூடூத் மூலம் கனெக்ட் செய்ய முடியும். இதில் கூகுள் அசிஸ்ட், சிரி ஆகியவற்றை இணைக்கப்பட்டுள்ள கருவிகள் மூலம் பயன்படுத்த முடியும். எஸ்10எக்ஸ் மற்றும் எஸ்20எக்ஸ் ஆகியவை மொபைல் ஜிபிஎஸ் நேவிகேஷன்களை பயன்படுத்த முடியும். அதுவும் செல்லும் பாதையில் இன்டர்நெட் வசதி இல்லை என்றாலும் நேவிகேஷன் செயல்படும். .

இந்த இரண்டு எக்ஸ் கனெக்ட் எஸ்10எஸ் மற்றும் எஸ்20எக்ஸ் ஆகியவற்றில் ஸ்பீக்கர்களை பொருத்தவரை ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சிறப்பான மியூசிக் சிஸ்டம் கிடைக்கும். அது மட்டுமல்ல இன்டர்காம் ஒர்க் ஆகும் அதே ஸ்பீக்கரில் பாடலும் கேட்ட முடியும். இதற்காக டெர்ரா ஸ்பாட் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது இண்டர் காம் பயன்படுத்தும் போது தானாக மியூசிக் சத்தத்தைக் குறைத்து விடுகிறது.

இனி ஹெல்மெட் உள்ளேயே பேசிக்கலாம்! ஜாலியா பாட்டும் கேட்கலாம்! டிவிஎஸ் அறிமுகப்படுத்திய புதிய கருவி!

இந்த இரண்டு எக்ஸ் கனெக்ட் எஸ்10எக்ஸ் மற்றும் எக்ஸ் கனெக்ட் எஸ்20 எக்ஸ் ஆகிய இரண்டும் ஐபி 67 ரேட்டிங் கொண்டது. இரண்டும் தூசு மற்றும் தண்ணீர் ப்ரூப் கொண்டது. இதனால் ஹெல்மெட்டில் இதைப் பொருத்தி தூசு நிறைந்த பகுதியிலும், கொட்டும் மழையிலும் கூட பயன்படுத்த முடியும்.

இந்த விலையைப் பொருத்தவரை டிவிஎஸ் எஸ்10 எக்ஸ் ரூ8499 என்ற விலையிலும், டிவிஎஸ் எஸ்10எக்ஸ் ரூ10,999 என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவி ரைடர்கள் ஒருவருக்கொருவர் ரைடிங் நேரத்தில் பேசிக்கொள்வதற்குத் துணையாக இருக்கும். இதை விலையும் குறைவாக இருப்பதால் மக்கள் மத்தியில் இது பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 5, 2023, 7:04 [IST]
English summary
Tvs launched smart xonnect s10x and s20x at motosoul
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X