பொண்ணுங்க, குழந்தைங்கனு எல்லாரும் இந்த பைக்கிற்கு அடிமையாக போறாங்க! இவ்ளோ கம்மி விலையில் இவ்ளோ சூப்பரான பைக்கா

"இவ்ளோ கம்மி விலையில் இப்படி ஒரு பைக்கா".. என ஆச்சரியப்பட வைக்கும் வகையில் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் (TVS), சூப்பரான வெர்ஷனில் தன்னுடைய பிரபல டூ-வீலர் மாடல் ஒன்றை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது. இந்த வாகனத்தின் சிறப்புகள் மற்றும் முக்கிய மாற்றங்கள்குறித்த விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

டிவிஎஸ் (TVS) நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தரமான டூ-வீலர் மாடல்களில் ஒன்றாக ரைடர் (Raider) இருக்கின்றது. இது ஓர் மலிவு விலை ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் வகை பைக்காகும். இந்த பைக் மாடலிலேயே டிவிஎஸ் நிறுவனம் தற்போது 'சூப்பர் ஸ்குவாட் எடிசன்' (Super Squad Edition) எனும் சிறப்பு பதிப்பையே இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

TVS raider super squad edition launched

மார்வல் திரைப்படங்களில் வரும் சூப்பர் ஹீரோக்களின் கதாப்பாத்திரங்களை பிரதிபலிக்கக் கூடியதே இந்த பதிப்பாகும். சூப்பர் ஹீரோக்களின் படங்களும், கிராஃபிக்குகளுமே இந்த பதிப்பில் இடம் பெற்றிருக்கும். ஆகையால், வழக்கமான தோற்றத்தில் இருந்து இந்த பதிப்பு மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. இதுவே டிவிஎஸ் ரைடர் சூப்பர் ஸ்குவாட் எடிசனின் சிறப்பாகும்.

நம்மில் பலருக்கு அதாவது, குழந்தைகள், பெரியவர்கள், இளம் பெண்கள் மற்றும் வயதானவர்கள் என பலருக்கு மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படம் மிகவும் பிடித்தமானதாக இருக்கின்றது. குறிப்பாக குட்டீஸ்களுக்கு மார்வல் திரைப்படங்கள் என்றால் மிகவும் அலாதியான ஒன்று. ஆகையால், வீட்டில் உள்ள சிறுவர்களை குஷிப்படுத்த அவர்களின் தந்தைகள் இந்த பைக்கை அதிகம் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், மார்வல் திரைப்படங்களை அதிகம் நேசிக்கக் கூடியவர்கள் மத்தியிலும் இந்க ரைடர் சூப்பர் ஸ்குவாட் பதிப்பிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிளாக் பேந்தர் மற்றும் ஐயர்ன் மேன் ஆகிய இரு கதாபாத்திரங்களை பிரதிபலிக்கும் தேர்வுகள் மட்டுமே ரைடர் சூப்பர் ஸ்குவாட் பதிப்பில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 98,919 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். வழக்கமான டிவிஎஸ் ரைடர் இதே டெல்லி எக்ஸ்-ஷோரூமில் ரூ. 95,219க்கு விற்கப்படுகின்றது. இதை சற்று காஸ்ட்லியான தேர்வாக சூப்பர் ஸ்குவாட் பதிப்பு உள்ளது.

அதேநேரத்தில், தமிழகத்தில் இதே மோட்டார்சைக்கிளின் வழக்கமான தேர்வே ரூ. 99,157 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய ரைடர் சூப்பர் ஸ்குவாட் பதிப்பு டிவிஎஸ் நிறுவனத்தின் அனைத்து விற்பனையகங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பெட்ரோல் டேங்க் தொடங்கி சைடு மிர்ரர் வரை என பல பகுதிகளில் சூப்பர் ஹீரோக்களை பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை இந்த வாகனத்தில் பார்க்க முடிகின்றது.

ஏற்கனவே கூறியதைப் போல் டிவிஎஸ் ரைடர் ஓர் மலிவு விலை ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக்காகும். 125 சிசி திறன் கொண்ட மோட்டாரே இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. சிறப்பம்சம் மற்றும் ஸ்டைல் என அனைத்திலும் அட்டகாசமான டூ-வீலராக அது காட்சியளிக்கின்றது.

இதன் காரணத்தினாலேயே இந்த பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை இரட்டிப்பாக்கும் விதமாகவே டிவிஎஸ் நிறுவனம் தற்போது சூப்பர் ஹீரோக்களை பிரதிபலிக்கும் பதிப்புகளை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

டிவிஎஸ் ரைடர் ஓர் மலிவு விலை ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் ரக பைக்காகும். சிறப்பம்சம் மற்றும் ஸ்டைல் என அனைத்திலும் அட்டகாசமான டூ-வீலராக அது காட்சியளிக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இந்த பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதை இரட்டிப்பாக்கும் விதமாகவே டிவிஎஸ் நிறுவனம் தற்போது சூப்பர் ஹீரோக்களை பிரதிபலிக்கும் பதிப்புகளை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் ஆரம்ப நிலை தேர்விலேயே எஸ்பிடி உடன் கூடிய டிஸ்க் பிரேக், ரைடு மோட்கள் உடன் கூடிய எல்சிடி டிஜிட்டல் க்ளஸ்டர் என ஏகப்பட்ட அம்சங்கள் நவீன கால அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அதுதவிர, இந்த டிவிஎஸ் ரைடரால் வெறும் 5.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிவிடும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த சூப்பரான திறனுக்காக 3 வால்வுகள் கொண்ட 125 சிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரால் 8.28 கிலோவாட் பவர் வரை வெளியேற்ற முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிவிஎஸ் ரைடர் பைக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே சூப்பர் ஸ்குவாட் எடிசனை அந்நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 11, 2023, 16:29 [IST]
English summary
Tvs launched super squad edition in raider inspired by marvel super heroes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+