புதிய உச்சம் தொட்ட டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் விற்பனை - ரைடர் பைக்கிற்கும் குவியும் வரவேற்பு!!

நமது தமிழகத்தை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டாருக்கு இந்தியாவில் ஒரு கிரேஸ் உள்ளதை மறுப்பதற்கில்லை. அதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள டிவிஎஸ் மோட்டாரின் கடந்த பிப்ரவரி மாத விற்பனையை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.

உள்நாட்டில் விற்பனை செய்வது டிவிஎஸ் மோட்டாரின் பிரதான செயல்பாடு என்றாலும், வெளிநாடுகளுக்கும் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை இந்த நிறுவனம் ஓசூரில் உள்ள தனது தொழிற்சாலையில் தயாரித்து அனுப்புகிறது. இந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 2,65,872 இருசக்கர வாகனங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது.

புதிய உச்சம் தொட்ட டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் விற்பனை!!

இதில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை என்று தனியாக கணக்கிட்டால், கடந்த மாதத்தில் 2,21,402 இருசக்கர வாகனங்களை நாடு முழுவதும் டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. இது 2022 பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்டவைகளை காட்டிலும் 48 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 1,73,198 2-வீலர்களை மட்டுமே டிவிஎஸ் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்திருந்தது.

டிவிஎஸ்-இன் விற்பனையில் இந்த வளர்ச்சிக்கு அப்பாச்சி, ரைடர் பைக்குகள் முக்கிய பங்காற்றி உள்ளன. குறிப்பாக, ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் இமாலய முன்னேற்றத்தை கண்டுள்ளது. இருப்பினும், வழக்கம்போல் கடந்த மாதத்திலும் டிவிஎஸ் பிராண்டில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலர் ஜூபிட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டரை கடந்த பிப்ரவரி மாதத்தில் 53,891 யூனிட்கள் டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது.

புதிய உச்சம் தொட்ட டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் விற்பனை!!

இந்திய மக்கள் பெரும்பாலானோர் தேர்வு செய்யக்கூடிய ஸ்கூட்டர் மாடல்களுள் ஒன்றாக விளங்கும் இது கடந்த பிப்ரவரியில் 47,092 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இதன் மூலமாக ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் விற்பனை ஆனது 14.44% அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக எக்ஸ்.எல்100 மினி பைக்கை டிவிஎஸ் மோட்டார் கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் 35,346 எக்ஸ்.எல் பைக்குகள் விற்கப்பட்டுள்ளன. 2022 பிப்ரவரியிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான எக்ஸ்.எல்100 பைக்குகளை தான் டிவிஎஸ் விற்பனை செய்தது என்றாலும், சற்று துல்லியமாக கணக்கிட்டு பார்த்தால், 2022 பிப்ரவரியை விட கடந்த பிப்ரவரியில் 502 எக்ஸ்.எல்100 பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் அப்பாச்சி மற்றும் ரைடர் பைக்குகள் 3வது மற்றும் 4வது இடங்களில் உள்ளன.

புதிய உச்சம் தொட்ட டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் விற்பனை!!

ஏற்கனவே கூறியதுபோல் அப்பாச்சி மற்றும் ரைடர் பைக்குகளின் விற்பனை 2022 பிப்ரவரியை காட்டிலும் வெகுவாக கடந்த பிப்ரவரியில் அதிகரித்துள்ளது. இவை இரண்டும் கடந்த பிப்ரவரி மாதத்தில் முறையே 34,935 மற்றும் 30,346 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2022 பிப்ரவரியில் இவை முறையே 16,406 மற்றும் 14,744 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. இவற்றை தொடர்ந்து 5வது மற்றும் 6வது இடங்களில் டிவிஎஸ்-இன் ஸ்கூட்டர்களான எண்டார்க் மற்றும் ஐக்யூப் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை வருடம்-வருடம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதை இந்த ரிப்போர்ட் வெளிக்காட்டுகிறது. குறிப்பாக, இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஐக்யூப்பிற்கு வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர். இதனால் டிவிஎஸ்-இன் எதிர்கால நம்பிக்கைக்குரிய தயாரிப்பாக ஐக்யூப் விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, March 25, 2023, 11:19 [IST]
English summary
Tvs motor 2 wheelers sales 2023 feb
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+