டிவிஎஸ் ஜூபிட்டரில் புதிய வேரியண்ட் அறிமுகம்!! சூப்பரு... இனி இந்த ஆப்ஷனில் வாங்க வேண்டியதுதான்!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் அதன் ஜூபிட்டர் இசட்.எக்ஸ் (Jupiter ZX) ஸ்கூட்டரை அசத்தலான அம்சங்களுடன் அப்டேட் செய்து, சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டிவிஎஸ் ஜூபிட்டர் இசட்.எக்ஸ் ஸ்கூட்டரை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று டிவிஎஸ் மோட்டார் ஆகும். தமிழகத்தை சேர்ந்த இந்த 2-வீலர் பிராண்டின் தயாரிப்புகள் இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. டிவிஎஸ் மோட்டாரின் பிரபலமான ஸ்கூட்டராக ஜூபிட்டர் விளங்குகிறது. ஸ்டீல் மெட்டல் வீல், ஸ்டாண்டர்ட், இசட்.எக்ஸ் மற்றும் கிளாசிக் என 4 விதமான வேரியண்ட்களில் டிவிஎஸ் ஜூபிட்டர் விற்பனை செய்யப்படுகிறது.

tvs jupiter zx drum smartxonnect

இதில், இசட்.எக்ஸ் வேரியண்ட் ட்ரம், டிஸ்க் மற்றும் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் என வெவ்வேறான அம்சங்களுடன், வெவ்வேறான விலைகளில் கிடைக்கிறது. ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் (SmartXonnect) என்பது ஸ்கூட்டரை மொபைல் போன் உடன் இணைக்க உதவும் மென்பொருள் ஆகும். இந்த சாஃப்ட்வேரின் உதவியுடன் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன், வாய்ஸ் அசிஸ்ட், மொபைல் போன் அழைப்புகள் & குறுஞ்செய்தி உள்ளிட்ட விபரங்களை ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்படும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையில் பெறலாம்.

இத்தகைய, ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் வசதியுடன் ஜூபிட்டர் இசட்.எக்ஸ் ஸ்கூட்டரை வாங்கினால் முன்பு டிஸ்க் பிரேக்குகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஜூபிட்டர் இசட்.எக்ஸ் ஸ்கூட்டரை ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் மற்றும் டிரம் பிரேக்குகள் உடன் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, ஜூபிட்டர் இசட்.எக்ஸ் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் ஸ்கூட்டரை இனி டிரம் பிரேக்குகள் உடனும் வாங்க முடியும்.

டிவிஎஸ் ஜூபிட்டரின் இந்த புதிய வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.84,468 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வேரியண்ட் என்பதை ஹைலைட் படுத்தும் விதமாக, ஸ்டார்லைட் நீலம் மற்றும் ஆலிவ் கோல்டு என 2 புதிய பெயிண்ட் தேர்வுகளும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதன் காரணமாக, புதிய ஜூபிட்டர் இசட்.எக்ஸ் எக்ஸோனெக்ட் & ட்ரம் ஸ்கூட்டர் புத்துணர்ச்சியான தோற்றத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

tvs jupiter zx drum smartxonnect

ஏற்கனவே கூறியதுபோல், ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் என்ற கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பம் ஸ்கூட்டரில் பயணத்தை சவுகரியமானதாக மாற்றுவதுடன், பாதுகாப்பானதாகவும் ஆக்குகிறது. அத்துடன், பில்டு-இன் மொபைல் சார்ஜர் வசதியும் ஜூபிட்டர் ஸ்கூட்டரில் வழங்கப்படுகிறது. இதனால் பயணத்தின்போதும் பயணிகளால் தங்களது மொபைல் போன்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

டிவிஎஸ் ஜூபிட்டரில் 12-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. டிஸ்க் பிரேக் வேரியண்ட்களில் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்குகளும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்குகளும் பொருத்தப்படுகின்றன. அதுவே, டிரம் பிரேக் வேரியண்ட்களில் இரு சக்கரங்களில் 130மிமீ-இல் டிரம் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. ஆக, தற்போது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேரியண்ட்டிலும் இரு சக்கரங்களிலும் 130மிமீ டிரம் பிரேக்குகளே கிடைக்கும்.

டிவிஎஸ் ஜூபிட்டரில் 109.7சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் ஜூபிட்டரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ஒரே மாதியானதாகவே வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 7.8 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் உருவாக்கியதிலேயே மிக அருமையான தொழிற்நுட்பம் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் எனலாம். ப்ளூடூத் இணைப்பின் மூலம் செயல்படும் இந்த தொழிற்நுட்பத்துடன் ஜூபிட்டரை அதிக வேரியண்ட்களில் விற்பனை செய்ய டிவிஎஸ் மோட்டார் முயற்சிப்பது நல்ல விஷயமே. ஏனெனில், மொபைல் போனை வாகனத்துடன் இணைக்கும் வசதி தற்போதைய கால மாடர்ன் வாகனங்களில் சாதாரண விஷயமாக மாறி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 4, 2023, 0:31 [IST]
English summary
Tvs motor launches jupiter zx drum smartxonnect tech
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+