தனியா வேற சிறப்பு பதிப்பைக் கொண்டாந்திருக்காங்களா! விற்பனையில் ஆக்டிவாவையே மிஞ்ச டிவிஎஸ் பிளான் போட்டிருச்சு!
டிவிஎஸ் (TVS) நிறுவனத்தின் முன்னணி இருசக்கர வாகன மாடல்களில் ரோனின் (Ronin)-ம் ஒன்று. இந்த பைக்கின் ஸ்டைல் மற்றும் அதில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் அனைத்தும் அந்த பைக்கை ஓர் சிறப்பு பதிப்பைபோல் காண்பிக்கின்றன.
இந்த நிலையிலேயே அதனை கூடுதல் சிறப்பானதாக காண்பிக்கும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் ரோனின் பைக்கில் புதிய சிறப்பு பதிப்பை விற்பனக்குக் கொண்டு வந்திருக்கின்றது. வரும் பண்டிகை நாட்களை முன்னிட்டே இந்த சிறப்பு பதிப்பு ரோனின் பைக்கை அது நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

ரோனின் ஸ்பெஷல் எடிசன் (TVS Ronin Special Edition) எனும் பெயரிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். இதன் விலை ரூ. 1.72 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. வழக்கமான ரோனின் பைக்கின் உயர் நிலை வேரியண்டான டிடி (TD) வேரியண்டைக் காட்டிலும் சற்று காஸ்ட்லியானதாக இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
துள்ளியமாகக் கூற வேண்டும் என்றால் ரோனின் டிடி வேரியண்டைக் காட்டிலும் சிறப்பு பதிப்பாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் ரோனின் ஸ்பெஷல் எடிசன் ரூ. 3 ஆயிரம் அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். ஆகையால், இந்த சிறப்பு பதிப்பை வாங்குவது ஒர்த்தானதாக இருக்கும் என்றே தெரிகின்றது.

ஏனெனில், கூடுதல் சிறப்பு அலங்கார அணிகலன்கள் மற்றும் பாடி கிராஃபிக்குகள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக சிறப்பு பதிப்பில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் வண்ண தேர்வு மிகவும் அட்டகாசமானதாகக் காட்சியளிக்கின்றது. நிம்பஸ் கிரே எனும் நிறமே சிறப்பு பதிப்பு ரோனின் பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது அந்த பைக்கிற்கு கூடுதல் ரெட்ரோ லுக்கை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இத்துடன், சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஷேட்களும் இந்த பைக்கின் குறிப்பிட்ட சில பாகங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் வீலை அழகாகக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக அதிலும் சிவப்பு நிறத்தை டிவிஎஸ் பயன்படுத்தி இருக்கின்றது.
இதுதவிர, வீலில் டிவிஎஸ் ரோனின் என்றும் பிராண்டிங் செய்யப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இவற்றுடன், சிறிய ஃப்ளை ஸ்கிரீன் மற்றும் இஎஃப்ஐ கவர் கொண்ட யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆகிய அம்சங்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற அலங்கார விஷயத்தில் மட்டுமே இந்த சிறப்பு பதிப்பு ரோனின் மாற்றம் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.
மெக்கானிக்கல் (மோட்டார்) விஷயத்தில் எந்த மாற்றத்தையும் டிவிஎஸ் செய்யவில்லை. ஆகையால், வழக்கமான ரோனின் பைக்கில் காணப்படும் அதே மோட்டாரே ரோனின் சிறப்பு பதிப்பிலும் காட்சியளிக்கின்றது. ஆமாங்க, 225.9 சிசி சிங்கிள் சிலிண்டர் ஆயில் கூல்டு ஃப்யூவல் இன்ஜெக்டட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 20.1 பிஎச்பி பவரையும், 19.93 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த மோட்டாரில் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதியையும் இந்த பைக்கில் டிவிஎஸ் வழங்கி இருக்கின்றது. இதனை ஸ்டாண்டர்டு அம்சமாக டிவிஎஸ் வழங்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
மிக சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக இந்த பைக்கில் 41 மிமீ அப்சைடு-டவுன் ஃப்ரண்ட் ஃபோர்க் (முன் பக்கத்தில்) மற்றும் 7 ஸ்டெப் -ப்ரீலோடு அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் (பின் பக்கத்தில்) வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் மற்றும் பின் பக்க வீல்களில் டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இத்துடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் சிஸ்டமும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூபிடர் ஸ்கூட்டரே அதிகம் சேல்ஸ் ஆகும் இருசக்கர வாகனமாக இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக ரைடர் இருக்கின்றது. ஆனால், ரோனின் இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களின் பட்டியலில் 11வது இடத்தைப் பிடித்து உள்ளது. வரும் நாட்களில் இந்த இடத்தில் இருந்து முன்னேறி முன்னணி இடத்திற்கு அது நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








