ஆக்டிவா பயங்கரமா கொட்டு வாங்கியிருக்கும் போலிருக்கே! 1.45 மில்லியனை தொட்ட டிவிஎஸ் என்டார்க் விற்பனை...

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனமாக ஹோண்டா ஆக்டிவா இருக்கின்றது. இதற்கு போட்டி அளிக்கும் விதமாக சந்தையில் எக்கசக்கமான எண்ணிக்கையில் வேறு பிராண்டுகளின் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அந்தவகையில், ஆக்டிவாவிற்கு போட்டியாக இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஓர் ஸ்கூட்டரே டிவிஎஸ் என்டார்க் (TVS Ntorq) ஆகும்.

டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனமாக இது காட்சியளிக்கின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. டிவிஎஸ் என்டார்க் விற்பனையில் புதிய சாதனை மைல் கல்லை எட்டியிருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் முதன் முதலில் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

Tvs ntorq 125 race edition blue colour side view

மேலும், அது விற்பனைக்கு வந்து 5 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் மட்டுமே ஆகின்றன. இந்த நிலையில் 1.45 மில்லியன் யூனிட்டுகள் என்டார்க் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஸ்கூட்டருக்கு இந்தியாவில் வரவேற்பு ஏற்றமும், இறக்கமுமாக தென்படுகின்றது.

குறிப்பாக, விற்பனைக்கு வந்த அந்த ஆண்டிலேயே 19,809 யூனிட்டு என்டார்க் ஸ்கூட்டர்கள் விற்பனையாகின. இதைத்தொடர்ந்து, 2019 நிதியாண்டில் மட்டும் 2,13,039 யூனிட்டுகள் விற்பனையை அது பெற்றது. இதேபோல், 2020 நிதியாண்டில் 2,65,016 யூனிட்டுகளும், 2021 நிதியாண்டில் 2,51,491 யூனிட்டுகளும், 2022 நிதியாண்டில் 2,49,277 யூனிட்டுகளும் மற்றும் 2023 நிதியாண்டில் 2,90,539 யூனிட்டுகளும் விற்பனையாகின.

Tvs ntorq 125 race edition blue colour front view

இதுபோன்ற தொடர்ச்சியான அதிக விற்பனையின் காரணத்தினாலேயே இப்போது 1.45 மில்லியன் விற்பனை எனும் இமாலய சாதனையை டிவிஎஸ் என்டார்க் எட்டி இருக்கின்றது. இந்த விற்பனை புள்ளி விபரங்கள் அனைத்தும் இந்தியாவில் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்ட டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரின் விபரங்கள் ஆகும்.

இந்தியாவில் கிடைத்திருப்பதைப் போலவே வெளிநாடுகளிலும் டிவிஎஸ் என்டார்க்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கின்றது. நிதியாண்டு 2019 இல் 25,777 யூனிட்டுகளும், 2020 இல் 35,233 யூனிட்டுகளும், 2021 இல் 35,989 யூனிட்டுகளும், 2022 இல் 52,304 யூனிட்டுகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2023இல் மட்டும் சற்று லேசான சரிவைச் சந்தித்து இருக்கின்றது.

Tvs ntorq 125 race edition

42,421 யூனிட்டுகள் வரை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. வரும் காலங்களிலும் இதுபோலவே நல்ல விற்பனை வளர்ச்சியை டிவிஎஸ் என்டார்க் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் அதிக செயல் திறனை வெளியேற்றக் கூடிய 125 சிசி (125cc) ஸ்கூட்டராக என்டார்க் காட்சியளிக்கின்றது.

இதன் ரேஸ் எக்ஸ்பி மற்றும் ரேஸ் எக்ஸ்டி ஆகிய தேர்வுகள் 10.2 எச்பி பவரையும், 10.8 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மற்ற தேர்வுகள் 9.4 எச்பி மற்றும் 10.5 என்எம் டார்க்கை வெளியேற்றும். ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான தேர்வுகளில் டிவிஎஸ் என்டார்க் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதன் ஆரம்ப விலை ரூ. 88,565 ஆகும். இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அதிகபட்சமாக ரூ. 1.01 லட்சம் வரையிலான விலையில் இது விற்கப்படுகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதுபோன்று குறைவான விலையில் இதை விற்பனைச் செய்வதாலும், அதிக தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்குவதனாலுமே என்டார்க்கிற்கு இந்தியாவில் வரவேற்பு தொடர்ச்சியாக ஸ்டாரங்காக உள்ளது.

இந்த ஸ்கூட்டரின் உயர்நிலை தேர்வுகளில் டிவிஎஸ் நிறுவனம் எண்ணற்ற தொழில்நுட்ப வசதிகளை வழங்குகின்றது. அந்தவகையில், டிவிஎஸ் இன் ஸ்மார்ட்எக்ஸோன்னக்ட் இணைப்பு அம்சம், ப்ளூடுத் இணைப்பு, ஸ்மார்ட்எக்ஸ்டால்க் எனும் அம்சம் ஆகியவற்றை வழங்கியிருக்கின்றது. இத்துடன், ஸ்மார்ட்எக்ஸ்டிராக் எனும் சிறப்பு வசதியையும் டிவிஎஸ் வழங்கியிருக்கின்றது. இந்த அம்சம் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளின் ஸ்கோர், சோசியல் மீடியா அப்டேட், செய்திகள், கால நிலை பற்றிய அறிவிப்புகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனத்தின் ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ஐக்யூப்பிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையிலேயே நிறுவனத்தின் 125 சிசி ஸ்கூட்டர் மாடலான என்டார்க்கிற்கும் நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 11, 2023, 12:01 [IST]
English summary
Tvs ntorq gtes 1 45 million sales milestone
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X