ஓலாவை எப்படியாவது பின்னாடி தள்ள டிவிஎஸ் போடும் செம பிளான்! என்ன பண்ண போறாங்க தெரியுமா?
டிவிஎஸ் நிறுவனம் 10 நாளில் 10 நகரங்களில் 1000 டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த 2020ம் ஆண்டு அறிமுகமானது. அப்பொழுது முதலே இந்த ஸ்கூட்டருக்கு மார்கெட்டில் நல்ல மவுசு இருக்கிறது. தொடர்ந்து விற்பனை வளர்ச்சியடைந்து கொண்டே வருகிறது. தற்போது ஐக்யூப் ஸ்கூட்டர் 2 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது.

ஐக்யூப் மற்றும் ஐக்யூப் எஸ் ஆகிய வேரியன்ட்கள் விற்பனையாகியுள்ளது. டாப் வேரியன்டாக டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் எஸ்டி என்ற வேரியன்டை அறிவித்துள்ளது. இந்த வேரியன்ட் இதுவரை விற்பனைக்கு வரவில்லை. பலர் இந்த வேரியன்டை புக் செய்துவிட்டு விற்பனைக்காகக் காத்திருக்கின்றனர்.
ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை 1 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இந்நிலையில் 10 நாளில் 10 நகரங்களில் 1000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஐக்யூப் எஸ்டி காரை பொருத்தவரை மற்ற வேரியன்டை விடப் பெரிய பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இதில் 4.56 கிலோ வாட் ஹவர் பவரை கொண்டுள்ளது. மற்ற வேரியன்ட்களில் 3.04 கிலோ வாட் ஹவர் பேட்டரி தான் பொருத்தப்பட்டுள்ளது. எஸ்டி வேரியன்ட் கார் மொத்தம் 145 கி.மீ ரேஞ்சை எக்கோ மோடிலும், 110 கி.மீ ரேஞ்சை பவர் மோடிலும் கொடுக்கும் திறன் கொண்டது.
இந்த பேட்டரியை சாதாரண சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற்றினால் 0-80 சதவீத சார்ஜை 4 மணி நேரம் 6 நிமிடத்தில் ஏற்றுகிறது. இதுவே ஃபாஸ்ட் சார்ஜர் ஏற்றினால் 2 மணி நேரம் 30 நிமிடம் தான் எடுத்துக்கொள்ளும். இந்த ஐக்யூப் எஸ்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 82 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இதில் 4.4 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
இது அதிகபட்சமாக 3 கிலோ வாட் பவரையும், 140 என்மு் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதில் 17.78 செ.மீ டச் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. இதை கண்ட்ரோல் செய்ய ஜாய்ஸ்டிக் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஓடிஏ அப்டேட் ஆப்ஷன் இருக்கிறது. பாதுகாப்பு அம்சமாக டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் கனெக்டெட் தொழிற்நுட்பம் இதில் இருக்கிறது.
டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இதற்கு முன்னர் நீங்கள் வாங்கியிருந்தால் உங்களுக்கு ரூ1700 பணம் திரும்ப வழங்கப்படும் என டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபேம் திட்டத்தின் கீழ் தவறாக இது வசூலிக்கப்பட்டதால் தற்போது இந்த பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் ஸ்கூட்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த மொமெண்டை பயன்படுத்தி அதிகமான விற்பனையைச் செய்ய அந்நிறுவனம் பல யுக்திகளைச் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதி தான் இந்த 1000 ஸ்கூட்டர் டெலிவரியும். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








