70 கிமீ மைலேஜ் தரும்! இந்த விலைக்கு இப்படி ஒரு பைக்கா! டிவிஎஸ் ஷோரூம்களுக்கு சாரை சாரையா படையெடுக்கும் மக்கள்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து பைக்குகளில் ஒன்று டிவிஎஸ் ரைடர் (TVS Raider). நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டிவிஎஸ் ரைடர் பைக்கின் விற்பனை (Sales)
பிரம்மிக்க வைக்கும் வகையில் உயர்ந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டிவிஎஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 21,766 டிவிஎஸ் ரைடர் பைக்குகளை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 48,753 ஆக உயர்ந்துள்ளது. இது 124 சதவீத வளர்ச்சியாகும்.

இது மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இது 125 சிசி பைக் ஆகும். இந்த பைக்கில், 11.38 பிஎஸ் பவர் மற்றும் 11.2 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 125 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சக்தி வாய்ந்த இன்ஜின் என்பதுடன், நல்ல மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாகவும் திகழ்கிறது.
டிவிஎஸ் ரைடர் பைக், ஒரு லிட்டருக்கு 67 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு பலம் என்றால், கவர்ச்சிகரமான டிசைன் (Design) டிவிஎஸ் ரைடர் பைக்கின் மற்றொரு பலமாக இருக்கிறது. உண்மையில் 125 சிசி பைக்தானா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் டிவிஎஸ் ரைடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் டிவிஎஸ் ரைடர் பைக்கின் ஆரம்ப விலை (Price) 86 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 1.03 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டி விடும் திறன் டிவிஎஸ் ரைடர் பைக்கிற்கு உண்டு. இதன் இருக்கை உயரம் (Seat Height) 780 மிமீ ஆக உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் எடை 123 கிலோவாக இருக்கிறது.
டிவிஎஸ் ரைடர் பைக்கில் டிஎஃப்டி டிஸ்ப்ளே உடன் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட், வாய்ஸ் அஸிஸ்ட் மற்றும் நேவிகேஷன் என ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன. இது போன்ற காரணங்களால்தான், டிவிஎஸ் ரைடர் பைக்கின் விற்பனை தூள் கிளப்பி கொண்டுள்ளது. ஆனால் வேரியண்ட்களை (Variants) பொறுத்து, வசதிகளின் பட்டியல் மாறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிக வசதிகளுடன், பார்ப்பதற்கு ஸ்போர்ட்ஸ் பைக் தோற்றத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் நல்ல மைலேஜ் கிடைக்கவும் வேண்டும் என எதிர்பார்க்க கூடிய இந்திய வாடிக்கையாளர்கள், டிவிஎஸ் ரைடர் பைக்கை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








