பரவாயில்லையே டிவிஎஸ் இந்த பிரிவுல நின்னு பேசுதே... ஆச்சரியப்பட்டு நிற்கும் ஓலா, ஏத்தர் நிறுவனங்கள்...

டிவிஎஸ் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகன மாடலான ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் பலமடங்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக விற்பனையில் அது புதிய மைல்கல்லை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டிவிஎஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஐக்யூப் மாடல்தான் அது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக டிவிஎஸ் ஐக்யூப் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tvs iqube

இதுவரை 1 லட்சம் யூனிட்டுகள் வரை டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதுமட்டும் இல்லைங்க, கடந்த ஏப்ரல் மாத விற்பனையிலும் இந்த எலெக்ட்ரிக் பின்னிபெடலெடுத்திருக்கின்றது. 6,227 யூனிட்டுகள் வரை டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன.

இதே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 1,420 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. இந்த எண்ணிக்கையைக் கடந்த காலத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் தற்போது பலமடங்கு அதீத வளர்ச்சியுடன் டிவிஎஸ் ஐக்யூப் விற்பனையாகிக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகின்றது. எதிர்காலத்திலும் இதேபோல் அதீத வளர்ச்சியையே இந்த இ-ஸ்கூட்டர் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tvs iqube front view

டிவிஎஸ் நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏஐஎஸ்156 2ஆம் கட்டத்திற்கு உயர்த்தி இருக்கின்றது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை போலவே நிறுவனத்தின் பெட்ரோல் டூ-வீலர்களும் விற்பனையில் வளர்ச்சியைச் சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் 2023 ஏப்ரலில் ஒட்டுமொத்தமாக 294,786 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன.

இதுவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 280,022 யூனிட்டுகள் டூ-வீலர்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இது நடப்பாண்டு ஏப்ரலைக் காட்டிலும் 5 சதவீதம் குறைவாகும். ஆமாங்க, இந்த ஆண்டின் ஏப்ரலில் 5 சதவீதம் வரை விற்பனை அதிகரித்திருக்கின்றது. நிறுவனத்தின் ஸ்கூட்டர் மற்றும் பைக் என இரண்டிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றது.

Tvs iqube side view

ஆனால், நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனங்கள் மட்டும் விற்பனையில் லேசான சரிவைச் சந்தித்து இருக்கின்றது. 2022 ஏப்ரலில் 15,286 யூனிட்டுகள் விற்பனையாகிய நிலையில், 2023 ஏப்ரலில் 11,438 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. மூன்றுசக்கர வாகனத்தின் விற்பனையை போலவே நிறுவனம் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியிலும் லேசான சரிவைச் சந்தித்து இருக்கின்றது.

சென்ற ஏப்ரல் மாதத்தில் 71,663 யூனிட்டுகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. அதேவேளையில், 2022 ஏப்ரலில் நிறுவனத்தின் ஏற்றுமதி எண்ணிக்கை 113,427 யூனிட்டுகளாக இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் இருசக்கர வாகனங்கள் மட்டும் 61,830 யூனிட்டுகள் ஆகும். 2022 ஏப்ரலில் 99,489 யூனிட்டுகள் வரை இருசக்கர வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கு மிக சிறந்த சான்றாகவே டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை அமைந்திருக்கின்றது. இந்த நிறுவனத்தின் மின்வாகனம் மட்டுமில்லைங்க, ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனெர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களின் மின்சார இருசக்கர வாகனங்களுக்கும் நாட்டில் டிமாண்ட் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 3, 2023, 12:39 [IST]
English summary
Tvs registers 4 percent sales growth in april 2023
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X