ரோனின் பைக்கை 4 விதமான ஸ்டைல்களில் கஸ்டமைஸ் செய்த டிவிஎஸ்! இந்த பைக்குல போனா வச்ச கண்ண எடுக்காம பாப்பாங்க!

டிவிஎஸ் (TVS Motor Company) நிறுவனத்தின் முதன்மையான தயாரிப்புகளில் ஒன்றாக ரோனின் (TVS Ronin) இருக்கின்றது. அப்பாச்சி (Apache), ரைடர் (Raider) ஆகிய மாடல்களைபோல் இந்த பைக் மாடலுக்கும் இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் மற்றும் நாட்டின் முதல் 225 சிசி மோட்டார்சைக்கிள் இதுவாகும்.

இந்த வாகனத்தின் உருவாக்கத்திற்காக பிரத்யேக தளத்தை டிவிஎஸ் பயன்டுத்தி இருக்கின்றது. இந்த பிரத்யேக தளத்தின் வாயிலாகவே அதற்கு மாடர்ன் மற்றும் ரெட்ரோ தோற்றம் வழங்கப்பட்டு உள்ளது. தோற்றம் ரெட்ரோவாகவும், அதில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் நவீன காலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும். ப்ளூடூத் இணைப்பு, வாய்ஸ் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் ரோனின் பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன.

டிவிஎஸ் ரோனின்

இதுதவிர இந்த பைக்கிற்கு ரோடு சைடு அசிஸ்டன்ஸ் வசதியும் வழங்கப்படுகின்றது. இத்தகைய சூப்பரான பைக் மாடலையே டிவிஎஸ் நிறுவனம் கஸ்டமைஸ் வாயிலாக நான்கு புதிய மாடல்களாக உருவாக்கி டிவிஎஸ் வெளியீடு செய்திருக்கின்றது. தற்போது கோவாவில் டிவிஎஸ்-இன் மோட்டோ சோல் (TVS Motosoul) நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த நிகழ்வின் வாயிலாக டிவிஎஸ் நிறுவனம் ரோனின் கஸ்டமைஸ் மாடல்கள் அனைத்தையும் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. ரோனின் எனும் ஒற்றை மாடலை கஸ்டமைஸ் செய்து இவை உருவாக்கப்பட்டு இருந்தாலும் பார்ப்பதற்கு முற்றிலும் மாறுபட்ட வாகனங்களாக அவை காட்சியளிக்கின்றன. உண்மையில் இவை ரோனின்தானா?, என சந்தேகிக்கும் அளவிற்கு அவை மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன. அதேவேளையில் மிகவும் கவர்ச்சிகரமான ஸ்டைலைக் கொண்டதாகவும் அவை இருக்கின்றன.

டிவிஎஸ் ரோனின்

இந்த நான்கு பைக்குகளின் உருவாக்க பணிகளை நான்கு வெவ்வேறு குழுக்கள் மேற்கொண்டிருக்கின்றன. ஜெர்மனைச் சேர்ந்த ஜேவிபி மோட்டோ (Germany, JvB Moto), இந்தோனேசியாவைச் சேர்ந்த ஸ்மோக்கட் கராஜ் (ndonesia, Smoked Garage), இந்தியாவைச் சேர்ந்த ராஜ்புத்னா கஸ்டம்ஸ் (3. India, Rajputana Customs) மற்றும் டிவிஎஸ் டிசைன் டீம் (4. TVS Design Team) ஆகியவையே இந்த பைக்குகளின் உருவாக்கத்தில் பங்களித்திருக்கின்றன.

இந்த பைக்குகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுமா என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஒருவேளை இவை விற்பனைக்கு வந்தால், இந்த வாகனம் சாலையில் பயணிக்கும்போது அனைவரின் கண்களும் இந்த வாகனங்களின் மீதே இருக்கும். அந்தளவிற்கு மிகவும் அழகிய கண் கவர் வாகனங்களாகவே இவை உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

டிவிஎஸ் ரோனின்

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் பார்வையாளர்களைச் சுண்டி இழுக்கும் மிகவும் அழகிய தோற்றத்தில் ரோனின் கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் ரூ. 1.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து டிவிஎஸ் ரோனின் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கிறது. ரோனின் எஸ்எஸ் (Ronin SS) (இதன் விலையையே முன்னதாக பார்த்தோம்), ரோனின் டிஎஸ் (Ronin DS) (விலை ரூ. 1,56,500), ரோனின் டிடி (Ronin TD) (விலை ரூ. 1,68,750) ஆகிய தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டிவிஎஸ் ரோனின்

இந்த பைக்கின் கவர்ச்சியான தோற்றத்திற்கு ஹெட்லைட், ஃப்யூவல் டேங்க், மல்டி ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல், வித்தியாசமான முகப்பைக் கொண்ட ஹெட்லைட் என அனைத்தும் காரணமாக இருக்கின்றன. மிக முக்கியமாக ஹெட்லைட்டும், ஒற்றை துண்டு இருக்கையுமே பைக்கிற்கு வேற லெவல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்குகின்றது.

இத்தகைய அழகிய லுக்கிற்கே கூடுதல் அழகை கஸ்டமைஸ் வாயிலாக டிவிஎஸ் சேர்த்திருக்கின்றது. ரோனின் பைக்கில் ஸ்மார்ட்எக்ஸோன்னெக்ட் இணைப்பு வசதிக் கொண்ட திரை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த திரையிலேயே குரல் கட்டளை வசதியும், ப்ளூடூத் இணைப்பு வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை வழங்கும் திறன் கொண்டதும்கூட.

டிவிஎஸ் ரோனின்

இதுதவிர, குறைவான எரிபொருள் இருக்கும் எனில் அதுகுறித்து எச்சரிக்கும் தொழில்நுட்பம், கிராஷ் அலர்ட், செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தியை அறியும் வசதி உள்ளிட்ட சிறப்புகளும் இந்த திரையில் வழங்கப்பட்டு உள்ளன. இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 225 சிசி மோட்டாரானது அதிகபட்சமாக 20 பிஎச்பி பவரையும், 20 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

5 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் வழங்கப்பட்டு உள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ ஆகும். இந்த உச்சபட்ச வேகத்தைக் கட்டுப்டுத்தும் விதமாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூவல் சேனல் ஏபிஸ் தேர்வுகள் ரோனின் பைக்கில் வழங்கப்படுகின்றது. இத்துடன் இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகளும் வழங்கப்படுகின்றன.

மோட்டோசோல் நிகழ்வு பற்றி சுவாரஷ்ய தகவல்:

கோவா வகதோர் பகுதியிலேயே மோட்டோ சோல் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறும். முதல் நாளை அல்டிமேட் பைக்கிங் திருவிழா என்று டிவிஎஸ் குறிப்பிடுகின்றது. இதன் அடிப்படையிலேயே ரோனின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த நிகழ்வின் மற்றுமொரு சிறப்பாக ஃபிளாட் டிராக் எக்ஸ்பீரியன்ஸ் (TVS Flat Track Experience) இருக்கின்றது. ரோனினை பிரத்யேகமாக ஓட்டி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றே ஃபிளாட் டிராக் எக்ஸ்பீரியன்ஸ் ஆகும். பார்வையாளர்கள் பதிவு செய்து ரோனின் பைக்கை ஓட்டி பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 3, 2023, 19:22 [IST]
English summary
Tvs showcased 4 custom build ronin
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X