சிட்டிக்குள் ஓட்டுனாலும் சரி, அவுட்டர்ல போனாலும் எந்த பைக் பெஸ்டா இருக்கும்? ஹன்டர் 350 vs டிவிஎஸ் ரோனின்

டிவிஎஸ் நிறுவனம் தனது ரோனின் பைக்கின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் விலையிலேயே இருக்கும் ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக்கிற்கும் இதற்குமான ஒப்பீட்டை காணலாம் வாருங்கள். இந்த தீபாவளிக்கு இந்த இரண்டு பைக்கில் எந்த பைக்கை வாங்கினால் பெஸ்ட் என்று விரிவாக காணலாம் வாருங்கள்.

டிவிஎஸ் நிறுவனம் இன்று தனது ரோனின் பைக்கின் ஸ்பெஷல் எடிசனை இந்திய மார்க்கெட்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த பைக் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் பலரை கவர்வதற்காக இந்த அறிமுகத்தை செய்துள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் டிவிஎஸ் ரோனின் பைக்கில் சில மேம்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

tvs ronin vs hunter 350

இது ரூபாய் 1.72 லட்சம் என்ற விலையில் அறிமுகம் ஆகியுள்ளது. கிட்டத்தட்ட ரெகுலர் வேரியன்டை விட ரூபாய் 3000 அதிகமான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இதே விலையில் விற்பனையாகும் ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக்குடன் இதை ஒப்பிட்டு காணலாம் வாருங்கள்.

டிவிஎஸ் ரோனின் ஸ்பெஷல் எடிசன் நிம்பூஸ் கிரே நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ரெட்ரோ மார்டன் ரோடுஸ்டர் பைக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பொழுது முதல் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த பைக்கிற்கு நல்ல பெயர் இருக்கிறது.

tvs ronin vs hunter 350

மக்கள் பலர் இந்த பைக்கை விரும்பி வாங்கி வந்த நிலையில் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்கில் புதிய கிராபிக்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கின் நிறத்தை பொருத்தவரை மூன்று கோடுகளில் நிறம் வழங்கப்பட்டுள்ளது. கிரே முதன்மையான கலராகவும் ஒயிட் இரண்டாம் பட்ச கலர் ஆகவும் இதற்கு கான்ட்ராஸ்ட்டான ரெட் கலர் ஸ்ட்ரிப் வடிவிலும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள சிவப்பு நிற ஸ்டிரிப் பைக்கின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது. இந்த பைக்கில் ஆர் லோகோ பேட்டன் மற்றும் வீல் ரிம்களில் டிவிஎஸ் ரோனின் பிராண்டிங் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் ஹெட்லைட்டும் டார்க் நிறத்தில் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் டார்க் நிறத்தில் சிறிய ஃப்ளைஸ்கிரீன், பீஸ்போக் இஎஃப்ஐ கவர் மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் போர்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

tvs ronin vs hunter 350

ஹன்டர் 350 பைக்கின் கலர் ஆப்ஷன்களை பொருத்தவரை ஃபேக்டரி பிளாக், ஃபேக்டரி சில்வர் ஆகிய ஆப்ஷன்களில் இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக்கின் முன்பக்கம் ஹலஜன் பல்ப் கொண்டே லைட்டிங் செட் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் ரோனின் பைக்கில் எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ரோனின் பைக்கில் மெக்கானிக்கலாக எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை இந்த பைக்கின் இன்ஜினை பொறுத்தவரை 225.9 சிசி சிங்கிள் சிலிண்டர் ஆயில் கூல்டு இன்ஜெக்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது அதிகபட்சமாக 20.1 பிஎச்பி பவரை 7750 ஆர்பிஎம்மிலும். 19.93 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜினாக இருக்கிறது இந்த இன்ஜின் பிரைஸ் ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் ஸ்லீப் மற்றும் அசிஸ்டன்ட் விற்பனைக்கு வருகிறது.

tvs ronin vs hunter 350

ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக்கை பொருத்தவரை 349.34 சிசி ஏர்/ ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.2 பிஎச்பி பவரை 6100 ஆர்பிஎம்மிலும், 27 என்எம் டார்க் திறனை 4000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் வெட் மல்டி பிளேட் கிளட்ச் தான் வழங்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ரோனின் பைக்கின் சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பக்கம் தலைகீழாக பொருத்தப்பட்ட 41 மிமீ தலைகீழாக பொருத்தப்பட்ட போர்க் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் ஃப்ரீ லோட் அட்ஜஸ்டபிள் அம்சத்துடன் கூடிய செவன் ஸ்டெப் மோனோ ஷாக் அப்சர்வர் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொறுத்தவரை இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

tvs ronin vs hunter 350

ராயல் என்ஃபல்டு ஹன்டர் 350 பைக்கை பொருத்தவவரை முன்பக்கம் 41 மிமீ டெலஸ்கோபிக் ஸ்போக் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் ட்வின் டியூப் எமுல்ஷன் ஷாக் அப்சர்பர் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு பைக்குகளை ஒப்பிட்டால் டிவிஎஸ் ரோனின் பைக்கில் அம்சங்கள் அதிகமாக இருக்கிறது. ஹன்டர் 350 பைக்கில் இன்ஜின் திறன் அதிகமாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரு பைக்கையும் பார்க்கும் போது டிவிஎஸ் நிறுவனத்தின் ரோனின் பைக்கில் ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது. ஆனால் இன்ஜின் திறன் 225 சிசி தான், ஹன்டர் பைக்கில் சில அம்சங்கள் இல்லை என்றாலும் 349 சிசி பைக் அது. இதனால் இந்த இரண்டையும் ஒப்பிட்டு உங்களுக்கு எது முக்கியம் என யோசித்து எதை வாங்கலாம் என நீங்கள் முடிவு செய்யுங்கள்

More from DriveSpark

Article Published On: Saturday, October 28, 2023, 14:03 [IST]
English summary
Tvs ronin royal enfield hunter 350 comparisons which to buy for diwali
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X