டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் அதிகரித்த மவுசு.. அடேயப்பானு வாயை பிளக்க வச்சுட்டாங்க!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரபலமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் (TVS iQube)-ம் ஒன்றாகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் மவுசு பன்மடங்கு அதிகரித்து இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதத்தில் விற்பனையில் அமோகமான வளர்ச்சியை அது கண்டிருக்கின்றது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் முழு விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரபலமான மற்றும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றே டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) ஆகும். இந்த ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே தன்னுடைய மின்சார இருசக்கர வாகன பிரிவின்கீழ் டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

TVS iqube

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே சென்ற மாதத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டிவிஎஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 6 மடங்கு அதிக விற்பனை வளர்ச்சியை பெற்றிருப்பதாக நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, நிறுவனத்தின் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிக விற்பனையைப் பெற்றிருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 4.02 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன.

அதுவே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பார்த்தோமேயானால் இதே நிறுவனத்தின் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் வெறும் 3.79 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகின. இந்த விற்பனை எண்ணிக்கையைக் காட்டிலும் மிக அமோகமான விற்பனை வளர்ச்சியையே இந்த வருட செப்டம்பரில் டிவிஎஸ் பெற்றிருக்கின்றது.

இதன் வாயிலாக டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு சற்றே அதிகரிக்கத் தொடங்கி இருப்பது துள்ளியமாக தெரிகின்றது. குறிப்பாக, உள்ளூர் சந்தையிலும் டிவிஎஸ் நிறுவனத்தின் வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. தற்போதைய 4.02 லட்சம் யூனிட்டுகள் சேல்ஸில் 3.86 லட்சம் யூனிட்டுகள் உள்ளூரில் விற்பனையாகியவை ஆகும்.

இதேபோல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததிலும் 8 சதவீதம் வளர்ச்சியை அந்நிறுவனம் கண்டிருக்கின்றது. ஆகையால், நிறுவனத்தின் மின்சார வாகனத்திற்கு மட்டுமல்ல பெட்ரோல் வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கி இருப்பது துள்ளியமாக தெரிகின்றது. நிறுவனத்தின் இந்த விற்பனை வளர்ச்சிக்கு டிவிஎஸ் நிறுவனத்தின் மீதிருக்கும் நம்பிக்கை ஒருபக்கம் இருக்கும் என்றால், மற்றொரு பக்கம் அதன் புதுமுக வரவுகள் இருக்கின்றன.

அவற்றின் வருகையினாலேயே இந்தியாவில் தற்போது விற்பனையில் புரட்சியைச் செய்துக் கொண்டிருக்கின்றது நம்ம ஊரு டிவிஎஸ் நிறுவனம். டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை துபாயில் வைத்து அறிமுகப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தன்னுடைய கிரியான் கான்செப்ட் மாடலை தழுவியே அது உருவாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிக ஸ்போர்ட்டி மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய வாகனமாக இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 2.50 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இது ஓர் முழு சார்ஜில் 140 கிமீ ரேஞ்ஜை தரும்.

மேலும், இதனால் வெறும் 2.6 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடும். இதன் டாப் ஸ்பீடு 105 கிலோ மீட்டர் ஆகும். இதில் அதிக ரேஞ்ஜை தருவதற்காக 4.44 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக எக்ஸ் மாடலை டிவிஎஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இருப்பினும், இப்போதும் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ஐக்யூப் இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 3, 2023, 13:10 [IST]
English summary
Tvs sales increased by 6 percentage in 2023 september
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+