தமிழ்நாடுன்னா சும்மாவா! வடநாட்டு கம்பெனி எல்லாம் கை கட்டி தான் நிக்கணும்! டிவிஎஸ் நிறுவனத்தின் இமாலய வளர்ச்சி!
டிவிஎஸ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் வாகன விற்பனையில் 31 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. டூவீலர் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் விற்பனை வளர்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை என்ன சிறப்பான விற்பனை வளர்ச்சிக்கான காரணம் என்ன என்ற விரிவான விற்பனை விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிசம்பர் மாதம் துவங்கிவிட்ட நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக தங்கள் நவம்பர் மாத விற்பனை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அதன்படி டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை விபரமும் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த நவம்பர் மாதம் இந்நிறுவனம் மொத்தம் 3,64,231 வாகனங்களை விற்பனை செய்துள்ளன.

இதே நிறுவனம் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 2,77,123 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது தற்போது அதைவிட 31 சதவீதம் விற்பனையை அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த அக்டோபர் மாத விற்பனையான 4,34,714 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும்போது கடந்த நவம்பர் மாதம் மிகப்பெரிய அளவில் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.
டிவிஎஸ் நிறுவனத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் தான் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமான விற்பனை நடந்துள்ளது. நாம் குறிப்பிடப்பட வேண்டியது ஒட்டுமொத்த விற்பனையில் டூவீலர் செக்மென்ட்டில் மட்டும் கடந்த நவம்பர் மாதம் 3,52,13 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதே செக்மெண்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2,63,642 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.

தற்போது 33.55 சதவீத விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது 88,461 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த அக்டோபர் மாத விற்பனையான எண்ணிக்கையை பார்க்கும் போது அப்பொழுது 4,20,610 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது 16.29 சதவீத விற்பனை வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டூவீலர் செக்மெண்டை பொருத்தவரை பைக்குகள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 1,72,836 என்ற எண்ணிக்கையில் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இது கடந்தாண்டு நவம்பர் மாதம் ஓட்டு மொத்தமாக விற்பனையான 1,45,006 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும்போது 19.19 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

அதுவே அக்டோபர் மாதம் விற்பனையான 2,01,965 என்ற விற்பனை எண்ணிக்கையை ஒப்பிடும்போது 14.42 சதவீதம் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 49.09 சதவீத விற்பனை பங்கை பைக்குகள் தான் வைத்துள்ளன. டிவிஎஸ் நிறுவனம் பைக் விற்பனையில் தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அடுத்ததாக ஸ்கூட்டர் செக்மென்டை பொறுத்தவரை கடந்த நவம்பர் மாதம் 1,35,749 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்தாண்டு நவம்பர் மாத விற்பனையான 83,679 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும்போது 62.23% விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இது கடந்த அக்டோபர் மாதம் விற்பனையான 1,65,135 என்ற எண்ணிக்கை ஒப்பிடும்போது 17.80 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தில் ஸ்கூட்டர் விற்பனை என்பது 38.55 சதவீதமான பங்கை வைத்துள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் ஐகியூப் என்ற ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏன் தற்போது விற்பனை செய்து வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் மட்டும் 16,782 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இதை கடந்தாண்டு நவம்பர் மாதம் 10,056 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது இது 66.89% விற்பனை வளர்ச்சியாகும்.
ஆனால் கடந்த அக்டோபர் மாதம் 20,153 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும்போது 16.73% கடந்த மாதம் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மொபட் விற்பனையிலும் கடந்தாண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடும்போது 24.49% விற்பனை வளர்ச்சியும் கடந்த அக்டோபர் மாத விற்பனையை ஒப்பிடும்போது 18.67% விற்பனை வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது.
3 வீலர் செக்மென்டை பொறுத்தவரை கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 12,128 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13,481 வாகனங்கள் விற்பனையாக இருந்தது. இது 10.04% விற்பனை வீழ்ச்சியாகும். இதுவே கடந்த அக்டோபர் மாத விற்பனையான 14,104 என்ற விற்பனையை எண்ணிக்கை பார்க்கும்போது 14.03% விற்பனை வீழ்ச்சியை இந்த செக்மென்ட் சந்தித்துள்ளது.
மூன்று சக்கர வாகன பிரிவில் ஒட்டுமொத்தமாக வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் உள்நாட்டு விற்பனையை மட்டும் கணக்கிட்டு பார்த்தால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் மட்டும் 2011 வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 1259 வாகனங்கள் மட்டுமே விற்பனையாக இருந்தன.
அந்த அக்டோபர் மாத விற்பனையான 1805 என்ற விற்பனை எண்ணிக்கை ஒப்பிட்டாலும் 11.41% விற்பனை வளர்ச்சியை தான் உள்நாட்டு விற்பனையை சந்தித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 10,011 3சக்கர வாகனங்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 12,022 வாகனங்களும் கடந்த அக்டோபர் மாதம் 12,099 வாகனங்களும் ஏற்றுமதி ஆகியிருந்தது. அதை ஒப்பிடும்போது முறையே 17.22% மற்றும் 17.74% என்ற வகையில் விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதம் விற்பனையில் சரிவை சந்தித்து இருந்தாலும் கடந்தாண்டு நவம்பர் மாதத்தை விட தற்போது நல்ல வகையில் வளர்ச்சியை சந்தித்துள்ளது. நவம்பர் மாத ஆண்டு வளர்ச்சி என்பது டிவிஎஸ் நிறுவனம் பெற்றிருக்கும் ஒட்டுமொத்த வளர்ச்சியை காட்டுகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் வளர்ச்சி பெறுவது நமக்கு பெருமையே.


Click it and Unblock the Notifications









