TVS Scooty Pep Plus விற்பனையில் இருந்து அகற்றமா?.. இந்தியாவை சோகத்தில் மூழ்க வைத்த தகவல்!
டிவிஎஸ் நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஸ்கூட்டி பெப் பிளஸ் (TVS Scooty Pep Plus) இருசக்கர வாகனத்தின் விற்பனையை விரைவில் நிறுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலின் உண்மை நிலவரம் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
டிவிஎஸ் (TVS) நிறுவனத்தின் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடல்களில் ஸ்கூட்டி பெப் பிளஸ் (Scooty Pep Plus)-ம் ஒன்று. இந்த வாகனத்தையே இந்தியாவில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் டிவிஎஸ் நிறுவனம் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதாவது, ஸ்கூட்டி பெப் பிளஸ் ஸ்கூட்டரை விற்பனையில் இருந்து அகற்றும் முயற்சியில் அது களமிறங்கி இருக்கின்றது.

இதன் வெளியேற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், புதிய பிஎஸ்6 கட்டம் 2 மாசு உமிழ்வு விதிகளே மிக முக்கியமான காரணம் என கூறப்படுகிறது. புதிய விதியால் அனைத்து புதிய வாகனங்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கின்றது. இந்த நிலை ஸ்கூட்டி பெப் பிளஸுக்கு சரிபட்டு வராது என்கிற கண்ணோட்டத்திலேயே அதை வெளியேற்றும் முயற்சியில் டிவிஎஸ் களமிறங்கி இருக்கின்றது.
அதாவது, புதிய விதிகளுக்கு ஏற்ப ஸ்கூட்டி பெப் பிளஸ்ஸை அப்கிரேட் செய்வதனால் அதன் விலை கணிசமாக உயரும். இது வாங்குபவர்களை சற்றே தயங்கச் செய்யும். ஆகையால், புதிய விதிகளுக்கு ஏற்ப ஸ்கூட்டி பெப் பிளஸ்ஸை அப்கிரேட் செய்வது எந்த வகையிலும் பலனளிக்காது என்கிற நோக்கிலேயே அதை வெளியேற்றும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றன.

இதன் அடிப்படையில், ஏற்கனவே ஸ்கூட்டி பெப் பிளஸ்ஸின் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும், இந்த இருசக்கர வாகனம் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்போதும் விற்பனைக்கு இருப்பதை நம்மால் காண முடிகின்றது. ஆகையால், டிவிஎஸ் என்ன திட்டத்தில் இருக்கின்றது என்பதை துள்ளியமாகக் கணிக்க முடியவில்லை.
இப்போது கிடைத்திருக்கும் தகவல்கள், ஸ்டாக் உள்ள வரை ஸ்கூட்டி பெப் பிளஸ்ஸை விற்பனைச் செய்யும் பொருட்டு, அதை வலைதளத்தில் இருந்து நிறுவனம் நீக்காமல் வைத்திருப்பதாக தெரிவிக்கின்றன. இதன் வெளியேற்றும் உண்மையில் இருசக்கர வாகன பிரியர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியான தகவலாக அமைந்திருக்கின்றது. அனைவருக்கும் ஏற்ற இருசக்கர வாகனமே டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் ஆகும்.
அனைத்து வயதினரும் பயன்படுத்த ஏதுவான இருசக்கர வாகனமாக ஸ்கூட்டி பெப் பிளஸ் இருக்கின்றது. குறிப்பாக, இல்ல தரசிகள் மற்றும் வயதனோர் இயக்குவதற்கு ஏற்ற இருசக்கர வாகனமாக இது காட்சியளிக்கின்றது. இதன் இலகு ரக எடையே இத்தகைய பயன்பாட்டிற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.
மார்க்கெட் சென்று வர, பிள்ளைகளை பள்ளிக் கூடம் அழைத்துச் செல்லுதல் மற்றும் வீட்டிற்கு கூட்டி வருவது போன்றவற்றிற்கு ஸ்கூட்டி பெப் பிளஸ் ஏற்ற டூ-வீலராக இருக்கின்றது. அதன் ஒட்டுமொத்த எடையே 98 கிலோ மட்டுமே ஆகும். இந்த இலகு ரக எடையும், சிம்பிளான உருவமுமே அனைவரும் பயன்படுத்த ஏதுவான டூ-வீலராக ஸ்கூட்டி பெப் பிளஸ்ஸை மாற்றி இருக்கின்றது.
இந்த வாகனம் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டாலும், ஸ்கூட்டி ஜெஸ்ட் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என கூறப்படுகின்றது. அதேவேளையில், ஸ்கூட்டி பெப் பிளஸ் வெளியேற்றம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் டிவிஎஸ் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த தகவல் வெகு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இந்தியாவில் ஒரு கால கட்டத்தில் அதிகம் விற்பனையாகிய ஸ்கூட்டரே டிவிஎஸ் ஸ்கூட்டி ஆகும். புதுமுகங்களின் வருகை அதிகரித்ததனால் இதன் விற்பனைக் கணிசமாக குறைந்துக் காணப்படுகின்றது. இந்த நிலையில் அதன் விலை உயரும் எனில் மிகப் பெரிய சிக்கல் அதன் விற்பனையில் ஏற்படுத்தும். இதன் விற்பனையை முன்பு போல் இரட்டிப்பாக்க வேண்டும் எனில் ஸ்கூட்டியை மின்சார வெர்ஷனில், குறைவான விலையில் கொண்டு வந்தால் மட்டுமே முடியும்.


Click it and Unblock the Notifications








