கலப்பட பெட்ரோலிலும் இயங்கும் இன்ஜின்! டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ஃபிளக்ஸ்-ஃப்யூயல் பைக் அறிமுகம்!

டிவிஎஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் தனது அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி ஃபிளக்ஸ்-ஃப்யூயல் பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் உள்ள அம்சங்கள் என்ன? ஃபிளக்ஸ்-ஃப்யூயல் என்றால் என்ன? இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்

இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ 2023 பரபரப்பாக நடந்து வருகிறது. பொதுமக்கள் பலர் இந்த கண்காட்சியைக் காண நொய்டாவை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இந்த எகஸ்போவில் ஏராளமான வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் மிக முக்கியமாகப் பல ஃபிளக்ஸ்-ஃப்யூயல் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் குறித்துத் தான் காணப்போகிறோம்.

கலப்பட பெட்ரோலிலும் இயங்கும் இன்ஜின்! டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ஃபிளக்ஸ்-ஃப்யூயல் பைக் அறிமுகம்!

டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி பைக் மிகவும் பிரபலமான பைக், குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்து இழுத்த ஒரு பைக். இந்த பைக்கை வாங்க பலர் தவம் கிடக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த பைக்கின் பிளக்ஸி ஃப்யூயல் இன்ஜின் பொருத்தப்பட்ட வெர்ஷனைதான் டிவிஎஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபிளக்ஸ்-ஃப்யூயல் என்றால் தற்போது அரசு பெட்ரோல் தயாரிக்கப்படும் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது. இதனால் இந்தியா கச்சா எண்ணெய்க்கு வெளிநாடுகளைச் சார்ந்தே இருக்க வேண்டியது உள்ளது. இதனால் பெட்ரோலுடன் எத்தனாலை கலக்கும் திட்டத்தை இந்திய அரசு எடுத்துள்ளது. இப்படியாக எத்தனால் கலந்த பெட்ரோல் தான் ஃபிளக்ஸ்-ஃப்யூயல் என அழைக்கப்படுகிறது.

கலப்பட பெட்ரோலிலும் இயங்கும் இன்ஜின்! டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ஃபிளக்ஸ்-ஃப்யூயல் பைக் அறிமுகம்!

எதிர்காலத்தில் இந்திய அரசு பெட்ரோலில் 80 சதவீதம் வரை எத்தனாலை கலக்க முடிவு செய்துள்ளது. ஃபிளக்ஸ்- ஃப்யூலுக்கு ஏற்றவாறு வாகனத்தின் இன்ஜினை ட்யூன் செய்ய வேண்டும். அப்படியாக ட்யூன் செய்யப்பட்ட இன்ஜின் உடன் டிவிஎஸ் நிறுவனம் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பைக்கில் அதே பெட்ரோல் பைக்கில் உள்ள இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 159.7 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 17.55 பிஎஸ் பவரையும், 14.73 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்நிறுவனம் தனது முதல் ஃபிளக்ஸ்-ஃப்யூயல் வாகனமாக ஆர்டிஆர் 200 எஃப்ஐ இ100 என்ற பைக்கை 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

கலப்பட பெட்ரோலிலும் இயங்கும் இன்ஜின்! டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ஃபிளக்ஸ்-ஃப்யூயல் பைக் அறிமுகம்!

தற்போது ஆர்டிஆர் 160 4வி பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் பார்க்க கிட்டதட்ட பெட்ரோல் பைக்கின் லுக்கிலேயே இருக்கிறது. ஆனால் பெட்ரோல் பைக்கிலிருந்து இதை வேறுபடுத்திக்காட்ட ஆங்காங்கே பச்சை நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த பைக்கில் உள்ள இன்ஜின் 20-85 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்டது. இந்த பைக் குறித்த உங்கள் கருத்துகளை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 14, 2023, 10:33 [IST]
English summary
TVS Shocased RTR 160 4V Flex Fuel Bike in auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+