துபாயை அலற விட போகும் தமிழக நிறுவனம்.. நாளகூட குறிச்சிட்டாங்க.. அந்த வாகனம் களமிறங்க போவது உறுதி!
தமிழகத்தை மையமாகக் கொண்டு வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் டிவிஎஸ் மோட்டார் (TVS Motor)-ம் ஒன்று. இந்த நிறுவனம் இப்போதைய நிலவரப்படி ஐக்யூப் (iQube) எனும் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலை மட்டுமே இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையை விரைவிலேயே மாற்றப் போகிறது, டிவிஎஸ் நிறுவனம். ஆமாங்க, இந்த நிறுவனம் சீக்கிரமே புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஒன்றை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதற்கான நாளைகூட அந்நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. வரும் ஆகஸ்டு 23 ஆம் தேதி அன்றே புதுமு மின்சார இருசக்கர வாகனத்தை டிவிஎஸ் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

துபாயில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாகவே அந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, டிவிஎஸ் நிறுவம் கிரியான் எனும் கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே துபாயில் வெளியீடு செய்ய இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
அதாவது, இப்போதைக்கு வரும் ஆகஸ்டு 23 ஆம் தேதி அன்று ஓர் புதிய வாகனத்தை துபாயில் அறிமுகம் செய்ய இருப்பதை மட்டுமே உறுதி செய்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக டீசர் படம் ஒன்றையம் அது வெளியிட்டு இருக்கின்றது. இதுதவிர்த்து வேறு எந்த தகவலையும் அது அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இருப்பினும், இந்த வாகனம் பற்றிய தகவல்கள் மேலோட்டாமாக வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. கிரியான் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய டிவிஎஸ் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் பிஎம்டபிள்யூ சிஇ 02 கான்செப்ட் மாடலின் சிறப்பம்சங்கள் பலவற்றைக் காண முடியும் என கூறப்படுகின்றது.
ஆகையால், இந்த வாகனத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. டிவிஎஸ் நிறுவனம் இந்த கிரியான் கான்செப்ட் மாடலை 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே முதன் முதலில் காட்சிப்படுத்தியது. இந்த நிலையிலேயே இப்போதே இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் டிவிஎஸ் களமிறங்கி இருக்கின்றது.
இது ஓர் அதிக செயல் திறன்மிக்க இருசக்கர வாகனம் ஆகும். அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்கள் நிறைந்ததாகவும் இதனை டிவிஎஸ் வடிவமைத்து இருக்கின்றது. மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் டிவிஎஸ் ஐக்யூப்-ஐக் காட்டிலும் அதிக பிரீமியம் வசதிகள் நிறைந்ததாகவும் இது இருக்கும் என கூறப்படுகின்றது.
ஆகையால், மின்சார இருசக்க வாகன பிரியர்களுக்கு இதன் வருகை மிகப் பெரிய விருந்தளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதி செய்யும் விதமாக கிரியானை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 11.76 கிலோவாட் பவரை வெளியேற்றும் மின்சார மோட்டாரைப் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகுந்த த்ரில்லான ரைடிங் அனுபவத்தை பெற இந்த மோட்டாரே போதுமானது ஆகும். மேலும், வெறும் 5.1 செகண்டுகளிலேயே இந்த ஸ்கூட்டர் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிவிடுமாம். ஆகையால், உண்மையிலேயே இந்த வாகனத்தின் வருகை இருசக்கர வாகன காதலர்களுக்கு மிகப் பெரிய வரபிரசாதமாக அமையும் என நம்பப்படுகின்றது. இந்த வாகனம் ஓர் முழு சார்ஜில் 100க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜை வழங்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன பிரிவில் போட்டி பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, ஸ்கூட்டர் பிரிவில் ஓலா, ஏத்தர் ஆகிய நிறுவனங்கள் மிகப் பெரிய ஆளுகையைச் செய்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே இவர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக டிவிஎஸ் புதிய இ-ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








