எலைட் மக்களுக்கான புதிய டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! விலை எவ்வளவு தெரியுமா? துபாயில் அறிமுகம்!!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை துபாயில் இருந்து அறிமுகம் செய்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர், முன்பதிவுகள் மற்றும் டெலிவிரி துவங்கும் தேதி உள்பட இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம் வாங்க.

எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என்று ஆன பின், இந்த விஷயத்தில் தீவிரமாக இருக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்று டிவிஎஸ் மோட்டார். தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டாரில் இருந்து ஏற்கனவே ஐக்யூப் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் இருக்கும் நிலையில், தனது 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவர டிவிஎஸ் தயாராகி வருவதாக சமீப மாதங்களாக கூறிவந்தோம்.

tvs x electric scooter launched

இதற்கிடையில், டிவிஎஸ் மோட்டாரின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 23ஆம் தேதி துபாயில் இருந்து உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதிய டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் துபாயில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. டிவிஎஸ் மோட்டாரின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் 'டிவிஎஸ் எக்ஸ்' ஆகும். இந்திய மார்க்கெட் உள்பட உலகளாவிய தயாரிப்பாக எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டாரின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் ப்ரீ-புக்கிங் செய்து கொள்ளலாம். ஆனால் தற்போதைக்கு பெங்களூரில் மட்டுமே புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. பெங்களூர் கஸ்டமர்களுக்கு டிவிஎஸ் எக்ஸ் ஸ்கூட்டர் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து டெலிவிரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் எக்ஸ் ஸ்கூட்டரின் பெங்களூர் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.2,49,900 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரை தொடர்ந்து, 2024 மார்ச் மாதத்திற்கு உள்ளாக மேலும் 15 நகரங்களில் டிவிஎஸ் எக்ஸ் விற்பனைக்கு வந்துவிடும்.

ஸிலிட்டன் (XLETON) என்ற பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள டிவிஎஸ் எக்ஸ் ஸ்கூட்டரில் புதுமையான 'ரேம் ஏர் கூல்டு மோட்டார்' பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்சமயம் எந்தவொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் இப்படியொரு எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்கூட்டர் இயங்கும் சூழலை பொறுத்து இந்த மோட்டார் தன்னிச்சையாக தன்னை குளிர்வித்து கொள்ளும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

tvs x electric scooter launched

டிவிஎஸ் எக்ஸ் ஸ்கூட்டரின் மற்றொரு சிறப்பம்சம், இதன் 'எக்ஸ்-டில்ட்' ஹேண்டில்பார் ஆகும். பெயருக்கு ஏற்ப இந்த ஹேண்டில்பார் 'X' வடிவில் உள்ளது. இந்த ஹேண்டில்பாருக்கு மத்தியில் 10.25 இன்ச் பனோராமிக் டிஎஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவை ரைடர் தனது சவுகரியத்திற்கும், பார்வைக்கும் ஏற்ப வெவ்வேறான கோணங்களில் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள முடியும்.

எச்.எம்.ஐ யூஸர் எக்ஸ்பிரீயன்ஸ் டேல்ஸ் என்ற மென்பொருளில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த டிஎஃப்டி டிஸ்பிளேவை மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் மற்ற வாகனங்களுடன் கனெக்ட் செய்துக் கொள்ள முடியும். இந்த திரையின் வாயிலாக நாவ் புரோ என்கிற பெயரில் நவீன வழிக்காட்டியையும் பெறலாம். இதுதவிர ரியல் டைம், பேட்டரி சார்ஜ் அளவு போன்ற வழக்கமான தகவல்களையும் இந்த திரையின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

அத்துடன், உங்களுக்கு பிடித்தமான இடங்களையும் உங்கள் மொபைல் போன் உதவியுடன் இந்த திரையின் வழியாக ஸ்கூட்டர் காட்டும். சார்ஜிங் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளையும் திரையின் வாயிலாகவே அடையாளம் காணலாம். இவை அனைத்தும் ஸ்கூட்டரை இயக்கும்போது தேவைப்படும் விபரங்கள் ஆகும். மறுப்பக்கம், பொழுதுப்போக்கிற்காக பிளேடெக் என்ற தொழிற்நுட்பத்தை டிவிஎஸ் எக்ஸ் ஸ்கூட்டரின் டிஸ்பிளே கொண்டுள்ளது.

tvs x electric scooter launched

இந்த பிளேடெக் தொழிற்நுட்பம் ஆனது ஸ்கூட்டரின் டிஸ்பிளேவில் மொபைல் போனை உங்கள் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும். இவற்றுடன், ஸ்மார்ட் ஸீல்ட் என்ற அம்சத்தையும் இந்த டிஸ்பிளேவின் வாயிலாக ஸ்கூட்டர் நமக்கு வழங்கும். ஸ்மார்ட் ஸீல்ட் ஆனது அதிவேகம், எஸ்ஓஎஸ் போன்ற எச்சரிக்கைகளையும், ஸ்கூட்டர் விபத்துக்கு உள்ளானது/ ஸ்கூட்டர் திருடுப் போனது உள்ளிட்ட விஷயங்களையும் உரிமையாளரின் மொபைலுக்கு அனுப்பிவிடும்.

டிவிஎஸ் எல்இடி டெக் 2.0 என்ற தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஹெட்லைட் அமைப்பில் மொத்தம் 4 விளக்குகள் உள்ளன. இந்த 4 விளக்குகளும் ஒளிர துவங்கும் முன்பு ஒவ்வொரு விதமான சத்தங்களை எழுப்பும் என டிவிஎஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஸிலிட்டன் பிளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டதன் காரணமாக மற்ற ஸ்கூட்டர்களை காட்டிலும் 2.5 மடங்கு கூடுதல் விரைப்பானதாக எக்ஸ் ஸ்கூட்டர் இருக்கும் என கூறும் டிவிஎஸ், இதன் காரணமாக ஸ்டேரிங் கண்ட்ரோலும் மிக துல்லியமாக இருக்கும் என கூறுகிறது.

பயணிகளின் பாதுகாப்பிற்கு சிலிக்கான்-சார்ந்த மூலப் பொருட்களால் ஆன டயர்கள், சிறப்பான பேலன்ஸை வழங்கக்கூடிய இருக்கை அமைப்பு, ஸ்மார்ட் ஹில் ஹோல்டு கண்ட்ரோல், நெக்ஸ்ட் ஜென்ரேஷன் ஏபிஎஸ், இண்டெலிஜண்ட் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 0-இல் இருந்து 40kmph வேகத்தை வெறும் 2.6 வினாடிகளில் எட்டிவிட முடியும். ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 105kmph ஆகும். ஸ்டீல்த், ஸ்ட்ரைட், ஸானிக் என 3 விதமான ரைடிங் மோட்கள் டிவிஎஸ் எக்ஸ் ஸ்கூட்டரில் உள்ளன.

tvs x electric scooter launched

நீண்ட நேரம் ஸ்கூட்டரை இயக்கினாலும் இயக்க ஆற்றல் தடைப்படாமல் கிடைக்கவும், ஸ்கூட்டர் வெப்பமாகுவதை தடுக்கவும் NATMAC (நேச்சுரலி அஸ்பிரேட்டட் தெர்மல் மேனெஜ்மெண்ட் ஆஃப் எனர்ஜி கண்ட்ரோல்) என்ற மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தை கண்டுப்பிடித்து புதிய எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிவிஎஸ் பயன்படுத்தி உள்ளது. புதிய டிவிஎஸ் எக்ஸ் ஸ்கூட்டரில் 4.4kWh பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளது. இன்ஸ்டண்ட்டாக 300 ஆம்பியர் மின்சாரத்தை வழங்கும் திறன் கொண்டது இந்த பேட்டரி.

டிவிஎஸ் எக்ஸ் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 140கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என கூறியுள்ளது டிவிஎஸ் நிறுவனம். இந்த ரைடிங் ரேஞ்ச் ஆனது இந்திய டிரைவிங் கண்டிஷனில் பெறப்பட்டது ஆகும். இந்த பேட்டரியை கொண்டிருக்கும் ஸ்கூட்டரின் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் அதிகப்பட்சமாக 9.3 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலையும், 14.7 என்எம் வரையிலான டார்க் திறனையும் பெறலாம்.

பேட்டரியை சார்ஜ் செய்தவற்கு ஸ்மார்ட் எக்ஸ் ஹோம் சார்ஜிங் வசதியை எக்ஸ் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு டிவிஎஸ் வழங்க உள்ளது. இதன்படி, 3 கிலோவாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் 950 வாட்ஸ் ரெகுலர் சார்ஜர் தேர்வுகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். இதில் 3 கிலோவாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜரில் 0-50% சார்ஜை 1 மணிநேரத்திற்கு உள்ளாக நிரப்பி விடலாம். அதுவே, 950 வாட்ஸ் ரெகுலர் சார்ஜரில் 0-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்புவதற்கு 3 மணிநேரம் 40 நிமிடங்கள் தேவைப்படும்.

சஸ்பென்ஷனுக்கு ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரின் 12-இன்ச் அலாய் சக்கரங்கள் பிரத்யேகமான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் முன் டயர் 100/80 என்ற அளவிலும், பின் டயர் 110/80 என்ற அளவிலும் உள்ளன. முன் சக்கரத்தில் 220மிமீ-இலும், பின் சக்கரத்தில் 195மிமீ-இலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐக்யூப் மூலம் இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் ஓர் வலுவான இடத்தை பிடித்துவிட்ட டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், எக்ஸ் ஸ்கூட்டர் மூலமாக எலைட் மக்களையும் கவர தயாராகி உள்ளது. இதற்கேற்ப எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பார்த்து பார்த்து வடிவமைத்துள்ள டிவிஎஸ், மென்பொருள் தொழிற்நுட்பங்களையும், இயந்திர பாகங்களையும் அதற்கேற்ப கையாண்டு உள்ளது. டிவிஎஸ்-இன் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 23, 2023, 23:59 [IST]
English summary
Tvs x electric scooter launched price features range details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X