இந்த வீடியோவ பார்த்த ஓலா, ஏத்தர் எல்லாம் வேணாம் இந்த ஸ்கூட்டர்தான் வேணும்னு அடம் பிடிப்பீங்க!

டிவிஎஸ் நிறுவனம் தனது எக்ஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது மார்க்கெட்டில் உள்ள ஓலா, ஏத்தர் ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது. முற்றிலும் புதிய வடிவமைப்புடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று டிவிஎஸ் எக்ஸ் ஸ்கூட்டரை மக்கள் அதிகம் விரும்புவார்கள் என அந்நிறுவனம் நம்புகிறது.

இந்நிலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்படி தயாராகிறது என்பதை பார்ப்பதற்காக ஓசூரில் உள்ள டிவிஎஸ் ஆலைக்கு எங்களை நிறுவனம் அழைத்திருந்தது. அதன் பெயரில் டிரைவ்ஸ்பார்க் குழுவும் டிவிஎஸ் ஆலைக்கு சென்று இந்த டிவிஎஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்த்தோம். எங்களது ரைடிங் அனுபவத்தை வீடியோவாக உங்களுடன் பகிர்ந்து உள்ளோம். இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த டிவிஎஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பொறுத்தவரை 4.4 கிலோவாட்ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியில் இந்த ஸ்கூட்டர் சிங்கிள் சார்ஜில் 140கி.மீ வரை செல்லும் திறன் கொண்டதாக அந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய 950வாட்ஸ் போர்டபிள் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இது 0-80% சார்ஜை 4.5மணி நேரத்தில் ஏற்றுகிறது. இதற்கு ஆப்ஷனாக 3 கிலோ வாட் ஃபாஸ்ட் சார்ஜரும் இருக்கிறது.

tvs x video review in tamil

மார்க்கெட்டில் ஏத்தர் ஓலா போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் நிறுவனங்கள் பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில் கிட்டத்தட்ட டிவிஎஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்பம், ரேஞ்ச், பேட்டரி அளவு, உள்ள பல அம்சங்கள் ஒரே மாதிரியாக கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தான் அந்நிறுவனங்களும் விற்பனை செய்கின்றன. ஆனால் அந்நிறுவனத்தின் விலை டிவிஎஸ் எக்ஸ் ஸ்கூட்டரை விட 1-1.5லட்சம் வரை விலை குறைவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, October 30, 2023, 14:39 [IST]
English summary
Tvs x electric scooter video review in tamil
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+