டிவிஎஸ் எக்ஸ்எல் இவி வெர்ஷனில் வரப்போகுது! இது தான் விலைன்னா வீட்டுக்கு ஒரு வண்டியாச்சும் வாங்கிடுவாங்க!

டிவிஎஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களில் விரிவுபடுத்தும் நோக்கில் தற்போது டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த காப்புரிமை வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய டூவீலர் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தமிழகத்தின் ஓசூர் பகுதியில் ஆலையை அமைத்து வாகனங்களைத் தயார் செய்து விற்பனைக்கு இந்தியா முழுவதும் அனுப்பி வருகிறது. டிவிஎஸ் நிறுவனங்களின் வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரும் வரவேற்பும் இருக்கிறது.

TVS XL Electric

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டிவிஎஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் தன் காலடித் தடத்தைப் பதிப்பதற்காக முடிவு செய்து டிவிஎஸ் ஐகியூப் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாகக் களத்தில் சிறப்பான விற்பனையைப் பெற்று வருகிறது.

இதன் மூலம் டிவிஎஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் வெற்றியைக் காணுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதையடுத்து தற்போது டிவிஎஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களின் அணிவகுப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக புதிதாக ஒரு எலெக்ட்ரிக் டூவீலரை களம் இறக்க முடிவு செய்தது.

TVS XL Electric

இதற்காக டிவிஎஸ் நிறுவனம் கையில் எடுத்த விஷயம் தான் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட். இந்த மொபட் பெட்ரோல் வெர்ஷனவில் இந்தியாவில் மிகப்பெரிய புரட்சியைச் செய்தது எனச் சொல்லலாம்.குறிப்பாகக் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் பலர் தங்கள் முதல் டூவீலராக இந்த டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தையே வாங்கினார்.

டூவீலர் ஓட்டத் தெரியாத பலர் கூட இந்த டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தைத் தான் ஒட்டி பழகினர். இந்நிலையில் டிவிஎஸ் நிறுவனம் இந்த எக்ஸ்எல் மொபட்டின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்க தற்போது முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த வடிவமைப்பை அந்நிறுவனம் டிசைனாக உருவாக்கி அது குறித்த காப்புரிமைக்கு விண்ணப்பம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

TVS XL Electric

இந்த காப்புரிமை புகைப்படம் பைக்வாலே தளத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் ஆட்டோமொபைல் பிரியர்கள் பரபரப்பாகப் பேசி வருகின்றனர். இந்த டிவிஎஸ் எக்ஸ்எல் எலெக்ட்ரிக் மொட்டில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்ற பேச்சு தற்போது அதிக அளவில் இருக்கிறது.

இந்த டிவிஎஸ் எக்ஸ்எல் எலெக்ட்ரிக் மொட் வெர்ஷனை பொருத்தவரை சிம்பிளான டிசைன், உறுதியான பிரேம், வட்டமான ஹெட்லைட், ஸ்பிலிட் சீ,ட் டியூப்ளர் கிராப் ரெயில், என அனைத்தும் பெட்ரோல் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்-ல் உள்ள அதே டிசைன் தான் இதிலும் இருக்கிறது.

முக்கியமான மாற்றம் என்று சொல்ல வேண்டுமானால் பேட்டரி பேக். இது சமமான எடை பகிர்வுடன் வாகனம் ஸ்டேபிளாக செல்லும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெல்ட் டிரைவ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது டிசைனில் தெரிகிறது. இதுபோக முன் பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க், பின்பக்கம் இரண்டு ஸ்ப்ரிங் ஆகியவை சஸ்பென்சன்களாக பழைய டிசைனில் உள்ளது போல அப்படியே எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.

வீலை பொறுத்தவரை இரண்டு பக்கமும் ஸ்போக் வீல் தான் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேக்குகளும் இரண்டு பக்கமும் டிரம் பிரேக்குகள் தான் வழங்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள டிவிஎஸ் எக்ஸ்எல் பெட்ரோல் மொபட்டில் 99.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்கூலர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 4.3 பிஎச்பி பவரையும் 6.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மொத்தமே 86 கிலோ எடை கொண்ட இந்த பெட்ரோல் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபெட் 130 கிலோ எடையைத் தூக்கிச் செல்லும் திறன் கொண்டது. ஆனால் டிவிஎஸ் எக்ஸ்எல் எலெக்ட்ரிக் மொபட்டின் எடை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இதற்குக் காரணம் அதில் பேட்டரி பயன்படுத்துவது அதன் எடை அதிகரித்துவிடும். ஆனால் அது உணரக்கூடிய அளவுக்கு மிக அதிகமாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எலெக்ட்ரிக் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட் பெட்ரோல் வெர்ஷனில் உள்ளது போல அதே பிராக்டிகல் அம்சங்களுடனும் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய அளவிலான ஆப்ஷன்களுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிக எடை கொண்ட சரக்குகளை ஏற்றிச் செல்ல வசதியாக இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த மொபட்டின் அறிமுகம் குறித்து டிவிஎஸ் நிறுவனம் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. லீக்கான காப்புரிமை குறித்த புகைப்படங்களை வைத்துத் தான் இவ்வளவு தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. இந்த மொபட்டை உருவாக்கும் முயற்சியில் தான் தற்போது டிவிஎஸ் நிறுவனம் இருக்கிறது. அடுத்த ஆண்டு இது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி விற்பனைக்கு வரும்போது இது கைனடிக் இவி லூனா என்ற அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள மொபட்டிற்கு போட்டியாகக் களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் அதிகரித்து வரும் நிலையில் டிவிஎஸ் எக்ஸ்எல் எலெக்ட்ரிக் மொபட் வருகை நிச்சயம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்.

இந்த டிவிஎஸ் எக்ஸ்எல் எலெக்ட்ரிக் மொபட்டின் விலையைப் பொருத்தவரை தற்போது ரூ63 ஆயிரம் என்ற ஆன்-ரோடு விலையில் டிஎஸ் எக்ஸ் 100 பெட்ரோல் மொபட் விற்பனையாகி வருகிறது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் கிட்டத்தட்ட அதே விலையில் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி கொள்ளளவைப் பொருத்து விலையில் சிறிது மாற்றங்கள் வரலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் காப்புரிமைக்காக வடிவமைத்துள்ள இந்த எலெக்ட்ரிக் மொபடிற்கு டிவிஎஸ் எக்ஸ்எல் என்று தான் பெயர் வைக்கும் எனக் கூற முடியாது அதன் பெயரைக் கூட டிவிஎஸ் நிறுவனம் மாற்றலாம். இருந்தாலும் பெட்ரோல் இன்ஜின் கொண்ட எக்ஸ்எல் மொப்பட்டும் இதுவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. இதன் விலை குறைவாக இருந்தால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

Source: Bikewale

More from DriveSpark

Article Published On: Friday, July 28, 2023, 10:57 [IST]
English summary
Tvs xl electric moped under wraps expected price and launch details
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X