தமிழ்நாட்டு டிவிஎஸ் வாகனங்களுக்கு நாடு முழுவதும் அதிகரிக்கும் வரவேற்பு!! ஹீரோ, ஹோண்டாவின் விற்பனை சரிவு

நம் இந்தியாவில் கார்களை காட்டிலும் இருசக்கர வாகனங்களை வாங்குவோரே அதிகம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்படிப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த டாப்-5 நிறுவனங்கள் குறித்த விபரங்கள் அவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை உடன் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் விற்பனை என்றாலே ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். ஏனெனில், ஸ்பிளெண்டர் என்ற அதிக பேர் விரும்பக்கூடிய தயாரிப்பை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்கிறது. ஸ்பிளெண்டர் மட்டுமின்றி, எச்.எஃப் டீலக்ஸ் போன்ற பிரபலமான பைக்குகளும், ஸ்கூட்டர்களும் ஹீரோ பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.

two wheeler brands sales report

கடந்த 2023 ஜூன் மாதத்தில் ஹீரோ பிராண்டில் இருந்து மொத்தம் 4,22,757 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த அளவிற்கு கடந்த மாதத்தில் வேறெந்த நிறுவனமும் 2-வீலர்களை விற்பனை செய்யவில்லை. இருப்பினும், 2022 ஜூன் மாதத்தில் இதனை காட்டிலும் 40,453 அதிகமாக 4,63,210 ஹீரோ 2-வீலர்கள் சந்தையில் விற்பனையாகி இருந்தன.

இந்த வகையில் ஹீரோ 2-வீலர்களின் விற்பனை ஆனது கடந்த ஜூன் மாதத்தில் 8.73% குறைந்துள்ளது. ஹீரோ மோட்டோகார்பிற்கு அடுத்து 2வது இடத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் உள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நம்பர் ஒன் ஸ்கூட்டரான ஆக்டிவாவை விற்பனை செய்யும் ஹோண்டா நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் 3,02,756 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

two wheeler brands sales report

ஆனால் 2022 ஜூன் மாதத்தில் 3,55,560 இருசக்கர வாகனங்களை ஹோண்டா இந்தியாவில் விற்பனை செய்திருந்தது. இதனை ஒப்பிடுகையில், கடந்த 2023 ஜூன் மாதத்தில் சுமார் 52,804 இருசக்கர வாகனங்களை குறைவாக ஹோண்டா விற்பனை செய்துள்ளது. 3வது இடத்தில் நமது தமிழக 2-வீலர் நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் 2,35,833 இருசக்கர வாகனங்களின் விற்பனை உடன் உள்ளது.

டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை சமீப காலமாக வேகமாக அதிகரித்து வருகிறது. ஏனெனில் 2022 ஜூன் மாதத்தில் வெறும் 1,93,090 இருசக்கர வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் டிவிஎஸ் 2-வீலர்களின் விற்பனை 22.14% அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் 4வது இடத்தை வழக்கம்போல் பஜாஜ் ஆட்டோ தனதாக்கியுள்ளது. பஜாஜில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் 1,66,292 இருசக்கர வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன.

two wheeler brands sales report

ஆனால் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெறும் 1,25,083 இருசக்கர வாகனங்களின் விற்பனையை மட்டுமே பஜாஜ் சந்தையில் பதிவு செய்திருந்தது. இந்த வகையில் பஜாஜின் விற்பனை 32.95% அதிகரித்துள்ளது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட 5வது இடத்தில் உள்ள ராயல் என்பீல்டின் விற்பனை வளர்ச்சியே நம்மை மிகவும் ஆச்சிரியப்படுத்துகிறது. ஏனெனில் 2022 ஜூனில் 50,267 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்த ராயல் என்பீல்டு கடந்த ஜூனில் 67,495 பைக்குகளை விற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஹீரோ மற்றும் ஹோண்டாவின் விறபனை குறைந்துள்ளது என்றாலும், டிவிஎஸ், பஜாஜ் மற்றும் ராயல் என்பீல்டின் விற்பனை அதிகரித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதில் இருந்து ஹீரோ, ஹோண்டாவை தேடி செல்லும் வாடிக்கையாளர்களுள் சிலர் மற்ற டாப் பிராண்ட்களையும் கவனிக்க ஆரம்பித்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 5, 2023, 11:40 [IST]
English summary
Two wheeler brands sales report 2023 june
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X