ஒரே மாசத்துல இப்படி ஒரு சரிவா? டிசம்பரில் மந்தமான 2 வீலர் விற்பனை!

இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் டூவீலர் மற்றும் எலெக்ட்ரிக் டூ-வீலர் விற்பனை முறையே 39 சதவீதம் மற்றம் 16 சதவீதம் சரிவடைந்துள்ளது. தற்போது எலெக்ட்ரிக் வாகன விற்பனை உச்சத்தையடைந்துள்ள நிலையில் தீடீரென ஏற்பட்ட இந்த சரிவு ஆட்டோமொபைல் விற்பனையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வாகன் இணையதள தகவலின் படி கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் மொத்தம் 64,346 எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தையை மாதங்களான அக்டோபர் மற்றும் நவம்பர் மாத பதிவுகளை கணக்கிடும்போது 16 சதவீதம் குறைவாகும். நவம்பர் மாதம் மட்டும் மொத்தம் 75,000 எலெக்ட்ரிக் டூவீலர்கள் பதிவு செய்யப்பட்டன.

ஒரே மாசத்துல இப்படி ஒரு சரிவா? டிசம்பரில் மந்தமான 2 வீலர் விற்பனை!

கடந்த டிசம்பர் மாதம் எலெக்ட்ரிக் டூவீலர் மட்டுமல்ல ஒட்டு மொத்தமாகவே டூவீலர் செக்மெண்டே சரிவை சந்தித்தது. டூவீலர் செக்மெண்டில் 39 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது. அதை ஒப்பிடும் போது எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் சரிவு குறைவு தான். இந்த திடீர் விற்பனை சரிவு ஒன்றும் புதிதல்ல ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் விற்பனையில் இந்த சரிவு ஏற்படத்தான் செய்கிறது.

மக்கள் பலர் வருட கடைசியில் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு பதிலாக வாகனங்களை புத்தாண்டிற்கு பிறகு வாகனங்களில் சில ஆண்டுகள் கழித்து வாகனத்தின் வயதை வெறும் வாங்கிய ஆண்டை வைத்து கணக்கிடும் போது வயது குறைவாக இருக்கும் என்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பாக டூவீலர் செக்மெண்டில் டிசம்பர் மாதம் குறைவான வாகனங்கள் பதிவாவது ஒரு டிரெண்டாக இருக்கிறது.

ஆனால் கடந்தாண்டு வரை எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் இந்த டிரெண்ட் தென்படவில்லை. ஆனால் இந்தாண்டு எலெக்ட்ரிக் வாகன விற்பனையிலும் இந்த டிரெண்டை காண முடிகிறது. ஆனால் பெட்ரோல் டூவீலைரை ஒப்பிடும் போது எலெக்ட்ரிக் டூவீலரில் ஏற்பட்ட சரிவு குறைவு தான். இதன் காரணமாக ஒட்டு மொத்த டூவீலர் விற்பனையில் எலெக்ட்ரிக் டூவீலரின் பங்கு அதிகமாகியுள்ளது.

கடந்த நவம்பரில் மொத்த டூவீலர் விற்பனையில் 4.1 சதவீதம் மட்டுமே எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனையானது. இதுவே கடந்த டிசம்பர் மாதம் விற்பனை சரிந்திருந்தாலும் மார்கெட் பங்கு 5.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மட்டுமல்ல கடந்த அக்டோபர், நவம்பர் மாதம் பண்டிகை காலம் என்பதால் அப்பொழுது பலர் வாகனங்களை வாங்கியிருப்பார்கள். அதனால் அதற்கு அடுத்த மாதம் விற்பனை மந்தமாக தான் இருக்கும்.

கடந்த சில மாதங்கள் வரை ஹீரோ, ஓகினவா போன்ற நிறுவனங்கள் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தது. இந்நிலையில் தற்போது அந்தஇடத்தை ஓலா பிடித்துவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் மொத்தம் 17,279 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பதிவு செய்துள்ளது. இது ஒட்டு மொத்த மார்கெட்டில் 26.9 சதவீதமாகும். அடுத்தாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இருக்கிறது. இது 9317 ஸ்கூட்டர்களை பதிவு செய்துள்ளது.

2023ம் நிதியாண்டு அதாவது 2022ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை விற்பனையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஓலா நிறுவனம் 18.8 சதவீத மார்கெட் பங்கையும், ஓகினவா 16.2 சதவீத மார்கெட் பங்கையும், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 13.8 சதவீத மார்கெட் பங்கை வகித்துள்ளது. இந்த 2023 ஜனவரி மாதம் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதம் எலெக்ட்ரிக் வாகன விற்பனை என்னதான் குறைந்திரு்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு குறையவில்லை.

அடுத்தடுத்த மாதங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை அதிகமாகும். இது போக புதிய எலெக்ட்ரிக் வாகனங்களில் வருகையும் மார்கெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் மார்கெட் ஷேரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் பெட்ரோல் வாகனங்கள் எல்லாம் படிப்படியாக மறைய துவங்கும் என தெரிகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 3, 2023, 10:44 [IST]
English summary
Two wheeler registration slow down in december
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+