2-வீலர் சேல்ஸில் ஹீரோவின் கொடி நாளுக்கு நாள் உயர போய் கிட்டே இருக்கு!! ஹோண்டா மொத்தமா திணறுது!

இந்தியா, 2-வீலர்களுக்கான மார்க்கெட் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டில் மோட்டார்சைக்கிள்களும், ஸ்கூட்டர்களும் கார்களை காட்டிலும் சற்று அதிகமாகவே விற்பனையாகுகின்றன. எந்த அளவிற்கு என்றால், கடந்த 2023 நவம்பர் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 22.5 இலட்ச 2-வீலர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2022ஆம் ஆண்டில், இதே நவம்பர் மாதத்தில் 18.56 இலட்ச 2-வீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், கடந்த 1 வருடத்தில் 2-வீலர்கள் விற்பனை ஆனது நம் நாட்டில் எந்த அளவிற்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பதை அறியலாம். கடந்த நவம்பர் மாதத்தில் பதிவான மொத்த 22,47,366 எண்ணிக்கையில் எலக்ட்ரிக் 2-சக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கையும் அடங்குகிறது.

two wheelers sales 2023 november

வழக்கம்போல், கடந்த நவம்பர் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்த நிறுவனமாக முதலிடத்தில் ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. கடந்த மாதத்தில் ஹீரோ நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்களின் எண்ணிக்கை ஆனது 8,02,234 ஆகும். ஆனால், 2022 நவம்பர் மாதத்தில் 6,37,534 இரு சக்கர வாகனங்களை மட்டுமே ஹீரோ நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் மக்களால் வாங்கப்படும் 3இல் ஒரு 2-வீலர் ஆனது ஹீரோ நிறுவனத்துடையதாக உள்ளது. இதற்கடுத்து 2வது இடத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா 2-வீலர்களின் எண்ணிக்கை 5,12,865 ஆகும். ஆனால், 2022 நவம்பர் மாதத்தில் 4,63,145 இருசக்கர வாகனங்களை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்திருந்தது.

two wheelers sales 2023 november

தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்த வரிசையில் 3,65,295 இரு சக்கர வாகனங்களின் விற்பனை உடன் 3வது இடத்தில் உள்ளது. டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை எண்ணிக்கையும் 2022 நவம்பரை விட 16.25% அதிகரித்துள்ளது. ஏனெனில், அந்த மாதத்தில் 2,71,925 இரு சக்கர வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது.

இதற்கடுத்து 4வது இடத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் விற்பனை ஆனது 2022 நவம்பரை காட்டிலும் 12.20% அதிகரித்துள்ளது. 2022 நவம்பர் மாதத்தில் 2,11,391 பஜாஜ் 2-வீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் 2,74,181 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

two wheelers sales 2023 november

பஜாஜிற்கு அடுத்து, சுஸுகி மோட்டார்சைக்கிள் மற்றும் ராயல் என்ஃபீல்டு நிறுவனங்கள் 5வது மற்றும் 6வது இடங்களில் உள்ளன. இவை இரண்டின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் கிட்டத்தட்ட ஒன்றே. சுஸுகி கடந்த நவம்பர் மாதத்தில் 82,443 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதுவே, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 81,319 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் கடந்த மாதத்தில் 63,781 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், 2022 நவம்பரில் யமஹாவில் இருந்து 53,794 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. சமீப காலத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் வெற்றிநடை போட்டு வரும் ஓலா எலக்ட்ரிக் இந்த வரிசையில் கடைசி 10வது இடத்தில் 29,808 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை உடன் உள்ளது.

two wheelers sales 2023 november

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் 2-வீலர்களை வாங்குவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. இதனால், முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப்பில் இருந்து சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் வரையில் அனைத்து 2-வீலர் நிறுவனங்களும் விற்பனையில் வளர்ச்சியை கடந்த நவம்பர் மாதத்தில் பதிவு செய்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, December 9, 2023, 8:00 [IST]
English summary
Two wheelers sales 2023 november hero motocorp at top usual check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X