ஜப்பான் ஹோண்டாவுக்கு இணையா நம்ம ஊர் டிவிஎஸ்!! உள்நாட்டு கம்பெனிகளின் தயாரிப்புகளுக்கு மவுசு அதிகமாகுது...

கடந்த 2023 மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் முதல் 10 நிறுவனங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியா, மோட்டார்சைக்கிள்களுக்கான சந்தை என கூறினால் அதில் மிகையில்லை. ஏனெனில் நம் நாட்டில் ஒவ்வொரு மாதத்திலும் லட்சம் கூட கிடையாது, மில்லியன் கணக்கில் 2-வீலர்கள் விற்பனையாகுகின்றன. கடந்த மே மாதத்தை மட்டுமே எடுத்து பார்த்தோமேயானால், கடந்த மாதத்தில் மொத்தம் 14,93,234 இருசக்கர வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2-wheelers sales top brands 2023 may

இது 2022 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிட்டு பார்த்தால், 1,27,310 இருசக்கர வாகனங்கள் கடந்த மாதத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் அந்த மாதத்தில் 13,65,924 இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வளர்ச்சிக்கு எலக்ட்ரிக் 2-வீலர்களுக்கு அதிகரித்துவரும் தேவை முக்கிய காரணமாக விளங்குகிறது.

அதிலிலும் குறிப்பாக, கடந்த 2022 மே மாதத்தின் போது வளர்ச்சி காண துவங்கி இருந்த ஓலா, ஏத்தர் போன்ற எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தற்சமயம் முன்னணி நிறுவனங்களாக விளங்குகின்றன. எந்த அளவிற்கு என்றால், 2022 மே மாதத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வெறும் 9,269 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், ஏத்தர் எனர்ஜி 3,338 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் தான் விற்பனை செய்து இருந்தன. ஆனால் கடந்த மாதத்தில் ஓலா, ஏத்தர் எனர்ஜியின் விற்பனை எண்ணிக்கைகள் முறையே 28,469 மற்றும் 15,266 ஆகும்.

2-wheelers sales top brands 2023 may

இருப்பினும், வழக்கம்போல் இந்தியாவின் நம்பர் 2-வீலர் பிராண்டாக ஹீரோ மோட்டோகார்ப் தான் விளங்குகிறது. ஹீரோ நிறுவனத்தில் இருந்து கடந்த மே மாதத்தில் மொத்தம் 5,30,658 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2022 மே மாதத்தில் 5,12,150 ஹீரோ 2-வீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2வது இடத்தில் பெரியதாக எந்த மாற்றமும் இன்றி ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தொடர்கிறது.

கடந்த மாதத்தில் ஹோண்டா நிறுவனத்தில் இருந்து 2,69,557 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் நாம் ஹோண்டாவிற்கு அடுத்துள்ள டிவிஎஸ் மோட்டாரின் விற்பனையை தான் முக்கியமாக பார்க்க வேண்டும். ஏனெனில் 2022 மே மாதத்தை காட்டிலும் கடந்த மே மாதத்தில் சுமார் 66 ஆயிரத்திற்கும் அதிகமான 2-வீலர்களை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. 2022 மே மாதத்தில் டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை எண்ணிக்கை 1,85,645.

2-wheelers sales top brands 2023 may

ஆனால் கடந்த மே மாதத்தில் 2,52,247 ஆகும். ஹோண்டாவிற்கும், டிவிஎஸ் மோட்டாருக்கும் இடையே வெறும் 17,000 யூனிட்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. இந்த வரிசையில் 4வது இடத்தில் பஜாஜ் ஆட்டோ 1,86,150 இருசக்கர வாகனங்களின் விற்பனை உடன் உள்ளது. 5வது மற்றும் 6வது இடங்களை முறையே ராயல் என்பீல்டு மற்றும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் பிடித்துள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் 68,570 மற்றும் 61,442 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கார்கள் விற்பனையில் ஹூண்டாய்க்கும், டாடாவுக்கும் இடையே எவ்வாறு போட்டி நிலவிவருகிறதோ அதேபோன்று, 2-வீலர்கள் விற்பனையில் ஹோண்டாவிற்கும், டிவிஎஸ் மோட்டாருக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் ஹோண்டாவை டிவிஎஸ் முந்தினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. இதில் இருந்து, இந்திய மக்கள் உள்நாட்டு நிறுவனத்தின் தயாரிப்பை விரும்பி தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 6, 2023, 11:17 [IST]
English summary
Two wheelers sales top brands in 2023 may
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X