எந்த கலர்ல கேட்டாலும் கிடைக்கும்... டாப் ஐந்து அதிக வண்ண தேர்வு கொண்ட டூ-வீலர்களின் லிஸ்ட் இதோ!
என்னதான் மனசுக்கு பிடிச்ச டூ-வீலரா இருந்தாலும், அதுல நமக்கு பிடிச்ச வண்ண தேர்வு கிடைக்கலனா அதை வாங்கவே மனசு வராது. ஒரு சிலர் இதற்காக பிடித்த வாகனத்தை வாங்குவதையே தவிர்த்திருக்கின்றனர். மேலும், பிடிச்ச கலர் வரும் வரை காத்திருந்தவர்களும் இருக்கிறார்கள், பிடிச்ச கலர்ல அந்த வாகனம் கிடைக்காததால வேறு மாடல்களை வாங்கியவர்களும் இந்த உலகத்துல இருக்காங்க.
அந்த அளவிற்கு நிறத்திற்கு சிலர் அதிகம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆஸ்ட்ராலஜியும் இதற்கு ஓர் காரணமாக இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே சில முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் பிரபல தயாரிப்புகளில் பன்முக நிற தேர்வுகளை வாரி வழங்குகின்றனர். அந்தவையில், அதிக நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் டூ-வீலர் மாடல்களை பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ராயல் என்பீல்டு கிளாசிக் 350
இருப்பதிலேயே இந்த பைக் மாடலில்தான் அதிகப்படியான நிற தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 15 விதமான நிற தேர்வுகள் கிளாசிக் 350 இல் வழங்கப்படுகின்றது. தசாப்தங்களைக் கடந்து விற்பனையில் இருக்கும் பைக் மாடல் இது ஆகும். இதன் பக்கம் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு ராயல் என்பீல்டு நிறுவனம் பன்முக நிற தேர்வு வசதியை வழங்குகின்றது.
சிங்கிள்-டோன், டூயல்-டோன் ஆகிய ஆப்ஷன்களிலும் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஹால்சையோன் பிளாக், ஹால்சையோன் கிரீன், ஹால்சையோன் கிரே, மார்ஷ் கிரே, டெசர்ட் சேண்ட், ரெட்டிட் சேஜ் கிரீன், ரெட்டிட்ச் ரெட், குரோம் ரெட், குரோம் ப்ரோன்ஸ், கன் மெட்டல் கிரே மற்றும் டார்க் ஸ்டீல்த் பிளாக் உள்ளிட்ட நிற தேர்வுகளிலேயே கிளாசிக்350 விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதேபோல், மீட்டியோர்350 பைக் 14 விதமான வண்ண தேர்வுகளில் விற்கப்பட்டு வருகின்றது.

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. இந்நிறுவனம், இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் எஸ்1 ஏர், எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. கெருவா எனும் பிரத்யேக நிற தேர்வுடன் சேர்த்து இன்னும் பல வண்ண தேர்வுகளை இந்த ஸ்கூட்டரில் ஓலா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
ஒட்டுமொத்தமாக 12 விதமான நிற தேர்வுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. வெள்ளை, காக்கி, நியோ மிண்ட், கோரல் கிளாம், ஜெட் கருப்பு, மார்மெல்லோ, லிக்யூட் சில்வர், மில்லெனியல் பிங்க், ஆந்த்ராசைட், மிட்நைட் ப்ளூ மற்றும் மேட் கருப்பு ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும். அனைத்தும் சிங்கிள் டோன் நிற தேர்வுகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை போல் அதிகம் நிற தேர்வுகளில் விற்பனைக் கிடைக்கும் இருசக்கர வாகனமாக ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 12 விதமான நிற தேர்வுகளில் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சிங்கிள் டோன் மற்றும் டூயல் டோன் என இரு விதமான நிற தேர்வுகளில் இது விற்பனைக்குக் கிடைக்கும்.
சிங்கிள் டோன் ஆப்ஷனில் பம்பிள்-பீ யெல்லோ, பீட்டில் ரெட் மற்றும் ஃபையர் ஃப்ளை கோல்டன் ஆகிய நிற தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் டூயல் டோன் ஆப்ஷனில் கிரே கிரீன், பர்பிள் உடன் கூடிய கருப்பு, மேட் ஷீல்ட் கோல்டு, ரெட் உடன் கூடிய கருப்பு, சில்வர் உடன் கூடிய கருப்பு, சில்வர் நெக்சஸ் ப்ளூ, வண்ணத்து பூச்சு மஞ்சள், சன்ஷைன் கோல்டு மற்றும் ரூபி சிவப்பு ஆகிய தேர்வுகளில் கிடைக்கும்.

யமஹா ஃபஸ்ஸினோ
இந்தியாவில் அதிக நிற தேர்வுகளில் கிடைக்கும் பெட்ரோல் பவர்டு ஸ்கூட்டராக யமஹாவின் ஃபஸ்ஸினோ உள்ளது. இந்த ஸ்கூட்டரை ஒன்பது விதமான நிற தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். விவிட் ரெட், யெல்லோ காக்டெயில், சையன் காக்டெயில், மெட்டாலிக் பிளாக், டார்க் மேட் ப்ளூ மற்றும் கூல் ப்ளூ மெட்டாலிக், மேட் பிளாக் மற்றும் மேட் ப்ளூ ஆகிய நிற தேர்வுகளிலேயே ஃபஸ்ஸினோ விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்பாக இன்டர்செப்டார் 650 இருக்கின்றது. இந்தியாவில் மட்டுமில்லைங்க வெளிநாடுகளிலும் இந்த பைக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. கிளாசிக் 350 மாடலை போலவே இந்த பைக் மாடலையும் ராயல் என்பீல்டு அதிக நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்குகின்றது.
ஒட்டுமொத்தமாக 7 நிற தேர்வுகளில் இதை வாங்கிக் கொள்ள முடியும். கேன்யோன் ரெட், வென்சூரா ப்ளூ, ஆரஞ்சு கிரஷ், டவுன்டவுன் டிராக், பேக்கர் எக்ஸ்பிரஸ், சன்செட் ஸ்ட்ரிப் மற்றும் குரோம் பூச்சு ஆகிய நிற தேர்வுகளிலேயே இன்டர்செப்டார் 650 விற்பனைக்குக் கிடைக்கிறது.

யமஹா ஆர்15
இந்திய இளைஞர்களின் மிகவும் ஃபேவரிட்டான பைக் மாடலாக யமஹா ஆர்15 இருக்கின்றது. இந்த பைக்கை யமஹா நிறுவனம் அதிகபட்சமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. மெட்டாலிக் ரெட், டார்க் க்நைட், ரேஸிங் ப்ளூ, மெட்டாலிக் கிரே மற்றும் மோட்டோ ஜிபி 60 எனும் சிறப்பு எடிசன் ஆகிய தேர்வுகளிலேயே ஆர்15 விற்பனைக்குக் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications









