சந்திரயான் 3 செய்தியையே இந்த தகவல் ஒன்னுமில்லாம ஆக்கிருச்சே.. 90செகண்டுல எல்லா பைக்கும் இந்தியால வித்துடுச்சா!

ஒட்டுமொத்த உலகமே சந்திராயன் 3 செய்தியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து உள்ளது அல்ட்ராவைலட் (Ultraviolette) நிறுவனம். இந்த நிறுவனம் 'எஃப்77 ஸ்பேஸ் எடிசன்' (F77 Space Edition) எனும் பிரத்யேக மாடலை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இது ஓர் சிறப்பு பதிப்பு எலெக்ட்ரிக் பைக்காகும். வழக்கமான எஃப்77 பைக் மாடலைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான ஓர் தயாரிப்பாக இதனை அல்ட்ராவைலட் நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. இந்த வாகனமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட 90 செகண்டுகளிலேயே அனைத்தும் விற்று தீர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Ultraviolette f77 space edition all units booked in 90 seconds

இதனை நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கின்றது. இந்தியர்கள் வெறிக்கொண்டு இந்த பைக்கை வாங்கி தீர்த்திருக்கின்றனர் என்பது துள்ளியமாக தெரிகின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ராக்கெட் வேகத்தில் இந்தியர்கள் இந்த சிறப்பு பதிப்பை வாங்கி இருக்கின்றனர். இதன் காரணத்தினாலேயோ என்னமோ தற்போது இந்த செய்தி சந்திராயன் 3 செய்திக்கு இணையாக வாகன உலகில் பேசப்பட்டு வருகின்றது.

அல்ட்ராவைலட் எஃப்77 ஓர் சூப்பர் பைக் வகை எலெக்ட்ரிக் டூ-வீலர் ஆகும். இந்த மாடலையே அதிக அழகான மாடலாக உருவாக்கி அதனை ஸ்பேஸ் எடிசன் எனும் பெயரில் அல்ட்ராவைலட் விற்பனைக்குக் கொண்டு வந்தது. வெறும் 10 யூனிட்டுகளை மட்டுமே அது விற்பனைக்குக் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Ultraviolette f77 space edition rear

இவற்றையே வெறும் 1 நிமிடம் 30 செகண்டுகளுக்குள் இந்தியர்கள் புக் செய்திருக்கின்றனர். ஆகஸ்டு 22ஆம் தேதி சுமார் 6 மணி அளவிலேயே எஃப்77 ஸ்பேஸ் எடிசனுக்கான புக்கிங் பணிகள் தொடங்கின. பெயருக்கு ஏற்பவே எஃப்77 ஸ்பேஸ் எடிசன் மாடலுக்கு பெயிண்டிங் தீம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

ஸ்பேஸுக்கு அனுப்பப்படும் களங்கள் எப்படி வெள்ளை நிறத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றதோ, அதை போலவே அசத்தும் வெள்ளை நிறத்தால் எஃப்77 ஸ்பேஸ் எடிசன் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. அதுதவிர, நீலம், கருப்பு மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட நிற ஸ்டிக்கர்களாலும் அந்த பைக் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

Ultraviolette f77 space edition headlamp

இதுதவிர, வானூர்திகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அலுமினியம் 7075-ஐ பயன்படுத்தியே இந்த பைக்கை அல்ட்ராவைலட் தயாரித்து இருக்கின்றது. இவையே புதிய எஃப்77 ஸ்பேஸ் எடிசனின் சிறப்புகள் ஆகும். அதேவேளையில், பேட்டரி பேக் மற்றும் மின்சார மோட்டார் இந்த இரண்டு விஷயத்தில் ஸ்பேஸ் எடிசன் மற்றும் வழக்கமான பதிப்பு ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானதாக இருக்கும்.

அதாவது, 10.3 kWh பேட்டரி பேக்கே எஃப்77 பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 307 கிமீ வரை பயணிக்க முடியும். மேலும், 40.5 எச்பி பவர் மற்றும் 100 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின்சாரே மோட்டாரே எஃப்77 ஸ்பேஸ் எடிசனில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Ultraviolette f77 space edition display

இந்த எலெக்ட்ரிக் பைக்கின் மற்றுமொரு ஸ்பெஷல் என்னவென்றால் அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பெயிண்ட் எளிதில் மங்கிப் போகாது என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. குறிப்பாக, கதிர்வீச்சு, ரசாயனம் மற்றும் வெயில் உள்ளிட்டவற்றால் ஏற்படும் தாக்கத்தை அது எதிர்க்குமாம். இத்தகைய சூப்பரான பெயிண்டிங் வேலையே எஃப்77 ஸ்பேஸ் எடிசனில் அல்ட்ராவைலட் செய்திருக்கின்றது.

இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளைத் தாங்கியதாக இந்த எலெக்ட்ரிக் பைக் இருக்கின்றது. மேலும், இதனால் வெறும் 2.9 செகண்டுகளிலேயே மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிவிட முடியுமாம். இதுதவிர மணிக்கு 152 கிமீ வேகத்திலும் இந்த இ-பைக்கால் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Ultraviolette f77 space edition front view

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அல்ட்ராவைலட் எஃப்77 ஸ்பேஸ் எடிசன் எலெக்ட்ரிக் பைக்கிற்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பை வைத்து பார்க்கையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு, குறிப்பாக, அதிக பிரீமியம் வசதிக் கொண்ட மின்சார வாகனங்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 23, 2023, 13:22 [IST]
English summary
Ultraviolette f77 space edition sold out with in 90 sec
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X