பைக் விலை என்னமோ ரூ.5.6 லட்சம் தான்... இருந்தாலும் வாங்குறது ரொம்ப கஷ்டம்!! அல்ட்ராவயலட் எஃப்77 ஸ்பேஸ் எடிசன்!

அல்ட்ராவயலட் (Ultraviolette) நிறுவனம் அதன் எஃப்77 எலக்ட்ரிக் சூப்பர்பைக்கில் புதியதாக ஸ்பெஷல் ஸ்பேஸ் எடிசனை அறிமுகப்படுத்தி உள்ளது. நிலவை நோக்கி பாய்ந்துள்ள சந்திரயான்-3 மற்றும் இந்தியாவின் விண்வெளி பயணங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் எஃப்77 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

பெங்களூரை சேர்ந்த எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமாக அல்ட்ராவயலட் தன்னை கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தி கொண்டது. அல்ட்ராவயலட் பிராண்டில் இருந்து எஃப்77 என்ற சூப்பர் எலக்ட்ரிக் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைய தினமே, எஃப்77 லிமிடெட் எடிசனும் மிகவும் குறைவான எண்ணிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரு எலக்ட்ரிக் பைக்குகளையும் நடிகர் துல்கர் சல்மான் அறிமுகம் செய்து வைத்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

ultraviolette launches f77 space edition

அதனை தொடர்ந்து, தற்போது எஃப்77 ஸ்பேஸ் எடிசனை அல்ட்ராவயலட் நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் விண்வெளி பயணங்களை கொண்டாடும் விதமாகவும், விண்வெளித் துறையில் இந்தியாவின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எஃப்77 ஸ்பேஸ் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

எஃப்77 ஸ்பேஸ் எடிசன் மோட்டார்சைக்கிளை வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி மாலை 6 மணி முதல் விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் https://www.ultraviolette.com/ என்ற அல்ட்ராவயலட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம். எஃப்77 லிமிடெட் எடிசன் பைக் மொத்தம் 77 யூனிட்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதாவது, 77 வாடிக்கையாளர்கள் எஃப்77 லிமிடெட் எடிசனை வாங்கினர்.

ultraviolette launches f77 space edition

ஆனால், புதிய எஃப்77 ஸ்பேஸ் எடிசனை வெறும் 10 வாடிக்கையாளர்களால் மட்டுமே வாங்க முடியும். கட்டிங்-எட்ஜ் மொபைலிட்டி தொழிற்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய எஃப்77 பைக்கில் விண்வெளிக்கு செல்லும் செயற்கைக் கோள் அளவிற்கு தொழிற்நுட்பங்கள் இல்லாவிடினும், செயற்கைக் கோள்களை உருவாக்க விண்வெளி துறை எவ்வாறான யுக்திகளை பயன்படுத்துமோ அதே யுக்தியை பயன்படுத்தி எஃப்77 ஸ்பேஸ் எடிசனை தயாரித்துள்ளதாக அல்ட்ராவயலட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், விண்வெளி துறையில் பயன்படுத்தப்படும் உயர் தரத்திலான அலுமினியம் (அலுமினியம் 7075) புதிய எஃப்77 ஸ்பேஸ் எடிசன் எலக்ட்ரிக் பைக்கின் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தரத்திலான அலுமினியம் வலிமையானதாக இருப்பது மட்டுமின்றி, எடை குறைவானதாகவும் உள்ளது. இதனால் பைக்கின் எடை குறைவாக இருக்கும் என்பதால், பைக்கை இயக்க அதிக இயக்க ஆற்றல் தேவைப்படாது.

ultraviolette launches f77 space edition

அலுமினியம் 7075 விண்வெளி துறையில் மட்டுமின்றி, இராணுவ துறையிலும் விமானங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. எஃப்77 ஸ்பேஸ் எடிசனில் இந்த அலுமினியத்தை பாதுக்காக்கும் பொருட்டு விண்வெளி துறையில் பயன்படுத்தப்படும் அதே தரத்திலான பெயிண்ட் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய பெயிண்ட் புறா ஊதா கதிர்கள், இராசயன எதிர்ப்புகளை சமாளிப்பதுடன், பைக்கின் தோற்றம் விரைவாக மங்கல் அடைவதையும் தவிர்க்கும் என கூறப்படுகிறது.

அத்துடன், அதிக வெப்ப நிலைத்தன்மை கொண்ட பெயிண்ட் எஃப்77 ஸ்பேஸ் எடிசனில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், எந்தவொரு வெப்பநிலையையும் இந்த எலக்ட்ரிக் சூப்பர் பைக் தாங்கும். இவை எல்லாவற்றையும் விட முக்கிய அம்சமாக விதிவிலக்கான அரிப்புகளையும் இந்த பெயிண்ட் தடுக்கும் என கூறப்படுகிறது. அதாவது, எந்தவொரு பெயிண்ட்டிலும் எவ்வளவோ தடுக்க முயன்றும் விதிவிலக்காக ஏற்படும் அரிப்புகளையும் விண்வெளி துறையில் பயன்படுத்தப்படும் பெயிண்ட் தடுக்கிறது.

ultraviolette launches f77 space edition

இவற்றுடன், பேட்டரி செயலிழப்பதை தடுக்கும் அமைப்புகளை கொண்ட ஏர்கிராஃப்ட் எலக்ட்ரானிக்ஸ் டெக்னலஜி & இண்டர்ஃபேஸை (Avionics) எஃப்77 ஸ்பேஸ் எடிசன் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த பைக்கின் தோற்றத்தை பற்றியும் நாம் சொல்லியாக வேண்டும். ஏனெனில் புதிய எஃப்77 ஸ்பேஸ் எடிசன் பைக் இந்திய விண்வெளி துறையில் பரவலாக பயன்படுத்தப்படும் வெள்ளை, ஆரஞ்ச் மற்றும் நீலம் நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மொத்த இந்தியாவே எதிர்பார்த்திருக்கும் சந்திரயான்-3 விண்கலம் நிலவை சென்றடைந்துள்ளது. விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பை வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி சென்றடைய உள்ளது. நிலவின் தென் துருவ பகுதியில் லேண்டரை இறக்கும் முதல் நாடு என்கிற பெருமையை நம் இந்தியா பெறவுள்ளதாக கூறப்பட்டுவரும் தற்போதைய சூழலில், அல்ராவயலட் எஃப்77 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, August 21, 2023, 18:42 [IST]
English summary
Ultraviolette launches f77 space edition at rs 5 6 lakhs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X