சத்தமே இல்லாம ரோட்டுல போறவங்கள எல்லாம் திரும்பி பாக்க வைக்க போற பைக்! பொண்ணுங்க இதுல பைத்தியமாக போறாங்க!
அல்ட்ராவைலட் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது எஃப்77 என்ற எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியது. அப்பொழுது முதல் இந்த பைக்கிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டது. இதுவரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் மக்கள் அதிகம் விரும்பிய நிலையில் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுகத்திற்குப் பிறகு மக்கள் பார்வை இங்குத் திரும்பியுள்ளது.
பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த அல்ட்ரா வைலட் நிறுவனம் மெத்தம் 3 விதமான எஃப்77 பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர் ஸ்டைக், ஷேடோ மற்றும் லேசர் ஆகிய இவை மூன்றும் 3 ஸ்டிரைக்கிங் பெர்சனாலிட்டிகளை குறிக்கிறது. இதில் ஒவ்வொரு ஃபாம்மும் 2 வேரியன்ட்களாக உள்ளது. எஃப் 77 மற்றும் எஃப் 77 ரெக்கான் ஆகிய வேரியன்ட்கள் உள்ளது.

இதில் எஃப்77 பை் 206 கி.மீ ரேஞ்சையும் எஃப்77 ரெக்கான் 307 கி.மீ ரேஞ்சையும் வாரி வழங்கும் திறன் கொண்டது. இந்த பைக்கிற்கான புக்கிங் துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் எஃப்77 பைக்கிற்கான டெலிவரியை அந்நிறுவனம் துவங்கிவிட்டது. தற்போது இந்தியா முழுவதும் புக்கிங் செய்தவர்கள் வரிசையாக இந்த பைக்கை டெலிவரி பெற்று வருகின்றனர்.
அல்ட்ரா வைலட் நிறுவனம் அடுத்தாக இந்த பிராண்டை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. இந்திய அளவில் டீலர்ஷிப் நெட்வோர்க்கையும் விரிவுபடுத்தவுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இந்த பைக்கை வாங்குவதை எளிதாக்க இதைச் செய்துள்ளது. சர்வதேச அளவில் பெர்ஃபாமென்ஸ் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு டிமாண்ட் இருப்பதால் சர்வதேச அரங்கிலும் தன் கால்தடத்தைப் பதிக்க முடிவு செய்துள்ளது.
அல்ட்ரா வைலர் நிறுவனம் இதுவரை 55 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணத்தை முதலீடு செய்துள்ளது. குறிப்பாக டிவிஎஸ் மோட்டார், ஹோகோ கார்ப், கோஃப்ளூரல் டெக்னாலஜிஸ், ஸ்பெஷலி இன்வெஸ்ட் ஆகிய நிறுவனங்கள் இதில் முதலீடு செய்துள்ளது.
எஃப் 77 பைக் வேகமான, அதிக தொழிற்நுட்ப வசதிகள் கொண்ட சிறந்த எலெக்ட்ரிக் டூவீலர் பைக். இந்த பைக் முழுவதுமாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்த பைக் ஆய்வு மற்றும் மேம்பாட்டில் மிக முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் டிசைன் மற்றும் பெர்ஃபாமென்ஸ் அதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
அலட்ரா வைலட் நிறுவனம் எஃப்99 என்ற ஃபேக்டரி ரேஸிங் பிளாட்ஃபார்மை கடந்த ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது. இதனால் விரைவில் இந்நிறுவனம் அந்த பிளாட்ஃபார்மிலும் பைக்குகளை தயாரிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த நிறுவனம் தயாரித்த பிளாட்ஃபார்ம்கள் சர்வதேச தரத்தில் உள்ள இவி பிளாட்ஃபார்மில் ஒன்றாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








