புதுசா பைக் வாங்க போறீங்களா? அவசரப்படாதீங்க... இந்த 2023இல் இத்தனை பைக்குகள் புதுசா வர இருக்கின்றன!!

கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட அசாதாரண சூழல் ஓரளவிற்கு சரியாகி மீண்டும் நாம் இயல்பு வாழ்க்கைக்குள் நுழைந்த ஆண்டு 2022 எனலாம். இதனாலேயே பல மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் தங்களது எதிர்கால பைக்குகளில் மும்முரமாக இறங்கிவிட்டன. அந்த வகையில் இந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் சில மோட்டார்சைக்கிள்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

அவசரப்படாதீங்க, புதுசா வர உள்ள இந்த பைக்குகளை பார்த்துடுங்க!

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650

2022ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகளுள் ஒன்று. ஆனால் சற்று தாமதமாக 2023இன் துவக்கத்தில் விற்பனைக்குவர உள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் விற்பனையில் உள்ள ராயல் என்பீல்டு 650சிசி பைக்குகளின் எண்ணிக்கை 3ஆக அதிகரிக்க உள்ளது. ராயல் என்பீல்டின் 650சிசி பைக்குகளுக்கு இந்தியாவை காட்டிலும் ஐரோப்பாவில் தான் மிக சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது, அதிலிலும் குறிப்பாக இங்கிலாந்தில். ஆதலால் சூப்பர் மீட்டியோர் 650 பைக் ஐரோப்பாவை டார்க்கெட் செய்தே கொண்டுவரப்படுகிறது.

ராயல் என்பீல்டு புல்லட் 350

ராயல் என்பீல்டு நிறுவனம் 2027ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளதாக சில வருடங்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டது. அதன்படி இந்த 2023இல் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை தொடர்ந்து களமிறக்கப்பட உள்ள புதிய ராயல் என்பீல்டு பைக் தான் புதிய தலைமுறை புல்லட் 350 ஆகும். அதாவது ஏற்கனவே விற்பனையில் உள்ள புல்லட் 350 பைக்கின் அப்டேட் செய்யப்பட்ட வெர்சனாக இந்த புல்லட் பைக் இருக்கும்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450

மேற்கூறிய இரு பைக்குகளை தொடர்ந்து அறிமுகமாக உள்ள அடுத்த ராயல் என்பீல்டு பைக். அதாவது ஹிமாலயன் 450 அறிமுகப்படுத்தப்படுவதற்கு இன்னும் 6 மாத காலம் ஆகலாம். தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஹிமாலயன் பைக்கை காட்டிலும் அளவில் பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த பைக், அதற்கேற்ப என்ஜினையும் சற்று ஆற்றல்மிக்கதாக பெற்றுவர உள்ளது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.2.8 லட்சம் என்ற அளவில் எதிர்பார்க்கிறோம்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 400

ஹீரோ மோட்டோகார்பின் சமீபத்திய மிக பெரிய ஹிட் பைக்குகளுள் ஒன்றாக எக்ஸ்பல்ஸ் மாடலை சொல்லலாம். எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் எக்ஸ்பல்ஸ் பைக் ஆனது தற்சமயம் 200சிசி-இல் மட்டுமே கிடைத்துவரும் நிலையில், இதனை 400சிசி-க்கு உயர்த்த ஹீரோ தயாராகி வருகிறது. இதன் மூலமாக ராயல் என்பீல்டு ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்கிற்கு சவாலான மோட்டார்சைக்கிள் சந்தைக்குவர உள்ளது என்பது உறுதி.

டிரையம்ப்-பஜாஜ் பைக்

இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ குழுமத்தின் கீழ் கேடிஎம், ஹஸ்க்வர்னா பிராண்ட்கள் செயல்படுவதுபோல், டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனமும் சில வருடங்களுக்கு முன்பே பஜாஜ் உடன் கூட்டணி சேர்ந்துவிட்டது. ஆனால் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் இருந்து இந்த 2023ஆம் ஆண்டில் தான் முதல் பைக் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கடந்த பல மாதங்களாக வடிவமைக்கப்பட்டு வரும் இந்த முதல் மோட்டார்சைக்கிள் ஆனது 350சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை கொண்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 கேடிஎம் 390 ட்யூக்

விற்பனையில் உள்ள கேடிஎம் 390 பைக் இந்த 2023இல் முற்றிலும் புதிய தோற்றத்திற்கு அப்டேட் செய்யப்பட உள்ளது. குறிப்பாக, என்ஜின் தற்போதைய 373சிசி-இல் இருந்து 399சிசி-க்கு மேம்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக கூடுதல் ஆற்றல் மற்றும் கூடுதல் டார்க் திறன் கிடைக்கும் என்பது உறுதி. அத்துடன், புதிய ஃப்ரேம், சப்-ஃப்ரேம், ஸ்விங்கார்ம் உள்ளிட்டவற்றையும் புதிய 390 ட்யூக் பைக் பெற்றுவரலாம் என ஸ்பை படங்கள் வெளிக்காட்டி இருந்தன.

யமஹா எம்டி-07 & ஒய்.இசட்.எஃப்-ஆர்7

இந்தியாவில் யமஹா நிறுவனம் தனது அளவில் பெரிய பைக்குகளை கடந்த பல வருடங்களாக விற்பனைக்கு களமிறக்காமல் உள்ளது. தற்போதைக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் யமஹா என்று பார்த்தால், அது ஒய்.இசட்.எஃப்-ஆர்15 எம் பைக் தான். ஆனால் இந்த பாணியை யமஹா தனது எம்டி-07 மற்றும் ஒய்.இசட்.எஃப்-ஆர்7 பைக்குகள் மூலமாக மாற்றி கொள்ளும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 3, 2023, 11:46 [IST]
English summary
Upcoming bikes for indian market in new 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+