கார்களே தோத்து போயிரும்! சென்சார் வசதி கொண்ட பூட் ஸ்டோரேஜ், டேஷ் கேம் வசதிகளுடன் விரைவில் வரும் இ-ஸ்கூட்டர்!

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் எந்த ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் இல்லாத அம்சங்களுடன் ரிவோட் மோட்டார்ஸின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் புதுமுக மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமே ரிவோட் மோட்டார் ஆகும். இதுவே அதன் புத்தம் புதிய தயாரிப்பை இந்தியாவில் வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிறுவனம், என்ன தயாரிப்பை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது? அதன் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

Rivot nx100 front

கர்நாடகா மாநிலம், பெலகவியைச் சேர்ந்த நிறுவனம் ரிவோட் மோட்டார்ஸ் (Rivot Motors). இந்த நிறுவனமே அதன் புத்தம் புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை இந்தியாவில் வெளியீடு செய்ய இருக்கின்றது. என்எக்ஸ்100 (NX100) எனும் மாடலையே அது இந்தியாவில் வெளியீடு செய்ய உள்ளது. இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். மிகவும் அட்டகாசமான ஸ்டைலில் இந்த வாகனத்தை ரிவோட் உருவாக்கி இருக்கின்றது.

வருகின்ற அக்டோபர் 23 ஆம் தேதி அன்றே இந்த புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. மேலும், இந்த நாளிலேயே அந்த வாகனத்திற்கான புக்கிங் பணிகளும் அன்றைய தினத்திலேயே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன.

Rivot nx100 back view

நகர பயன்பாட்டை மிகவும் சுவாரஷ்யமானதாக மாற்றும் நோக்கிலேயே இந்த வாகனத்தை ரிவோட் மோட்டார்ஸ் தயார் செய்திருக்கின்றது. இதுதவிர ஓர் முழு சார்ஜில் இந்த வாகனம் 280 கிமீ ரேஞ்ஜை தரும் என்றும் கூறப்படுகின்றது. இது தற்போது விற்பனையில் இருக்கும் மின்சார ஸ்கூட்டர்களைக் காட்டிலும் அதிக ரேஞ்ஜ் திறன் ஆகும்.

ரிவோட் என்எக்ஸ்100 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிக ரேஞ்ஜ் திறனுக்கு 5.7 kWh லித்தியன் அயன் பேட்டரி பேக்கே காரணமாக இருக்கின்றது. இந்த பெரிய பேட்டரியையே ரிவோட் மோட்டார்ஸ் என்எக்ஸ்100 பொருத்தப்பட்டு இருக்கின்றது. மோட்டாரை பொருத்த வரை ஐபி67 தர 6 kWh பவர் மற்றும் 150 என்எம் டார்க்கை வெளியேற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரே பொருத்தப்பட்டு இருக்கின்றது.

Rivot nx100 side view

இந்த மோட்டார் டஸ்ட் மற்றும் தண்ணீரால் பாதிக்காது. இதுதவிர 7 அங்குல தொடுதிரை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதனைப் பயன்படுத்தும் மிகவும் சுலபம் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. சென்சார் வசதிக் கொண்ட பூட் ஸ்டோரேஜ், டேஷ் கேமிரா உள்ளிட்டவையும் என்எக்ஸ்100-இல் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டேஷ் கேமிராவை பெறும் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவே ஆகும். ஆமாங்க, இந்த அம்சத்தை வேறு எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் காண முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, சென்சார் வசதிக் கொண்ட பூட் ஸ்டோரேஜையும் வேறு எந்த இருசக்கர வாகனத்திலும் நம்மால் பார்க்க முடியாது.

ஆகையால், மிகவும் அசத்தலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக என்எக்ஸ்100 இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. மேலும், இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஒட்டுமொத்த மின்சார வாகன உலகிலும் புரட்சி செய்யும் வகையில் அதன் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இப்போதே இந்த வாகனத்தின் வருகை பலரிடம் எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சென்சார் பூட் வசதி எல்லாம் கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய தரமான அம்சத்தையே ரிவோட் மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்க இருக்கின்றது. ஆகையால், இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை நிச்சயம் இந்த வாகனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியர்களிடத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இதை வைத்தே என்எக்ஸ்100-க்கு சிறந்த வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 20, 2023, 23:49 [IST]
English summary
Upcoming rivot nx100 electric scooter specs details revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X