எல்லாரும் சூப்பர் ஸ்பிளெண்டரை வாங்கி குவிக்க போறாங்க... இவ்ளோ சூப்பரானதா மாத்துவாங்கனு யாருமே எதிர்பார்க்கல!

சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் (Hero Super Splendor XTEC) பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வேற லெவலுக்கு அப்கிரேட் செய்திருக்கின்றது. குறிப்பாக இளைஞர்களைக் கவரும் பொருட்டு எக்கசக்க வசதிகளை அது வாரி வழங்கி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அதிக உறுதிக்கும், நீண்ட நாள் உழைப்பிற்கும் பெயர்போன டூ-வீலராக ஹீரோவின் ஸ்பிளெண்டர் பைக் இருக்கின்றது. இந்த மாடலின் மிக சிறந்த தேர்வாக சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் (Hero Super Splendor XTEC) உள்ளது. இதனையே தற்போது அப்டேட் செய்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

ஸ்பிளெண்டர்

கூடுதலாக வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு இதனை ஹீரோ நிறுவனம் அப்டேட் செய்து இருக்கின்றது. ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்கள் விஷயத்தில் நிறுவனம் கணிசமான மாற்றங்களைச் செய்திருக்கின்றது. இந்த மாற்றங்கள் செய்யப்பட்ட சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கே தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இது இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் ஆகிய இரு தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். டிரம் பிரேக் தேர்விற்கு ரூ. 83,368ம், டிஸ்க் பிரேக் தேர்விற்கு ரூ. 87,268ம் விலை நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. மேலே பார்த்த இரு விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

ஸ்பிளெண்டர்

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை

ஹீரோ நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் இருக்கின்றது. இதை அப்டேட் செய்து நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது கம்யூட்டர் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இப்போது செய்யப்பட்டு இருக்கும் அப்டேட்டுகள் அனைத்தும் இளம் தலைமுறையினரைக் கவரும் பொருட்டு செய்யப்பட்டு உள்ளது.

ஸ்டைல் மற்றும் இணைப்பு விஷயத்திலேயே லேசான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. முன்பு பயன்படுத்தப்பட்டு இருந்ததைக் காட்டிலும் ஹை-இன்டென்சிட்டி இடத்தில் எல்இடி லைட் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. முழு டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் ஒன்றும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை குறைவான எரிபொருள் அளவைக் காண்பிக்கும்.

ஸ்பிளெண்டர்

இத்துடன், சர்வீஸ் பற்றிய அறிவிப்பையும் அது வழங்கும். மேலும், இருசக்கர வாகனத்தில் ஏதேனும் சிக்கல் என்றால் அது பற்றிய அறிவிப்பையும் அது வழங்கும். இதுதவிர செல்போனையும் இந்த திரையில் இணைத்துக் கொள்ள முடியும். இதன் வாயிலக போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகள் உள்ளிட்டவற்றையும் அந்த திரையிலேயே பார்த்துக் கொள்ள முடியும்.

இத்தகைய மேன்மையான அம்சங்களையே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விலை மலிவான சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கில் வழங்கி இருக்கின்றது. இத்துடன், கூடுதல் சிறப்பு அம்சமாக யுஎஸ்பி சார்ஜர் வசதியும் பைக்கில் வழங்கப்பட்டு உள்ளது. இது ரைடர்கள் அவர்களது செல்போனை சார்ஜ் செய்து கொள்ள உதவும்.

இத்துடன், சைடு ஸ்டாண்டு போட்டு இருந்தால் தானாக வாகனத்தை ஆஃப் செய்யும் வசதியும் சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்-டெக் பைக்கில் ஹீரோ வழங்கி இருக்கின்றது. இது பாதுகாப்பான ரைடிற்கு உதவியாக இருக்கும். இதுதவிர, கூடுதல் பாதுகாப்பான ரைடு அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக டிஸ்க் பிரேக் ஆப்ஷனாக வழங்கப்படுகின்றது.

இந்த பைக்கில் 125 சிசி பிஎஸ்6 எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 10.7 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 10.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன் மோட்டார்சைக்கிளில் மிக சிறந்த எக்கனாமி சிஸ்டமாக ஐ3எஸ் ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. எரிபொருள் சிக்கனத்திற்கு பேருதவியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 6, 2023, 20:09 [IST]
English summary
Updated hero super splendor xtec launched
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+