டிவிஎஸ்-க்கு இப்பவே ஒதர ஆரம்பிச்சிருக்கும்.. இவ்ளோ கம்மி விலையிலா! ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் அறிமுகம்...
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160 ஆர் 4வி மோட்டார்சைக்கிளின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த பைக் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தின் முன்னணி இருசக்கர வாகன மாடல்களில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் (Xtreme 160R)-ம் ஒன்று. இதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனே தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 1.27 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த பைக் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஸ்டாண்டர்டு (Standard), கன்னெக்டட் (Connected) மற்றும் ப்ரோ (Pro) ஆகியவையே அவை ஆகும். இதில் உயர் நிலை தேர்வாக ப்ரோ இருக்கின்றது.
இதற்கு ரூ. 1.36 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். கணிசமான அப்டேட்டுகளை இந்த பைக்கில் ஹீரோ மோட்டோகார்ப் வழங்கி இருக்கின்றது. மேலும், அப்கிரேடின்கீழ் சில சிறப்பு புதிய அம்சங்களையும் அது சேர்த்து இருக்கின்றது.

அறிமுகத்தைத் தொடர்ந்து நாளை முதல் இந்த பைக்கிற்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட உள்ளன. மேலும், புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரும் ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக் டெலிவரி கொடுக்கப்பட இருக்கின்றது. ஆகையால், இன்னும் சில தினங்களில் இந்த பைக்கை இந்திய சாலைகளில் நம்மால் காண முடியும்.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கில் 163 சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு வசதிக் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 16.9 எச்பி பவரை 8,500 ஆர்பிஎம்மில் வெளியேற்றும். இத்தகைய சூப்பரான திறனை வெளியேற்றும் மோட்டாரே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த பைக்கால் வெறும் 4.7 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிவிட முடியுமாம். இதனை ஹீரோ நிறுவனமும் உறுதி செய்திருக்கின்றது. ஆகையால், இந்த பைக் தன்னுடைய போட்டியாளர்களுக்கு மிகக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160-க்கே போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கின் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட வேரியண்டில் செல்போனை இணைத்துக் கொள்ள முடியும். இதனை இணைத்துக் கொள்ளும்பட்சத்தில் நேவிகேஷன், செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுந்தகவல்களை பைக்கில் உள்ள திரையிலேயே நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுதவிர இயக்கத்தின்போது மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்கா ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் 37 மிமீ யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்திலும், ஷோவா மோனோஷாக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் 7 ஸ்டெப் ப்ரீலோட் அட்ஜெஸ்டபிள் வசதிக் கொண்ட சஸ்பென்ஷன் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மலிவு விலை 160 சிசி பைக்காக இதன் வருகை அமைந்திருக்கின்றது. ஆகையால், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160ஆர்-க்கு இதன் வருகை மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். விரைவிலேயே இதுகுறித்த தகவலை நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









