போட்டியே இருக்க கூடாதுனு முடிவு பண்ணிருச்சா இந்த கோமகி.. கார்களில் காணப்படும் வசதிகளுடன் டிஎன்95 அறிமுகம்!

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் பிரபலமான மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் கோமகி (Komaki)-யும் ஒன்று. இந்த நிறுவனத்தின் பிரபல தயாரிப்பாக டிஎன் 95 (TN 95) இருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த மாடலின் அப்டேட் செய்யப்பட்ட 20223 வெர்ஷனையே கோமகி நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.31 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும். அதேவேளையில், இதன் உயர்நிலை தேர்வில் ஓர் ஃபுல் சார்ஜில் 180 கிமீ வரை பயணிக்க முடியும்.

Komaki tn 95 electric scooter

2023 கோமகி டிஎன் 95 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்த அதிக ரேஞ்ஜ் திறன் மின்சார இருசக்கர வாகன பிரியர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, இதன் அதிகம் ரேஞ்ஜ் தரும் வெர்ஷனை 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்தும்பட்சத்திலேயே நம்மால் வாங்கிக் கொள்ள முடியும்.

டிஎன்95 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உயர்நிலை தேர்விற்கு ரூ. 1.40 லட்சம் விலையே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அப்டேட்டின்கீழ் இந்த இ-ஸ்கூட்டரில் பல்வேறு சிறப்பு வசதிகளை கோமகி நிறுவனம் சேர்த்திருக்கின்றது. பாதுகாப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் என பலவற்றை தாராள மனதுடன் அது வழங்கி இருக்கின்றது.

Komaki launches tn95 electric scooter

ஆன்டி ஸ்கிட் எனும் அட்டகாசமான தொழில்நுட்பம் டிஎன்95-இல் வழங்கப்பட்டிருப்பது இ-ஸ்கூட்டரின் கூடுதல் பிளஸ்ஸாகக் காட்சியளிக்கின்றது. இந்த அம்சம் வழுவழுப்பான சாலைகளில்கூட ஸ்டடியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயணிக்கச் செய்யும். இதேபோல் முன்னதாக ஹார்ட்வேர் அடிப்படையிலான என்எம்சி பேட்டரியே இந்த இ-ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது செயலி அடிப்படையிலான ஸ்மார்ட் பேட்டரி பேக் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பேட்டரிகள் மிகவும் பாதுகாப்பானவை. தீ விபத்தைத் தவிர்க்கும் திறன் கொண்டது. மேலும், வெறும் 5 மணி நேரங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீத சார்ஜையும் எட்டிவிடும்.

புத்தம் புதிய அட்வான்ஸ்டு டிஎஃப்டி திரை டிஎன் 95 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை நேவிகேஷன் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த திரை வாயிலாக கால் செய்தல், சவுண்ட் சிஸ்டத்தைக் கன்ட்ரோல் செய்தல் உள்ளிட்டவற்றை செய்துக் கொள்ள முடியும்.

ஏற்கனவே கூறியதைப் போல இதுபோன்று இன்னும் பல தொழில்நுட்ப வசதிகள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ரைடு அசிஸ்ட் போன்ற வசதிகளும் இந்த மின்சார ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. பார்க்கிங், க்ரூஸ் கனட்ரோல் மற்றும் ரிவர்ஸ் ஆகிய செயல்களின்போது தேவையான வழிக்காட்டுதல்களை இந்த ரைடு அசிஸ்ட் தொழில்நுட்பம் நமக்கு வழங்கும்.

இந்த அம்சங்களை நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் எல்லா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் நம்மால் பார்க்க முடியாது. ஆகையால், தனித்துவமான வசதிக் கொண்ட இ-ஸ்கூட்டராக கோமகி டிஎன்95 காட்சியளிக்கின்றது. இதன் வருகை அதன் போட்டி நிறுவனங்களுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான ரைடிங் மோட்கள் டிஎன் 95 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஈகோ, ஸ்போர்ட்ஸ் மற்றும் டர்போ ஆகியவையே அவை ஆகும். மணிக்கு 85 கிமீ வேகத்தில் பயணிக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணிக்க முடியும். இந்த சூப்பரான வேக திறனுக்காக 5,000-Watt ஹப் மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் அதீத வேகத்தைக் கன்ட்ரோல் செய்யும்விதமாக 50 ஆம்ப் கன்ட்ரோல்லர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது ஸ்பீடு கவர்னராக செயல்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் உருவத்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. அதேவேளையில், புதிய எல்இடி டிஆர்எல் மற்றும் டூயல் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை டிஎன்95 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோமகி நிறுவனம் தன்னுடைய அப்டேட் செய்யப்பட்ட டிஎன்95 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரைடு அசிஸ்ட் வசதியை வழங்கி இருப்பது ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. நவீன கார்களில் வழங்கப்படும் மிக முக்கியமான வசதிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இதையே தன்னுடைய மலிவு விலை இ-ஸ்கூட்டரில் கோமகி தற்போது வழங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 27, 2023, 15:09 [IST]
English summary
Updated komaki tn 95 electric scooter launched in india at rs 1 31 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+