ரொம்ப ரொம்ப அழகான வீலை பெற்ற ராயல் என்பீல்டு ட்வின் பைக்குகள் வெளியீடு! இனி இன்னும் அழகா இருக்கும்..

இனி ராயல் என்பீல்டு ட்வின் பைக்குகளின் வீலும் அழகா இருக்கும்...ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடல்களில் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரட்டையர்கள் இருசக்கர வாகன மாடல்களும் அடங்கும். இந்த கவர்ச்சிகரமான பைக் மாடல்களை மேலும் பல மடங்கு கவர்ச்சியானதாக ராயல் என்பீல்டு மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த அப்கிரேட் செய்யப்பட்ட இரட்டையர்கள் மோட்டார்சைக்கிள் ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் அவற்றை விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டம் போட்டு இருக்கின்றது. ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த அப்டேட் செய்யப்பட்ட இருசக்கர வாகன மாடல்களை பிளாக்ட்-அவுட் வேரியண்டுகள் என குறிப்பிடுகின்றது.

ராயல் என்பீல்டு ட்வின் பைக்

வழக்கமான இரட்டையர்களைக் காட்டிலும் கூடுதல் கருப்பு நிற அலங்காரத்தால் இவை அழகுப்படுத்தப்பட்டு இருக்கும் என்பதையே இந்த குறிப்பெயர் நமக்கு தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி, கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக அவற்றில் புதிய அம்சங்களையும் ராயல் என்பீல்டு சேர்த்து இருக்கின்றது. அந்தவகையில், புதிதாக அலாய் வீல்களை ராயல் என்பீல்டு நிறுவனம் சேர்த்து இருக்கின்றது.

இது ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக் பிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு ஆகும். இதையே தற்போது அப்டேட் வாயிலாக இந்த இருசக்கர வாகன மாடல்களில் ராயல் என்பீல்டு சேர்த்து இருக்கின்றது. இதைபோல் இன்னும் பல அம்சங்களை புதிதாக அப்டேட்டட் ட்வின் பைக்குகளில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.

ராயல் என்பீல்டு ட்வின் பைக்

அந்தவகையில், புதியதாக எல்இடி ஹெட்லேம்புகளும் இந்த பைக்கில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே ரக எல்இடி ஹெட்லைட்டே இந்த 650 இரட்டையர்கள் பைக்கிலும் பயன்படுத்தி இருக்காங்க. தொடர்ந்து, ஸ்விட்ச் கியரும் இதில் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.

இத்தகைய அப்டேட் செய்யப்பட்ட அம்சங்கள் கொண்ட 650 ட்வின் பைக்குகளையே ராயல் என்பீல்டு வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த ஸ்விட்ச் கியரும் சூப்பர் மீட்டியோர் 650 இடம் இருந்தே பெறப்பட்டு இருக்கின்றது. இவைகளைத் தொடர்ந்து, புதிதாக யுஎஸ்பி போர்ட் ஒன்றும் டூ-வீலரில் கொடுக்கப்பட்டு உள்ளது.

ராயல் என்பீல்டு ட்வின் பைக்

இது ரைடர்கள் அவர்களின் செல்போன் போன்ற கேட்ஜெட்களை எளிதில் சார்ஜ் செய்து கொள்ள உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய நிற தேர்வுகளும் அப்டேட்டட் கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 இல் வழங்கப்பட இருக்கின்றன. பிளாக் ரே மற்றும் பார்சிலோனா ப்ளூ ஆகிய நிற தேர்வுகளே புதியதாக வழங்கப்பட இருக்கின்றன.

முன்னதாக கூறியதைப் போல் சில கருப்பு நிற உடற்கூறுகள் இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. எஞ்ஜின் கேஸ், எஞ்ஜின் ஹெட் மற்றும் எக்சாஸ்ட் பைப் உள்ளிட்டவையே கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட பாகங்கள் ஆகும். இவற்றுடன் மிக முக்கியமான மாற்றமாக ஓபிடி2 தரத்திற்கு ஏற்ப பைக்கின் எஞ்ஜினில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

ராயல் என்பீல்டு ட்வின் பைக்

இதுதவிர எஞ்ஜினில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 648 சிசி ஏர் கூல்டு பாரல்லல் ட்வின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளஸ்ட் வசதி உடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸே 650 இரட்டையர்கள் பைக்கில் பயன்படுத்தி இருக்காங்க.

More from DriveSpark

Article Published On: Friday, February 24, 2023, 15:09 [IST]
English summary
Updated royal enfield 650 twin bikes revealed with alloy wheels
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X