இது நிறைய பேரோட ஃபேவரேட் கலர் ஆச்சே! விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2 புதிய கலர் அப்ஷன் வந்துடுச்சு!
விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தற்போது 2 புதிய கலர் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சியான் மற்றும் கருப்பு நிறம் என 2 புதிய நிறங்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
ஹீரோ நிறுவனத்தின் துணை பிராண்டான விடா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக விடா வி1 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. தற்போது வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வி1 ப்ரோ மற்றும் வி1 பிளஸ் ஆகிய இரண்டு வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இதில் வி1 பிளஸ் வேரியண்டில் வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய இரண்டு நிறங்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

வி1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெள்ளை சிவப்பு மற்றும் ஆரஞ்சு ஆகிய நிறங்கள் ஆப்ஷன்களில் உள்ளன. தற்போது இந்த கலர் ஆப்ஷன்களுடன் சியான் மற்றும் கருப்பு ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்கள் புதிதாக இந்த விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டுள்ளது.
விடா நிறுவனம் சமீபத்தில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை ரூபாய் 6000 வரை அதிகரித்தது. மத்திய அரசு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மானியத்தைக் குறித்ததால் இந்த நடவடிக்கையை எடுத்தது. தற்போது ரூ1,45,900 என்ற விலையில் மும்பையிலும், ரூ1,25,900 என்ற விலையில் டெல்லி அகமதாபாத் சூரத் மற்றும் வதோதரா பகுதியிலும் இந்த ஸ்கூட்டர் விற்பனையாகி வருகிறது.
சமீபத்தில் மத்திய ஹெவி இண்டஸ்ட்ரீஸ் அமைச்சகம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மானியத்தை 40 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைத்தது. இதனால் அந்நிறுவனத்திற்கு ஒரு ஸ்கூட்டருக்கு கிடைக்கும் மானியம் ரூபாய் 32 ஆயிரம் வரை குறைந்தது. அதில் ஒரு சிறிய தொகையை மட்டுமே ஹீரோ நிறுவனம் விலை உயர்வாக அறிவித்துள்ளது.
விடா வி1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை 3.94 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கில் விற்பனைக்கு வருகிறது இந்த ஸ்கூட்டர் 0-80 சதவீத சார்ஜை 5 மணி நேரம் 55 நிமிடத்தில் நிரப்பி விடும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 110 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 6 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 3.9 கிலோ வாட் பவரை வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகம் வரை சீறிப்பாயும் திறன் கொண்டது. அதேநேரம் இந்த ஸ்கூட்டர் 0- 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.2 நொடியில் பிக்கப் செய்து விடும்.
விடா வி1 ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை 3.44 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டது. இது 0-80 சதவீத சார்ஜை 5 மணி நேரம் 15 நிமிடத்திற்குள் ஏற்றி விடும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 100 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது.
0-40 கிலோமீட்டர் வேகத்தை இந்த ஸ்கூட்டர் வெறும் 3.4 நோடிகளில் பிக்கப் செய்து விடும். இதன் டார்க் பவர் மற்றும் டாப் ஸ்பீடு எல்லாம் விடா வி1 ப்ரோ ஸ்கூட்டரை போலவே இதிலும் இருக்கிறது.இந்த ஸ்கூட்டர் தற்போது குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீதான மோகம் இந்தியாவில் அதிகமாகி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை விரும்பி வாங்கி வருகின்றனர். அவர்களுக்கு இந்த கலர் ஆப்ஷன் சிறந்த தேர்வை தேர்வு செய்ய உதவும். இது விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்


Click it and Unblock the Notifications








