பைக்க தூக்கி போட்டுட்டு எல்லாரும் இந்த சைக்கிளை வாங்க போறாங்க! விர்சுஸ் மோட்டார்ஸின் தரமான இ-சைக்கிள் அறிமுகம்

பைக்குகளையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு மிக சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள்கள் இரண்டு விற்பனைக்கு வந்து இருக்கின்றன. விர்சுஸ் மோட்டார்ஸ் (Virtus Motors) எனும் நிறுவனமே புதிதாக இ-சைக்கிள்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான விர்சுஸ் மோட்டார்ஸ் இந்தியாவின் இ-சைக்கிள் சந்தையில் இரு புதுமுக எலெக்ட்ரிக் சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஆல்ஃபா ஏ (Alpha A) மற்றும் ஆல்ஃபா ஐ (Alpha A) எனும் இரு புதிய முகங்களை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

Alpha i e-cylce

இந்த இரண்டும் இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கின்ற வகையிலான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த இரண்டையும் வாங்குபவர்களுக்கு இப்போது சலுகை விலையில் விற்பனைக்கு வழங்க விர்சுஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கின்றது. நிறுவனம் அறிமுகமாக ரூ. 15,999-ஐ விலையாக நிர்ணயம் செய்திருக்கின்றது.

ஆனால், இந்த விலையில் முதல் 5 வாடிக்கையாளர்களால் மட்டுமே இ-சைக்கிளை வாங்கிக் கொள்ள முடியும். ஒரு வேளை நீங்கள் 51 நபராக இந்த இ-சைக்கிளை வாங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கு ரூ. 17,999க்கு அதே மின்சார சைக்கிள் விற்கப்படும். இந்த விலையிலும் அனைவரும் விர்சுஸின் எலெக்ட்ரிக் சைக்கிள் கிடைத்துவிடாது.

Alpha i side design

முதல் 100 வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இதற்கு அடுத்தபடியாகவும் ஓர் சிறப்பு அறிமுக சலுகையை நிர்ணயித்து இருக்கின்றது விர்சுஸ் மோட்டார்ஸ். ரூ. 19,999, இதுவே அந்த விலை ஆகும். இந்த விலையில் எத்தனை பேருக்கு அது இ-சைக்கிளை விற்கும் என்பது தெரியவில்லை.

ஆனால், எலெக்ட்ரிக் சைக்கிளின் ஒரிஜினல் விலை ரூ. 24,999 என்று கூறப்படுகின்றது. இறுதியாக இந்த விலையிலேயே விர்சுஸின் இ-சைக்கிள் விற்கப்படும் என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது. அதேவேளையில், இதிலும் நிறுவனம் சிறப்பு சலுகை வழங்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் களமிறங்கி 7 ஆண்டுகள் ஆகிவிட்டன.

Alpha i rear design

இந்த ஆண்டு விழாவை முன்னிட்டே நிறுவனம் சிறப்பு சலுகை விலைகளை அதன் எலெக்ட்ரிக் சைக்கிள்களுக்கு நிர்ணயித்து இருக்கின்றது. மேலும், எளிதில் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளை பிரபல இ-காமர்ஸ் நிறுவனங்களிலும் (ஆன்லைன் ஷாப்பிங் தளத்திலும்) விற்பனைக்கு வழங்கத் தொடங்கி இருக்கின்றது.

ஆகையால், அமேசான் மற்றும் பஜாஜ் மால் போன்ற தளங்களில் இதை வாங்கிக் கொள்ள முடியும். அதே நேரத்தில் கடந்த காலங்களில் இந்த நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் வாயிலாக மட்டுமே தன்னுடைய இ-சைக்கிள்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Alpha a rear design

தற்போது விர்சுஸ் மோட்டார்ஸுக்கு சொந்தமாக நாட்டின் குறிப்பிட்ட சில முக்கிய நகரங்களில் விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கும் புதிய வரவான ஆல்ஃபா ஏ மற்றஉம் ஆல்ஃபா ஐ ஆகிய இ-சைக்கிள்களை வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. விர்சுஸ் மோட்டார்ஸ் இந்த புதிய இ-சைக்கிள்களை பலரின் ஃபீட்பேக்கைக் கேட்டு வடிவமைத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது.

இதன் அடிப்படையிலேயே நவீன கால அம்சங்கள் பலவற்றை அதில் நிறுவனம் வழங்கியும் இருக்கின்றது. அதாவது, எல்சிடி திரைகள் இந்த எலெக்ட்ரிக் சைக்கிளில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக முன் பக்கத்தில் சஸ்பெஷன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

LCD display

இத்துடன், டிஸ்க் பிரேக்குகள் இரு வீல்களிலும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த சைக்கிளை இந்தியாவின் எந்த மாதிரியான சாலையில் வேண்டுமானாலும் வைத்து ஓட்டிக் கொள்ளும் வகையில் விர்சுஸ் மோட்டார்ஸ் வடிவமைத்து இருக்கின்றது. மேலும், மிக முக்கியமாக 36V 8.0 Ah பேட்டரி பேக்கே எலெக்ட்ரிக் சைக்கிளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதேபோல், ஆல்ஃபா ஐ மற்றும் ஆல்ஃபா ஏ ஆகிய இரண்டிலும் 250W ஹப் மோட்டாரே (Hub Motor) பொருத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ வேகம் ஆகும். நகரங்களுக்கு சுற்றி வர இந்த ஸ்பீடே போதுமானதாக இருக்கும்.

Alpha a

மேலும், இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். அதேவேளையில், பெடல் அசிஸ்ட்டில் 60 கிமீ தூரம் வரை டிராவல் செய்யலாம். நிச்சயமாக நகர வாசிகளின் பயன்பாட்டிற்கு, குறிப்பாக, தினந்தோறும் அலுவலகம் சென்று வருபவர்களுக்கு இந்த வாகனம் மிகுந்த உதவியாக இருக்கும்.

குறிப்பாக டிராஃபிக்கில் சிக்காமல் சென்று வர இந்த இ-சைக்கிள் பெரும் உதவியாக இருக்கும். ஆல்ஃபா ஏ மற்றும் ஆல்ஃபா ஐ இந்த இரண்டிற்கும் இடையில் லேசாக வடிவ மாற்றம் மட்டுமே தென்படுகின்றது. மற்றபடி, சிறப்பம்சங்கள், பேட்டரி மற்றும் மோட்டார் என பலவற்றில் இரண்டும் இரட்டைச் சகோதரர்களைப் போல் அது தென்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே விர்சுஸ் அதன் மலிவு விலை இ-சைக்கிள்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இவற்றிற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, சைக்கிள் லவ்வர்ஸ் மத்தியில் விர்சுஸின் இ-சைக்கிள்களுக்கு சூப்பரான டிமாண்ட் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 8, 2023, 15:49 [IST]
English summary
Virtus motors launched alpha i alpha a e cycles in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X