ஏழைகளுக்கு ஏற்ற பைக்காக மாறி ஸ்பிளென்டர் இடத்தை அடித்து புடுங்குமா ஷைன் 100?

குறைந்த விலையில் பைக் வாங்க வேண்டும் என்றாலே மக்கள் மனதில் முதலில் தோன்றும் பைக் "ஸ்பிளென்டர்" பைக் அந்த அளவிற்கு இந்தியா முழுவதும் கிராமப் பகுதியை வரை ஹீரோவின் பைக் சென்றுள்ளது. ஆனால் இந்த பைக்கிற்கு போட்டியாக தற்போது ஹோண்டா நிறுவனம் புதிதாக ஷைன் 100 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஷைன் 100 பைக் குறைந்த விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்கும் மார்கெட்டில் மிகப்பெரிய அளவில் விற்பனையைப் பெற வாய்ப்பு இருக்கிறது. தற்போது இந்த பைக்கிற்கும் ஹீரோவின் ஸ்பெளன்டர் பைக்கிற்கும் உள்ள வித்தியாசத்தையும் எது சிறந்த பைக் என ஒரு ஒப்பீட்டையும் செய்யலாம் வாருங்கள்.

ஏழைகளுக்கு ஏற்ற பைக்காக மாறி ஸ்பிளென்டர் இடத்தை அடித்து புடுங்குமா ஷைன் 100?

விலை: விலையைப் பொருத்தவரை ஹோண்டா ஷைன் 100 பைக் ரூ64,900 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கை பொருத்தவரை ரூ72,420 என்ற விலையில் விற்பனையாகிறது. ஹோண்டா ஷைன் 100 பைக்கை பொருத்தவரை ஒரே வேரியன்ட் தான் ஆனால் ஸ்பிளென்டர் பிளஸ் பைக்கை பொருத்தவரை அதிகமான வேரியன்ட்கள் இருக்கிறது.

ஸ்பிளென்டர் பைக்கின் விலை ஷைன் 100 பைக்கின் விலையை விட ரூ7500 அதிகமாக இருந்தாலும் ஹீரோ நிறுவனத்தின் எச்எஃப்100 என்ற பைக் இருக்கிறது. இந்த பைக் ரூ54,962 என்ற விலையில் தான் விற்பனையாகிறது. இது ஷைன் 100 பைக்கை விட ரூ10 ஆயிரம் விலை குறைவாகும். இந்தியாவின் குறைந்த விலை பைக் என்றால் அது எச்எஃப் 100 பைக் தான்.

இன்ஜின் : ஹோண்டா ஷைன் 100 மற்றும் ஹீரோ ஸ்பிளென்டர் ஆகிய 2 பைக்குகளிலும் ஃப்யூயல் இன்ஜெக்டட் 100 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள ஒரே மாற்றம் ஸ்பிளென்டர் பிளஸ் பைக்கில் ஸ்லோப்பர் ஸ்டைல் இன்ஜினும், ஹோண்டாவின் வெர்டிகல் ஸ்டைல் இன்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா ஷைன் 100 இன்ஜின் ஃப்ரிக்ஷன் ரிடெக்ஷன் டெக்னாலஜி மற்றும் சிறப்பான மைலேஜிற்காக ஸ்மூத்னெஸ், முக்கியமாக ஃப்யூயல் பம்பை சுலபமா பராமரிப்பிற்காக வெளிப்புறத்தில் வைத்துள்ளனர். இந்த இன்ஜின் 7.61 பிஎஸ் பவரையும், 8.05 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளென்டர் பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 8.02 பிஎஸ் பவரும், 8.05 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பீட்டில் அதிக பவரை வெளிப்படுத்தும் இன்ஜின் ஹீரோ ஸ்பிளென்டர் தான். ஆனால் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பைக்கும் துடிப்பான செயல்பாடுகளுடன் இருக்கிறது. பொருட்களை ஏற்றிச் செல்லும் பயன்பாடு உள்ளவர்களுக்கு இரண்டும் சிறந்த பைக் தான். இந்த பைக்குகளில் ஹேலஜன் ஹெட்லைட், ட்வின்பாட் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்பிளென்டரில் ஐ3எஸ் ஸ்மார்ட் ஸ்டாப் டெக்னாலஜி டாப் வேரியன்டில் உள்ளது.

ஸ்பிளென்டர் பிளஸ் எக்ஸ்டெக் தான் இதில் டாப் வேரியன்ட் இந்த பைக்கில் செமி டிஜிட்டல் கிளஸ்டர், யூஎஸ்பி எல்இடி டிஆர்எல்கள், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி ஆகிய அம்சங்கள் இந்த பைக்கில் இருக்கிறது. அதிக அப்ஷன் இருப்பது ஸ்பிளென்டர் பைக்காக இருந்தாலும் ஷைன் 100 பைக்கில் அடுத்தடுத்து அப்டேட்கள் மற்றும் புதிய வேரியன்ட்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைன் மற்றும் கலர் : இரு பைக்குகளும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற டிசைனில் இந்த பைக்கை கொண்டு வந்துள்ளனர். ஹோண்டா 125 சிசி பைக்கை போலவே இந்த 100 சிசி பைக்கையும் வடிவமைத்துள்ளது. ஸ்பிளென்டர் பிளஸ் மற்றும் சூப்பர் ஸ்பிளென்டர் ஆகிய இரண்டு பைக்குகளும் டிசைனில் சிறப்பாக இருக்கிறது.

ஷைன் 100 சிறிய பைக்காக இருந்தாலும் பார்க்க பெரிய பைக் போன்ற லுக்கை கொடுக்கிறது. கலரிலும், ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளென்டர் பிளஸ் பைக்கில் மொத்தம் 9 விதமான ஷேடுகள் இருக்கிறது, ஷைன் 100 பைக் மொத்தமே 5 விதமான ஷேடுகளில் தான் விற்பனைக்கு வருகிறது.

தீர்ப்பு : ஷைன் 100 பைக்கை பொருத்தவரை அடிப்படைத் தேவையான அனைத்து விஷயங்களும் இருக்கிறது. ஹோண்டா நிறுவனம் ஸ்கூட்டராக ஆக்டிவாவை வெளியிட்டபோது அது மக்களைக் கவர்ந்தது. விற்பனையில் சாதனை படைத்தது. தற்போது தான் ஹோண்டா ஹீரோவின் ஸ்பிளென்டருக்கு போட்டியாகத் தனி பைக்கை களம் இறக்கியுள்ளது.

புதிய தயாரிப்பு மற்றும் ஹோண்டாவிற்கு இருக்கும் பெயரால் ஆரம்பத்தில் இந்த பைக்கிற்கு வரவேற்பு இருக்கிறது. ஆனால் மக்கள் இந்த பைக்கை ஓட்டி பார்த்து வழங்கும் ரிவியூவை பொறுத்தே இது ஸ்பிளென்டரின் மார்கெட்டை காலி செய்யுமா என்பது தெரியவரும் இதற்காக நாம் சில காலம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 16, 2023, 21:00 [IST]
English summary
What is the difference between honda shine 100 and hero splendor plus explained
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+