சார்ஜ் காலியாகி நடு ரோட்டுல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நின்னா என்ன செய்யனும் தெரியுமா?
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வைத்திருப்பவர்கள் நடுவழியில் சார்ஜ் தீர்ந்து போனால் என்ன செய்வார்கள் தெரியுமா? பெட்ரோல் ஸ்கூட்டரை போல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டே செல்ல முடியாது. அப்படி என்றால் எப்படி இந்த சூழ்நிலையை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓனர்கள் கையாள்வார்கள்? இது குறித்த விரிவான தகவல்கள் தான் இங்கே காண போகிறோம்.
நாம் பெட்ரோல் ஸ்கூட்டர்களில் எங்காவது வெளியில் செல்லும்போது திடீரென பெட்ரோல் முழுவதும் காலியாகி ஸ்கூட்டர் நடு ரோட்டில் நிற்கும் நிலைமை நம் வாழ்வில் ஒரு முறையாவது நமக்கு நிகழ்ந்திருக்கும். அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டால் அன்றைய நாளை விட மோசமான நாள் வேறு எதுவும் இருக்க முடியாது. அன்று நாம் செல்ல வேண்டிய விஷயம் நடக்காமல் போக கூட வாய்ப்புள்ளது.

பெட்ரோல் ஸ்கூட்டர் இப்படி வழியில் நின்றால் அதை மீண்டும் ஸ்டார்ட் செய்ய பல்வேறு வழிகள் இருக்கிறது. சாலையில் செல்லும் மற்ற டூவீலர் ஓட்டிகளிடம் உதவி கேட்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோலை வாங்கிக் கொண்டு வந்து மீண்டும் ஸ்கூட்டரில் நிரப்பி ஸ்டார்ட் செய்து பயணிக்கலாம்.
அல்லது ஸ்கூட்டரை அருகில் உள்ள பெட்ரோல் ஸ்டேஷன் வரை தள்ளிக்கொண்டே சென்று கூட பெட்ரோலை நிரப்பி விட்டு பயணிக்கலாம். ஆனால் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இப்படி நடுவழியில் சார்ஜ் தீர்ந்து போய் நின்று விட்டால் என்ன செய்ய வேண்டும். சார்ஜை நடுவழியில் போட வாய்ப்பே இல்லை.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தற்போது இந்தியாவில் ஆங்காங்கே சார்ஜரும் கிடையாது. ஊரில் ஒரு இடங்களில் மட்டுமே பொதுவான சார்ஜர் இருக்கும். அல்லது உங்கள் வீட்டில் அலுவலகத்திலோ உங்கள் வாகனத்தை சார்ஜ் போடும் சார்ஜரை நீங்கள் வைத்திருப்பீர்கள். அப்படி என்றால் நீங்கள் சார்ஜர் வைத்திருக்கும் இடத்திற்கு உங்கள் வாகனத்தை கொண்டு சென்றால் மட்டுமே சார்ஜ் போட முடியும்.
பெட்ரோல் ஸ்கூட்டரை போல நீங்கள் தள்ளிக்கொண்டு பெட்ரோல் ஸ்டேஷன் வரை சென்றால் அங்கு பெட்ரோலின் நிரப்பியவுடன் பயணிக்கலாம் ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் சார்ஜ் செய்யும் இடம் வரை தள்ளிக்கொண்டு சென்றால் கூட சார்ஜ் ஏற அதிக நேரம் எடுக்கும் அதனால் உடனே உங்கள் பயணத்தை தொடர வாய்ப்பில்லை.

இதனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்துபவர்கள் முதலில் பயணத்தை துவங்கும் முன்பே அவர்கள் செல்லும் இடம், பின்பு அங்கிருந்து அருகில் உள்ள சார்ஜர் இருக்கும் இடம் அல்லது ரிட்டன் வரும் இடம் ஆகிய எல்லா இடங்களுக்கும் சென்று வர போதுமான சார்ஜ் இருக்கிறதா என்பதை செக் செய்துவிட்டு கிளம்ப வேண்டும்.
பெரும்பாலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் தற்போது இருக்கும் சார்ஜில் எவ்வளவு கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என்ற தகவல் டேஷ் போர்டில் கிடைக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி செல்லும் இடத்திற்கும் திரும்ப வரும் இடத்திற்கும் இடையே உள்ள தூரத்தையும் கணக்கிட்டு போதுமான சார்ஜ் இருக்கிறதா என்பதை கணக்கிட்டு கொள்ள வேண்டும்.
இதையும் மீறி எலெக்ட்ரிக் வாகனங்கள் நடுவழியில் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டால் நமக்கு அங்கிருந்து தொடர்ந்து செல்ல இரண்டு வழிகள் தான் இருக்கிறது. முதல் வழி வாகனத்தை தள்ளி கொண்டு அருகில் சார்ஜர் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் பேட்டரியுடன் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எடை அதிகமாக இருக்கும். அதைத் தள்ளிக் கொண்டு போவது சிரமம்.
இரண்டாவது வழி டோ செய்து செல்வதுதான். உங்களுடன் வேறு ஒரு வாகன ஓட்டி இருந்தால் அந்த உங்கள் வாகனத்தை டோ செய்து செல்ல முடியும் ஆனால் இதில் ஏகப்பட்ட ரிஸ்க் இருக்கிறது.டோ செய்து சென்றால் விரைவாக சென்றுவிடலாம். பெரிய சிரமமும் இருக்காது. ஆனால் டிராபிக் நிறைந்த பகுதிகளில் டோ செய்து செல்வது என்பது கொஞ்சம் ஆபத்தானது தான்.
மற்றொரு வழி இருக்கிறது இது ரோடு சைடு அசிஸ்டன்ட். பெருநகரங்களில் எல்லாம் வாகனங்கள் இப்படி நடுவழியில் நின்று விட்டால் அந்த வாகனத்தை டூர் செய்து செல்லும் சில நிறுவனங்கள் இருக்கிறது. அவர்களை தொடர்பு கொண்டால் அவர்கள் வேறு வாகனத்தில் வந்து உங்கள் வாகனத்தை தோசை செய்து எடுத்துச் செல்வார்கள். நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்கள் வாகனம் சென்று விடும்.
உங்கள் எலெக்ட்ரிக் வாகனம் ஸ்வப்பபிள் பேட்டரி ஆப்ஷன் கொண்ட வாகனமாக இருந்தால் நீங்கள் பேட்டரியை மட்டும் கழட்டி எடுத்துக்கொண்டு சார்ஜ் ஏற்ற கொண்டு செல்லலாம். ஆனால் இன்று பெரும்பான்மையான எலெக்ட்ரிக் வாகனங்களில் ஸ்வப்பபிள் பேட்டரி ஆப்ஷன் கிடையாது. ஃபிக்ஸட் பேட்டரி ஆப்ஷன் உடன் தான் வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் அதில் உள்ள சிக்கல் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. பெட்ரோலுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வந்தாலும் சில தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருக்கிறது. இதை மனதில் வைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









