பைக்குல வேகமா போகும் போது முன் பிரேக்கை பிடிச்சா என்ன ஆகும் தெரியுமா? ப்ளீஸ் இதை ட்ரை பண்ணாதீங்க!

பைக்குகளில் மட்டும் ஏன் முன்பக்க பிரேக், பின்பக்க பிரேக் என தனித்தனி லிவர்கள் இருக்கிறது. நாம் எந்த பிரேக்கை பிடிக்க வேண்டும். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

என்னதான் கார் விலையுயர்ந்த காரில் பயணித்தாலும் பைக் பயணம் என்பது ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தைத் தான் தரும். பொதுவாக காரில் ஒரே ஒரு பிரேக் பெடல் தான் இருக்கும். அந்த பிரேக் பெடலை அழுத்தியதும். அது காரில் உள்ள அனைத்து பிரேக்குகளும் ஒரே நேரத்தில் ஒன்றாக வேலை செய்யும். ஆனால் பைக்குகளில் அப்படியல்ல முன் வீல் பிரேக்கிற்கு தனி லிவரும், பின் வீல் பிரேக்கிற்கு தனி லிவரும் வழங்கப்பட்டுள்ளது.

Which brake to use in bike

ஏன் பைக்கிற்கு மட்டும் இப்படி தனித்தனி லிவர் வழங்கப்பட்டுள்ளது என்று என்றாவது யோசித்துள்ளீர்கள்? இதற்குக் காரணம் பேலன்ஸிங் தான். கார்களில் 4 வீல்கள் இருப்பதால் அதை ஓட்டுநர் தான் பேன்ஸ் செய்ய வேண்டும் என்பதில்லை காரின் எடையால் வீல் சரியாகத் தரையில் பதிந்து நின்று கொள்ளும், ஆனால் பைக்கில் ஸ்டாண்டை எடுத்துவிட்டால் ஓட்டுநர் தான் பைக்கை பேன்ஸ் செய்ய வேண்டும்.

அடுத்த பிரச்சனை பைக்கின் எடை, பைக்குகளில் எடை சமமாக இருக்காது. பைக்கின் இன்ஜினிற்கு முன்னே இருக்கும் பகுதியின் எடையின் அளவும், இன்ஜினிற்கு பின்னே இருக்கும் பகுதியின் எடையின் அளவும் மாறுபடும். இந்நிலையில் தான் பிரேக் என்பது இந்த பேலன்ஸிங்கில் வித்தியாசமாகச் செயல்படும்.

Which brake to use in bike

சரி எந்த பிரேக்கை முதலில் பிடிக்க வேண்டும் எனப் பார்க்கலாம். பொதுவாகவே டூவீலர்கள் எல்லாம் ரியர் வீல் டிரைவ் தான். அதே நேரம் அதிகமான எடை ரியர் வீலில் தான் இருக்கும். இதனால் பொதுவாகப் பின்பக்க பிரேக்கை பிடிப்பது தான் பெரும்பாலான நேரங்களில் சிறந்தது. ஆனால் அப்பொழுது ஏன் முன்பக்க பிரேக்கொடுக்கப்பட்டிருக்கிறது என நீங்கள் கேட்கலாம். இது மெதுவாக நீங்கள் பயணிக்கும் போது மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது.

அதாவது நீங்கள் வேகமாகப் பயணிக்கும் போது பின்பக்க பிரேக்கை பயன்படுத்தினால் வாகனம் கண்ட்ரோலுக்கு வந்து நின்றுவிடும். ஒருவேளை நீங்கள் முன்பக்க பிரேக்கை வேகமாக வரும் போது பயன்படுத்தினால் பைக்கில் அமர்ந்திருப்பவர்களைத் தூக்கி வீசக்கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் எப்பொழுதும் பின்பக்க பிரேக்கை பயன்படுத்துவது தான் நல்லது.

Which brake to use in bike

ஒரு வேளை நீங்கள் சிட்டி டிராஃபிக்கில் மெதுவாகச் சென்று கொண்டிருக்கிறீர்கள் முன்பக்கம் உங்களை ஒட்டி செல்பவர் திடீரென பிரேக் அடித்துவிட்டால் உங்கள் பைக் அவரது வாகனத்தில் மோதாமல் இருக்க முன்பக்க பிரேக்கை பயன்படுத்தினால் உடனடியாக உங்கள் பைக் நிற்கும். மெதுவாகச் செல்வதால் சிறிய ஜெர்க் மட்டுமே இருக்கும் உங்களைத் தூக்கி வீசாது. இந்த பயன்பாட்டிற்காகத் தான் முன்பக்க பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

இதைக் கணக்கிட்டே பைக்குகளில் முன்பக்க பிரேக்கை ஆக்ஸிலரேட்டர் இருக்கும் பகுதியில் வழங்கியுள்ளனர். இதனால் ஆக்லரேட்டர் அதிகமாக திருக்கப்பட்டிருக்கும் போது எளிதாக இதைப் பிடிக்க முடியாது என்பதால் வலது பக்க ஹேன்பரில் முன்பக்க பிரேக்கை வழங்கியுள்ளனர். இடது ஹேண்பரில் கியர் பைக்குகளில் கிளட்சையும், ஸ்கூட்டர்களில் பின்பக்க பிரேக்கையும் வழங்கியுள்ளனர்.

வேகமாக வரும் போது முன்பக்க பிரேக்கை பிடித்தால் தூக்கி வீசுவது எல்லாம் சாதாரண பிரேக்கில் தான். ஆனால் இன்று ஏபிஎஸ் தொழிற்நுட்பம் வந்துவிட்டது. இந்த தொழிற்நுட்பம் உள்ள வாகனத்தில் முன்பேக்கில் ஏபிஎஸ் இருந்தால் என்னதான் நீங்கள் வேகமாகச் செல்லும் போது பிரேக் பிடித்தாலும் இது உங்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தாமல் நின்றுவிடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக்கில் பின்பக்க பிரேக்கை தான் முதலில் பிடிக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும். இன்றும் பலர் அவசரத்திற்கு முன்பக்க பிரேக்கை வேகமாகச் செல்லும் போது பிடித்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். இதனால் பிரேக்கிங் எப்படி வேலை செய்கிறது என டூவீலர் ஓட்டும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அப்படித் தெரிந்து கொண்டால் தான் விபத்தைத் தவிர்க்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 29, 2023, 11:00 [IST]
English summary
Which brake to use first two wheeler front or back
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X