மோட்டோ ஜிபி ரேஸர்கள் காதில் இந்த விஷயத்தை மாட்டிகிட்டு தான் ரேஸூக்கு போவாங்க! ஏன் தெரியுமா?

மோட்டோ ஜிபி பாரத் போர்ட்டிகள் இன்று நொய்டாவில் துவங்கும் நிலையில் இந்த மோட்டோ ஜிபி போட்டிக்காக பயன்படுத்தப்படும் பைக்குகள் குறித்த ஒரு சுவாரசியமான தகவலை தான் இங்கு காணப் போகிறோம். சாலையில் ஓட்டும் பைக்குகளுக்கும் இந்த பைக்கிற்க்கும் என்ன வித்தியாசம்? ஏன் மோட்டோ ஜிபி பாரத் போட்டிக்கு சில வித்தியாசமான பைக்குகள் பயன்படுத்தப்படுகிறது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மோட்டோ ஜிபி என்ற போட்டி டூவீலர்களுக்கான ரேஸ் பந்தயம் ஆகும். இது உலக அளவில் மிகவும் பிரபலமான போட்டியாக இருக்கிறது. பல டூவீலர் ரேஸ் ரசிகர்கள் இந்த போட்டியை நேரில் காண ஆர்வமாக இருந்து வருகின்றனர். இந்த போட்டி இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே நடந்து வந்தது. தற்போது முதல் முறையாக இன்று இந்தியாவில் இந்த போட்டிகள் துவங்குகிறது. இன்று துவங்கி வரும் 24ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகிறது.

Moto GP Bharat

நொய்டா பெருநகர் பகுதியில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்ற ரேஸ் டிராக்கில் தான் இந்த போட்டிகள் எல்லாம் நடக்க உள்ளன. இந்த போட்டியில் மொத்தம் பதினோரு டீம்கள் மூலம் 22 ரைடர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில் பயன்படுத்தப்படும் பைக்குகள் எல்லாம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு தற்போது போட்டிக்காக புக் இன்டர்நேஷனல் சர்க்யூட் தயாராக இருக்கிறது.

இந்த போட்டிக்கு பயன்படுத்தப்படும் பைக்குகளுக்கும் சாலையில் உள்ள பைக்குகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. எல்லாம் பைக்குகள் தானே இதுல என்ன வித்தியாசம் இருக்கிறது என நீங்கள் கேட்கலாம். நீங்கள் சாலையில் செல்லும் பைக்கில் பெரிய அளவில் சத்தத்தை எழுப்பாது. ஆனால் இந்த மோட்டோ ஜிபி போட்டிகளில் பயன்படுத்தப்படும் பைகள் எல்லாம் மிக அதிகமான சத்தத்தை எழுப்பும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

Moto GP Bharat

இதற்கு பின்னால் ஒரு அறிவியல் இருக்கிறது. மோட்டோ ஜிபி போட்டிகளில் பயன்படுத்தப்படும் பைக்குகள் எல்லாம் 1000 சிசி திறன் கொண்ட 4 ஸ்டோக் 4 சிலிண்டர் இன்ஜின் பைக்காகவே இருக்கிறது. இப்படியான அதிக திறன் கொண்ட பைக்கில் வேகமாக செல்ல வேண்டும் என்றால் அதன் கம்பஷன் மிக வேகமாக நடக்க வேண்டும். அப்படி நடந்தால் தான் அதன் ஆர்பிஎம் மிக சீக்கிரத்தில் அதிகமாகும்.

இதற்கு மிக முக்கியமான தடையாக இருப்பது சைலன்ஸராக இருக்கும். அதாவது கம்பஷனில் இருந்து வெளியேறும் மாசு சைலென்சர் வழியாக வெளியேற அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அதன் மூலம் உருவாகும் பிரஷர் கம்பேஷன் மெதுவாக நடக்கத் தொடங்கிவிடும். இதனால் நாம் எதிர்பார்த்த அளவுக்கு விரைவாக ஆர்பிஎம் ஏறாது.

Moto GP Bharat

இதனால் இந்த பைக்கில் உள்ள சைலென்சரை விரைவாக மாசுவை வெளியேற்றும் வகையில் வடிவமைத்திருப்பார்கள். அதற்காக சைலென்சரை சிறியதாக வைத்திருப்பார்கள். இந்த இடத்தில் இருந்து வெளியாகும் சத்தத்தை குறைப்பதற்கான கருவிகளை எல்லாம் பொருத்தியிருக்க மாட்டார்கள். இதனால் இந்த பைக்குகளில் உள்ள சைலென்ஸிலிருந்து அதிகமான சத்தம் வெளியாகும்.

சாலையில் பயன்படுத்தப்படும் பைக்குகளில் இதே 1000 சிசி பைக்கில் வெளியாகும் சத்தத்தை விட 20 மடங்குக்கும் அதிகமான சத்தம் இந்த மோட்டோ ஜிபி பாரத் போட்டியில் பங்கேற்கும் பைக்கில் இருந்து வெளியாகும். இந்த சத்தம் எந்த அளவிற்கு இருக்கும் என்றால் ரேஸ் நடக்கும் சற்று தொலைவில் தான் பார்வையாளர்கள் கேலரி இருக்கும் அங்கு இருப்பவர்களுக்கே காது கிழியும் அளவுக்கு சத்தம் இருக்கும்.

இந்த சத்தத்தால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே மோட்டோ ஜிபி பாரத் போட்டியில் பங்கேற்கும் ரைடர்கள் தங்கள் காதுகளில் இயர் பளக்குகளை அணிந்து கொள்வார்கள். இதன் மூலம் வெளியில் உள்ள சத்தம் அவர்கள் காதில் உள்ளே செல்லாமல் தடுக்கப்படும். இதனால் அவர்கள் காது பாதுகாக்கப்படும். மோட்டோ ஜிபி பாரத் போட்டியிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முதன்முறையாக மோட்டோ ஜிபி பாரத் போட்டி நடக்கிறது. இது இந்தியாவில் உள்ள டூவீலர் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கிறது. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான மக்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் இந்த பைக்குகளில் உள்ள சத்தத்தை ரசிப்பதற்காகவே போட்டியை நேரில் காண செல்கிறார்கள்

More from DriveSpark

Article Published On: Friday, September 22, 2023, 11:06 [IST]
English summary
Why do moto gp bikes have more noise than regular bikes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X