இப்ப வர நிறைய பைக்குல கிக்கரே இருக்காது ஏன் தெரியுமா?

இன்று விற்பனையாகி வரும் சில பைக்குகளில் கிக்கர் என்ற பாகமே இல்லாமல் இருக்கிறது. இப்படியாக சில பைக்குகளில் மட்டும் ஏன் கிக்கர் வழங்கப்படுவதில்லை? இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஒரு காலத்தில் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் கிக்கரை போட்டு உதை உதை என உதைப்போம். எப்படியாவது பைக்கை ஸ்டார்ட் செய்துவிட வேண்டும் என இதைச் செய்வோம். பைக் வைத்திருக்கும் பலருக்கு இது பிரச்சனை இருந்தது. இதற்காகத் தான் செல்ஃப் ஸ்டார்ட் தொழிற்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. பட்டனை அழுத்தினாலே பைக் ஸ்டார்ட் ஆகிடும் என்பது மக்களை ஆச்சரியப்படுத்தியது.

No Kicker in Bike

அதன் பின் பெரும்பாலான பைக்குகளில் கிக்கருடன் செல்ஃப் ஸ்டார்ட் பட்டன்களும் வந்துவிட்டன. ஆனால் இன்று சில பைக்குகளில் கிக்கர் என்ற பாகமே இல்லாமல் செல்ஃப் ஸ்டார்ட் மட்டும் இருக்கிறது. இது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இதற்கு 4 முக்கியமான காரணங்கள் இருக்கிறது. அதைப் பற்றித் தான் காணப்போகிறோம்.

ஃப்யூயல் இன்ஜெக்டர்: பொதுவாக பைக்கில் பெட்ரோல் டேங்கிலிருந்து இன்ஜினிற்குள் பெட்ரோல் செல்லும் பகுதியில் கார்பரேட்டர் இருக்கும். தற்போது அட்வான்ஸ்டு தொழிற்நுட்பத்தால் ஃப்யூயல் இன்ஜெக்டர் என்ற கருதிப் பொருத்தப்படுகிறது. இதில் பெட்ரோலுக்கும் மூழ்கியிருக்கும் பம்ப் இருக்கும். இந்த பம்ப் செயல்பட 9வோல்ட் பவர் தேவைப்படும். ஆனால் கிக்கர் மூலம் பைக்கை ஸ்டார்ட் செய்தால் 9 வோல்ட் பவர் கிடைக்காது. அதனால் இந்த பைக்குகளில் கிக்கரை பயன்படுத்த முடியாது. இதனால் ஃப்யூயல் இன்ஜெக்டர் இருக்கும் பைக்குகளில் கிக்கர் இருக்காது.

No Kicker in Bike

அட்வான்ஸ்டு செல்ஃப் ஸ்டார்ட்: சில பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ள செல்ஃப் ஸ்டார்ட் சிஸ்டம் அட்வான்ஸ்டு சிஸ்டமாக இருக்கும். இதில் செல்ஃப் ஸ்டார்ட் வேலை செய்யாமல் போக வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கிக்கருக்கான தேவையே இருக்காது. பேட்டரி குறைந்தாலும் செல்ஃப் மட்டுமல்ல மற்ற பாகங்களும் வேலை செய்யாது. அதனால் கிக்கருக்கு அங்கு வேலையில்லை என்பதால் இந்த தொழிற்நுட்பம் கொண்ட பைக்குகளில் கிக்கர் இருக்காது.

டிசைன்: சில பைக்குகளை வடிவமைக்கும் போது அது ரேஸ் பயன்பாட்டிற்காக உருவாக்குவார்கள். இந்த பைக்கில் ஏரோ டைனமிக்ஸ் டிசைன்தான் மிகவும் முக்கியம். கிக்கர் இருப்பதால் இதன் ஏரோ டைனமிக்ஸ் பாதிக்கப்படும் என தயாரிப்பார்கள் கருதினால் அதில் கிக்கரை அகற்றிவிடுவார்கள். இதனால் பெரும்பாலான ரேஸ் பைக்குகளில் கிக்கர் இருப்பதில்லை.

No Kicker in Bike

செலவு குறைப்பு: சில தயாரிப்பு நிறுவனங்கள் கிக்கர் இல்லாமல் வாகனங்களை வெளியிடுவதற்கு தயாரிப்பு செலவை குறைக்கும் நோக்கம் என விளக்கம் அளித்துள்ளன.ஆனால் இது லாஜிக்காக பார்த்தால் இதில் எவ்வளவு பணத்தை குறைக்க முடியும் என தெரியவில்லை. ஆனால் அந்நிறுவனம் அளிக்கும் விளக்கத்தை ஏற்பதை தவிர வேறு வழியில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டூவீலர்களில் கிக்கரை மதித்து ஸ்டார்ட் செய்வது ஒரு விதமான அனுபவத்ததை வழங்கும். தற்போது வரும் செல்ஃப் ஸ்டார்ட் வாகனங்களில் அது கிடைக்காது. ஆனால் வளர்ந்து வரும் தொழிற்நுட்பம் காரணமாக விரைவில் கிக்கர் ஒரு பழைய, வழக்கிலிருந்து ஒழிந்து போன விஷயமாக மாறிவிடும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 6, 2023, 16:30 [IST]
English summary
Why do some motorcycle don t have a kicker to start
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X