யமஹாவை இந்தியாவில் காப்பாற்றுவதே இந்த ஒரு பைக் தான்!! நிறைய பேர் இப்போதும் விரும்பி வாங்கும் யமஹா பைக்!

யமஹா (Yamaha), இந்தியாவில் 2-வீலர்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம். ஒவ்வொரு மாதமும் யமஹாவில் இருந்து இந்தியாவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான 2-வீலர்கள் விற்பனையாகுகின்றன. இந்த நிலையில், கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் யமஹாவில் இருந்து விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை இனி பார்க்கலாம்.

யமஹா இந்தியா நிறுவனத்தில் இருந்து கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் மொத்தம் 67,784 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் 59,187 2-வீலர்களை மட்டுமே இந்திய சந்தையில் யமஹா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், யமஹா 2-வீலர்கள் விற்பனை கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் 8,597 யூனிட்கள் அதிகரித்து உள்ளது.

yamaha 2-wheelers october sales report

அதேபோல், 2023 செப்டம்பர் மாதத்திலும் 64,182 இருசக்கர வாகனங்களை மட்டுமே யமஹா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது. இதன்படி பார்க்கும்போது, செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அக்டோபர் மாதத்தில் 3,602 யமஹா 2-வீலர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன. யமஹா பிராண்டில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படக்கூடிய 2-வீலராக கடந்த சில வருடங்களாக எஃப்.இசட் பைக்குகள் விளங்குகின்றன.

கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் சரியாக 18 ஆயிரம் யமஹா எஃப்.இசட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. அதுவே, 2022 அக்டோபர் மாதத்தில் யமஹா எஃப்.இசட் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை ஆனது 20 ஆயிரத்தை கடந்திருந்தது. இந்த வகையில், கடந்த மாதத்தில் 2,440 எஃப்.இசட் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

yamaha 2-wheelers october sales report

ஆனால், 2023 செப்டம்பரில் வெறும் 14,872 எஃப்.இசட் பைக்குகளை மட்டுமே யமஹா நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது. இந்த வகையில், கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் 3,128 எஃப்.இசட் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன. எஃப்.இசட் பைக்கிற்கு அடுத்து இந்த வரிசையில் ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் 2வது இடத்தை தனதாக்கி உள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 13,870 ஆகும். ஆனால் 2022 அக்டோபரில் 11,683 ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களும், 2023 செப்டம்பரில் 15,904 ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து, ஆச்சிரியப்படுத்தும் விதமாக ஆர்15 பைக்குகள் 3வது இடத்தில் உள்ளன.

yamaha 2-wheelers october sales report

ஏனெனில், 2022 அக்டோபரில் 8,037 ஆர்15 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த அக்டோபர் மாதத்தில் அதனை காட்டிலும் 4,927 யூனிட்கள் அதிகமாக சுமார் 12,964 ஆர்15 பைக்குகளை யமஹா விற்பனை செய்துள்ளது. 2023 செப்டம்பர் மாதத்திலும் கூட 11,131 ஆர்15 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் 11,610 யூனிட்களின் விற்பனை உடன் 4வது இடத்தில் உள்ளது. 2022 அக்டோபரில் 10,501 ஃபேஸினோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து கடைசி 2 இடங்களில் எம்டி15 மற்றும் ஏரோக்ஸ் ஸ்கூட்டர் உள்ளன. இவை இரண்டின் கடந்த அக்டோபர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 8,736 மற்றும் 2,604 ஆகும். இதில், ஏரோக்ஸ் ஸ்கூட்டர் கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

yamaha 2-wheelers october sales report

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில் யமஹா எஃப்.இசட் பைக்குகளின் விற்பனை ஆரம்பத்தில் இருந்த அளவிற்கு இல்லை. இருப்பினும், இப்போதும் யமஹாவின் நம்பிக்கைக்குரிய தயாரிப்பாக இந்தியாவில் எஃப்.இசட் விளங்குகிறது. அதேபோல், யமஹா ஆர்15 பைக்குகளின் விற்பனையும் அதிகரித்து வருவது, இந்தியாவில் வாடிக்கையாளர்களின் இரசனை மாறி வருவதை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 22, 2023, 23:32 [IST]
English summary
Yamaha 2 wheelers sales report fz bikes at top check all details here
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X