யமஹா ஏராக்ஸ் 155 மோட்டோ ஜிபி எடிசன் வந்தாச்சு! விலை இவ்வளவு தானா?
யமஹா நிறுவனம் தனது பைக்குகளில் வரிசையாக மோட்டோ ஜிபி எடிசர்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்போது தனது ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரின் மோட்டோ ஜிபி எடிசனை ரூபாய் 1.48 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஏராக்ஸ் மோட்டோ ஜிபி 155 ஸ்கூட்டர் லிமிடெட் எடிஷன் ஆக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே தயாரித்து விற்பனைக்கு வர உள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காரணம் பாருங்கள்.
இந்தியாவில் மோட்டோஜிபி பைக் ரேஸ் போட்டிகள் நடைபெற்றது. இதை கொண்டாடும் விதமாக யமஹா நிறுவனம் தனது பைக்குகளில் மோட்டோஜிபி லிமிடெட் எடிசனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் படி ஏற்கனவே தனது ஒய்இசட்எஃப்ஆர்15, எம்டி15 வெர்ஷன் 2.0 மற்றும் ரே இசட்ஆர் 125 ஹைபிரிட் ஆகிய வாகனங்களில் மோட்டோ ஜிபி எடிசன்களை அறிமுகப்படுத்தி இருந்தது. அந்த வரிசையில் தற்போது தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் மோட்டோஜிபி எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாதாரணமாக ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் ரூபாய் 1.44 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது ஆனால் இந்த மோட்டோ ஜிபி ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் ரூபாய் 1.48 லட்சம் என்ற வி.லையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இந்த ஸ்கூட்டரில் கிளாஸ் டி ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகமான வெளிச்சமும் நல்ல விசிபிலிட்டியும் இரவு நேரத்தில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுபோக இந்த பைக்கில் பின்பக்க வீல் ஸ்லிப் ஆனால் தானாக பவர் கட் ஆகும் டிராக்சன் சிஸ்டம் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் இன்ஜினை பொறுத்தவரை 155 சிசி ப்ளூ கோட் லிக்யூட் கோல்ட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினில் வேரியபிள் ஆக்டிவேஷன் சிஸ்டம் இருக்கிறது. இது சிவிடி கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதே என்ஜின் தான் ஒய்இசட்எஃப் ஆர்15 எம் மற்றும் எம்டி 15 வெர்ஷன் 2.0 ஆகிய வாகனங்களிலும் இருக்கிறது. இந்த இன்ஜின் 14.79 பிஎச்பி பவரை 8000 ஆர்பிஎம்மிலும் 13.9 என்எம் டார்க் திறனை 6500 ஆர்பிஎம்மிம் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது இ20 பெட்ரோலின் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
யமஹா நிறுவனம் தனது மோட்டோ ஜிபி எடிசன் வாகனங்களாக ஒய்இசட்எஃப் ஆர்15 எம் மற்றும் எம டி 15 வெர்ஷன் 2.0, ரே இசட் ஆர் 125 ஹைபிரிட் ஆகிய வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலைகள் முறையே ரூபாய் 1.97 லட்சம் ரூபாய் 1.73 லட்சம் ரூபாய் 92,330 என்ற விலைகளில் விற்பனை செய்து வருகிறது.
எமக நிறுவனம் தற்போது தனது புதிய ஆர் 3 மற்றும் எம்டி 03 ஆகிய பைக்குகளை இந்திய மார்க்கெட்டில் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு பைக்குகளும் மோட்டோ ஜிபி பாரத் நிகழ்ச்சியின் போது காட்சிப்படுத்தப்பட்டது. இந்த பைக்குகள் வரும் டிசம்பர் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஆர்3 பைக் முழுமையான ஸ்போர்ட் பைக் ஆகவும் எம்டி 03 பைக் நேக்கட் ஸ்ட்ரீட் பைட்டர் பைக்காகவும் அறிமுகம் ஆக உள்ளது. யமஹா நிறுவனம் தனது டூவீலர் மார்க்கெட்டில் இந்தியாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருக்கிறது. இளைஞர்களுக்கு பிடித்த பல பைக் மற்றும் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
யமஹா நிறுவனம் ரேஸிங் பிரியர்களையும் அதிகம் கவரும் வகையில் தான் தனது வாகனங்களையே வடிவமைத்து வருகிறது. ரேஸிங் மன நிலையில் இருப்பவர்களை அவ்வப்போது ஒங்கினைத்து நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. பைக் ரேஸிங்கில் யமஹா நிறுவனம் நீண்ட கால அனுபவத்தை பெற்ற ஒரு நிறுவனமாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹா நிறுவனம் மோட்டோ ஜிபி போட்டியை மையமாக வைத்து தனது வாகனங்களில் மோட்டோ ஜிபி எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. யமஹா பைக்கை விரும்பும் பலர் மோட்டோ ஜி பி ரசிகர்களாகவும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications








