சூப்பரான சலுகைகள்... இந்த பொங்கலுக்கு யமஹா எஃப்.இசட் பைக்கை புக் செஞ்சிட வேண்டியதுதான்!!

பண்டிகை காலம் வந்தாலே வாகன உற்பத்தி நிறுவனங்கள் குஷியாகிவிடுவது வழக்கமே. ஏனெனில் நம் நாட்டில் அத்தகைய நாட்களிலேயே புதிய வாகனங்களை வாங்க பெரும்பாலானோர் விரும்புவர் என்பது வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் அத்தகைய சமயத்தை உபயோகப்படுத்தி கொள்ள சலுகைகள் குறித்த அறிவிப்புகள் பண்டிகை காலத்தில் வெளிவருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யமஹா அட்டகாசமான சலுகைகளை அதன் 150சிசி எஃப்.இசட் பைக்குகள் மற்றும் ஃபேஸினோ 125 ஃப்யுல்-இன்ஜெக்டட் ஹைப்ரீட் ட்ரம் பிரேக் ஸ்கூட்டருக்கு அறிவித்துள்ளது. இதுகுறித்து யமஹா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி பார்க்கும்போது, எஃப்.இசட் 15 பைக்குகளை இந்த குறிப்பிட்ட காலத்தில் வாங்குவோர் ரூ.7,000 வரையிலான பணம் தள்ளுபடியை பெற முடியும். அத்துடன் பைக்கை ரூ.7,999 என்ற குறைந்த முன்தொகையில் முன்பதிவு செய்யலாம்.

யமஹாவின் அசத்தலான பொங்கல் சலுகைகள் அறிவிப்பு!!

மேலும், ரூ.1,999இல் இருந்து துவங்கும் மாதத்தவணை திட்டத்தை பெறுவதுடன், பூஜ்ஜிய இண்ட்ரஸ்ட் ரேட்டையும் பெற முடியும். மறுப்பக்கம், ஃபேஸினோ 125 ஃப்யுல்-இன்ஜெக்டட் ஹைப்ரீட் ட்ரம் ஸ்கூட்டரை வாங்குவோருக்கு ரூ.1,500 பணம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை ரூ.3,999 என்ற குறைந்தப்பட்ச டவுன் பேமண்ட்டிலும், ரூ.1,999 என்ற குறைந்தப்பட்ச மாதத்தவணை திட்டத்திலும் பெறலாம். ஃபேஸினோ 125 ஹைப்ரீட் ட்ரம் ஸ்கூட்டரையும் இந்த பண்டிகை காலத்தில் பூஜ்ஜிய இண்ட்ரஸ்ட் ரேட்டில் வாங்கலாம்.

பொங்கல் பண்டிகை காலம் ஜனவரி 17ஆம் தேதி வரையில் தான் என்றாலும், யமஹா நிறுவனம் இந்த சலுகைகள் இந்த ஜனவரி 31ஆம் தேதி வரையில் முழு மாதத்திற்கும் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யமஹாவின் இந்த பொங்கல் சலுகைகள் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே. அதாவது தமிழ்நாட்டில் உள்ள யமஹா டீலர்ஷிப்களில் மட்டுமே இந்த சலுகைகளை பெற முடியும். இந்த சலுகைகள் குறித்து கூடுதல் விபரங்களை அறிய அருகில் உள்ள யமஹா டீலர்ஷிப் மையத்தினை அணுகவும்.

யமஹாவின் அசத்தலான பொங்கல் சலுகைகள் அறிவிப்பு!!

யமஹா 150சிசி எஃப்.இசட் பைக்குகளை பொறுத்தவரையில், இவை எஃப்.இசட் & எஃப்.இசட்-எஸ் என்ற இரு விதமான மாடல்களில் கிடைக்கின்றன. இதில் எஃப்.இசட்-எஸ் மாடல் ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் வழங்கப்படுகிறது. எஃப்.இசட் மற்றும் எஃப்.இசட்-எஸ் என்ற இரு மாடல்களிலும் 149சிசி ஏர்-கூல்டு, 2-வால்வு, சிங்கிள்-சிலிண்டர் ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,250 ஆர்பிஎம்-இல் 12.4 பிஎஸ் மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 13.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

எஃப்.இசட் 15 பைக்குகளில் யமஹா நிறுவனத்தின் தொழிற்சாலையிலேயே தயாரிக்கப்படும் சைடு-ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆஃப் ஸ்விட்ச் தொழிற்நுட்பமும் வழங்கப்படுகிறது. அத்துடன் நெகட்டீவ் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் சிங்கிள்-பீஸ் சீட் உள்ளிட்ட சிறப்பம்சங்களும் இந்த பைக்குகளில் கொடுக்கப்படுகின்றன. பிரேக்கிங் பணியை எஃப்.இசட் பைக்குகளில் முன் & பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் கவனித்து கொள்கின்றன. அவற்றுடன் கூடுதல் பாதுகாப்பிற்கு சிங்கிள் சேனல் ஏபிஎஸ்-உம் கொடுக்கப்படுகிறது.

யமஹாவின் அசத்தலான பொங்கல் சலுகைகள் அறிவிப்பு!!

ஃபேஸினோ 125 ஸ்கூட்டர் ஆனது தற்போது முற்றிலுமாக ஹைப்ரீட் வெர்சனில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டாண்டர்ட், டீலக்ஸ் மற்றும் ஸ்பெஷல் எடிசன் என 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த ஹைப்ரீட் ஸ்கூட்டரை ட்ரம் அல்லது டிஸ்க் பிரேக்குகளுடன் வாங்கலாம். 125சிசி ஏர்-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்படுகிறது. இது முன்பு விற்பனையில் இருந்த 113சிசி ஃபேஸினோ ஸ்கூட்டரை காட்டிலும் 30% கூடுதல் ஆற்றலையும், 16% கூடுதல் மைலேஜையும் வழங்கக்கூடியதாக விளங்குகிறது.

ஃபேஸினோ 125 ஹைப்ரீட் ஸ்கூட்டரின் என்ஜின் அமைப்பில் ஆட்டோமேட்டிக் ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் உள்ளிட்ட தொழிற்நுட்பங்களும் அடங்குகின்றன. இவை இரண்டு மட்டுமின்றி, யமஹா பிராண்டில் இருந்து இந்திய சந்தையில் ஆர்15 வெர்சன் 4.0, ஆர்15 எஸ் வெர்சன் 3.0, எம்டி-15 வி2.0, எஃப்,இசட்25, எஃப்.இசட்-எஸ்25, எஃப்.இசட்-எக்ஸ் பைக்குகளும், ஏரோக்ஸ், ரே இசட்.ஆர் 125 ஹைப்ரீட் மற்றும் ரே இசட்.ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 உள்ளிட்ட ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, January 9, 2023, 19:27 [IST]
English summary
Yamaha announces exciting pongal offers in tamil nadu
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+