யமஹா தயாரிப்பு செம்ம ஸ்டைலா இருக்கு!! விலைகள் அறிவிச்சாச்சு... வாங்குவதற்கு இந்த தீபாவளி சரியான நேரம்!
யமஹா (Yamaha) நிறுவனம் 2023ஆம் ஆண்டிற்கான மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோ ஜிபி தீம் கொண்ட இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, யமஹாவின் ஆர்15, எம்டி-15 பைக்குகள் மற்றும் ரே இசட்.ஆர் 125 ஸ்கூட்டரை இனி மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோ ஜிபி தீம்-இல் பெறலாம்.
யமஹா நிறுவனம் "தி கால் ஆஃப் தி ப்ளூ" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருவது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியும். விற்பனையில் இருக்கும் யமஹா 2-வீலர்கள் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வருடமும் மான்ஸ்டர் என்ர்ஜி உடையில் குறிப்பிட்ட காலத்திற்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இந்த வகையில் இந்த 2023ஆம் வருடத்திற்கான யமஹா மான்ஸ்டர் எனர்ஜி வாகனங்கள் தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. யமஹா ஏரோக்ஸ் மேக்ஸி ஸ்கூட்டரின் மான்ஸ்டர் எனர்ஜி வெர்சன் மிக சமீபத்தில் தான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது யமஹாவின் ஸ்போர்ட் பைக்கான ஒய்.இசட்.எஃப்-ஆர்15, நாக்டு பைக்கான எம்டி-15 வெர்சன் 2.0 மற்றும் ரே இசட்.ஆர்125 ஹைப்ரீட் ஸ்கூட்டர் ஆகியவை யமஹாவின் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி வெர்சனை பெற்றுள்ளன.
இதில் ஆர்15 எம் மான்ஸ்டர் எனர்ஜியின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1,97,200 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பிரபலமான யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்15 பைக்கில் கடந்த சில வருடங்களாக எம் என்ற செயல்திறன்மிக்க வேரியண்ட் வழங்கப்படுகிறது. ஆர்15 எம் வழக்கமான ஆர்15 பைக்கை காட்டிலும் தோற்றத்திலும் சற்று வித்தியாசமாக இருக்கும்.

இந்த ஒய்.இசட்.எஃப்-ஆர்15 எம் வேரியண்ட்டில் தான் புதிய மான்ஸ்டர் எனர்ஜி வெர்சன் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதனால் தான் இது ஆர்15 எம் மான்ஸ்டர் எனர்ஜி என அழைக்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,97,200ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்க, எம்டி-15 வி2.0 மான்ஸ்டர் எனர்ஜி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,72,700 ஆகவும், ரே இசட்.ஆர் 125 மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி ஸ்கூட்டரின் விலை ரூ.92,330 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த மான்ஸ்டர் எனர்ஜி எடிசன் வாகனங்களை யமஹாவின் பிரீமியம் ப்ளூ ஸ்கௌயர் டீலர்ஷிப் மையங்கள் வாயிலாக வாங்கலாம். யமஹாவின் மான்ஸ்டர் எனர்ஜி வாகனங்கள் அவற்றின் லிவேரியினால் அடையாளப்படுத்தப்படுகின்றன. மான்ஸ்டர் எனர்ஜி வாகனங்கள் அவற்றின் நக கீறல் டிசைனினால் பிரபலமானவை. ஆர்15 மற்றும் எம்டி15 பைக்குகளில் இந்த கீறல் டிசைன் பெட்ரோல் டேங்கின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

அதுவே, ரே இசட்.ஆர் 125 ஹைப்ரீட் ஸ்கூட்டரில் முன்பக்க கௌல் பகுதியில் மான்ஸ்டர் எனர்ஜியின் நக கீறல் இடம் பெற்றுள்ளது. "இந்தியாவில் நடக்கும் முதல் மோட்டோஜிபி பந்தயத்தை காண்டதில் யமஹா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் நிலவுகிறது. அந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் 2023 மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோஜிபி எடிசன் வாகனங்கள் அறிமுகமாகியுள்ளன" என யமஹா மோட்டார் இந்தியா குழுமத்தின் தலைவர் இஷின் சிஹானா தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மோட்டோஜிபி கொண்டாட்டத்தை நீட்டிக்கும் வகையில் இவை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக யமஹா கூறினாலும், இந்த மான்ஸ்டர் எனர்ஜி வாகனங்கள் வருட இறுதி பண்டிகை காலத்தை டார்க்கெட் செய்தே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன என்பது தெளிவாக தெரிகிறது. இன்னும் சில வாரத்திற்கு யமஹாவின் டீலர்ஷிப் ஷோரூம்களில் இவை வெளியில் இருந்து பார்த்தாலே தெரியும் வகையில் முதலாவதாக காட்சிப்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications









