யமஹா ரசிகர்களுக்கு இன்னிக்கு தான் தீபாவளி! வரிசையா 4 பைக்கை அறிமுகப்படுத்திட்டாங்க!
யமஹா நிறுவனம் இந்தியாவில் பைக்குகளை விற்பனை செய்யும் ஒரு முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் ஏகப்பட்ட பைக்குள் விற்பனை சூடுபிடித்துள்ளது. நிறுவனத்தின் தரம் மற்றும் தொழிற்நுட்பம் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இந்நிலையில் யமஹா நிறுவனம் இன்று ஆன்லைன் மூலமாக ஒரு விர்ச்சுவல் லாஞ்ச் ஈவென்ட் நடக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றல்ல இரண்டல்ல 4 பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சி குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.
யமஹா இந்நிகழ்ச்சியின் முதல் கட்டமாகத் தனது பைக்குகளை அறிமுகப்படுத்தும் முதன் தனது புதிய தொழினுட்பமாக டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. யமஹா நிறுவனம் இனி இந்த சிஸ்டத்தை அடுத்தடுத்து தனது தயாரிப்பில் ரேஸிங் டிஎன்ஏ உடன் வரப்போகும் பைக்குகளில் எல்லாம் பொருத்த முடிவு செய்துள்ளது. இந்த டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் பைக் வேகமாகச் செல்லும் போது வளைவுகளில் பைக்கை ஸ்கிட் ஆக்காமல் டிரைவருக்கு கண்ட்ரோலை வழங்குகிறது.

அடுத்து வரிசையாக எஃப் இசட்-எஸ் 4.0, எஃப் இசட்-எக்ஸ், எம்டி 15 2.0, ஆர்15-எம் ஆகிய பைக்குகளை வரிசையாக அறிமுகப்படுத்தியது. இந்த பைக்குகள் உள்ள ஏற்கனவே மார்கெட்டில் உள்ள பைக்குகள் தான் அதை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்குகளில் ஏற்கனவே உள்ள அம்சங்கள் போக புதிய அம்சங்கள், கலர்கள், லுக் ஆகியவற்றை அப்டேட் செய்துள்ளது.
இந்த பைக்குகளின் பெர்ஃபாமென்ஸில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய மாடல்களில் உள்ள அதே இன்ஜின் தான் இந்த பைக்கிலும் உள்ளது. ஆனால் இந்தியாவில் ஏப்1ம் தேதி அமலுக்கு வரவுள்ள ஒபிடி-2 விதிமுறைக்கு இணங்க இந்த இன்ஜினில் ஆன் போர்டு டையனஸ்டிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ரியல் டைமில் எமிஷனல் ரிப்போர்ட்களை வழங்கும். இது போக இந்நிறுவனத்தின் புதிய டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் அனைத்து பைக்குகளிலும் பொருத்தப்பட்டுள்ளது. சரி ஒவ்வொ பைக்காக அப்டேட் செய்யப்பட்டுள்ள விபரங்களைக் காணலாம்.
எஃப்இசட்-எஸ் 4.0
புதிய எஃப்இசட் -எஸ்4.0 பைக்கை பொருத்தவரை பழைய வெர்ஷனிலிருந்து ஏகப்பட்ட அட்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் டிசைனே பழைய பைக்கிலிருந்து மஸ்குலின் டிசைனாக வடிவமைத்துள்ளனர். இதன் ஹெட்லைட் புதிதாக டிசைன் செய்யப்பட்ட போசிஷன் லேம்ப் உடன் கூடிய பிரைட்டான ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்லீக்கான எல்இனி இன்டிகேட்டர்களும் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கமும் உயர்த்தப்பட்ட எல்இடி லைட், மற்றும் எல்இடி ஃபிளாஷர்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பைக்கின் பெட்ரோல் டேங்கில் பைக்கின் பெயர் 3டி எம்பிளம்மாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முக்கியமாக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், யமஹா நிறுவனத்தின் புதிய டிராக்ஷன் கண்ட்ரோல் தொழிற்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 149 சிசி எஃப்ஐ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கில் 2 லெவல் சீட்கள் வழங்கப்பட்டுள்ளது.
பைக்கின் பின்பக்க டயர் பெரிதாக 140 மிமீ அகலம் கொண்ட டயர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீல்கள் பைக்கின் கலருக்கு ஏற்ற கலர்டு வீல்களாக வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக் மொத்தம் மெட்டாலிக் க்ரே, மெஜெஸ்டி ரெட் மெட்டாலிக் பிளாக், ஆகிய 3 நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது இந்த பைக்கின் விலையைப் பொருத்தவரை ரூ1,27,400 என்ற டில்லி எக்ஸ் ஷோரூம் விலைக்கு விற்பனைக்கு வருகிறது.
எஃப்இசட்-எக்ஸ்
யமஹா நிறுவனம் குறுகிய தூரப் பயணத்திற்காக இந்த எஃப்இசட்-எக்ஸ் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனாவிற்கு பிறகு மக்கள் இந்த ரக பைக்கை விரும்புவதால் இந்த எஃப்இசட்-எக்ஸ் பைக்கை அறிமுகப்படுத்துகிறது.
இந்த பைக்கில் வீல்கள் கோல்டன் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் யமஹாவின் புதிய டிராக்ஷன் கண்ட்ரோல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் டிசைனை பொருத்தவரை நியோ ரெட்ரோ டிசைன் பொருத்தப்பட்டுள்ளது. ஹெட்லைட்டை பொருத்தவரை ஃபை-பங்க்ஷனல் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டிஆர்எல் ஆகியன பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் புதிய எல்இடி ஃபிளாஷர்கள், ஸ்லீக் எல்இடி டெயில் லைட் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் பக்கவாட்டில் மெட்டல் சைடு கவர் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் அடிப்பகுதியில் மெட்டல் அண்டர் கவர் வழங்கப்பட்டுள்ளது. வேகத்தடையில் செல்லும் போது பைக்கின் இன்ஜின் ரோட்டில் உரசாமல் தடுக்கும். 2 லெவல் சீட்கள் வழங்கப்பட்டுள்ளது. இது போக எல்சிடி மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. செல்போனை சார்ஜ் போட சாக்கெட், வழங்கப்பட்டுள்ளது.
செல்போனுடன் பைக்கை ப்ளூடூத் மூலம் இணைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பைக்கின் எல்சிடி ஸ்கிரீனில் கால் எஸ்எம்எஸ், இமெயில் அலர்ட், ஆப் கனெக்டிவிட்ட ஸ்டேட்டஸ், போன் பேட்டரி லெவல் ஸ்டேட்டஸ் ஆகிய தெரியும். இது போக மொபைல் ஆப்பில் ஃப்யூயல் கம்சம்ஷன் செக், பராமரிப்பு பரிந்துரை ரேங்கிங், கடைசியாக பார்க் செய்யப்பட்ட லோகேஷன், ரிப்பேர் நோட்டிஃபிகேஷன், ரெவ் டேஷ்போர்டு, ஆகிய தகவல்கள் கிடைக்கும்.
இது போக பைக்கின் முன்பக்கம் டெலஸ்கோபிக் சஸ்பென்சன், மற்றும் பிளாக் பேட்டர்ன் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டார்க் மேட் ப்ளூ, மேட் காப்பர், மேட் பிளாக் ஆகிய நிறங்களில் இந்த பைக்கை வாங்கலாம். இந்த பைக்கின் விலையைப் பொருத்தவரை ரூ1,35,900 என்ற டில்லி எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது.
எம்டி-15 வெர்ஷன் 2
எம்டி 15 பைக் ஏற்கனவே மார்கெட்டில் இருக்கிறது. யமஹா நிறுவனம் அந்த பைக்கை அப்டேட் செய்து வெர்ஷன் 2வாக வெளியிட்டுள்ளது. இந்த பைக்கில் பழைய பைக்கிலிருந்து ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 155 சிசி இன்ஜின், அப்சைடு டவுன் ஃபோர்க், எல்இடி ஃபிளாஷர்கள் உள்ளன.
இது போக சீட்டை பொருத்தவரை கிராப் பார் உடன் கூடிய யூனிலெவல் சீட் பொருத்தப்பட்டுள்ளது. இது போக டிராக்ஷன் கண்ட்ரோல், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச்,
அட்வான்ஸ்டு மற்றும் முழுமையான டிஜிட்டல் எல்சிடி மீட்டர், டூயல் சேனல் ஏபிஎஸ், ஆகிய வசதிகள் உள்ளன. மேலும் ஆப் மூலம் கனெக்ட் செய்யும் வசதி இருக்கிறது. அதின் மூலம் செல்போன் ஆப்பில் ரேங்கிங், கடைசியாக பார்க் செய்யப்பட்ட லோகேஷன், ரிப்பேர் நோட்டிஃபிகேஷன், ரெவ் டேஷ்போர்டு, ஆகிய தகவல்கள் கிடைக்கும்.

இந்த பைக் மொத்தம் 5 விதமான கலர்களில் விற்பனைக்கு வருகிறது. சியான ஸ்ட்ரோம், மெட்டாலிக் பிளாக் டிஎல்எக், ரோஸிங் ப்ளூ, ஐஸ்-ப்ளோ வெர்மில்லியன் ஆகிய நிறங்களில் இந்த பைக்கை வாங்கலாம் இந்த பைக்கின் விலையைப் பொருத்தவரை ரூ1,68,400 என்ற டில்லி எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது.
ஆர்15-எம்
யமஹாவின் ஆர்15 பைக்கில் புதிய அப்டேட்களை புகுத்தி ஆர்15எம் என்ற பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் பழைய பைக்கை விட அதிக ஏரோடைமனிக்ஸ் இருக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதன் எடையைக் குறைக்க அலுமினியம் ஸ்விங் ஆர்ம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முக்கியமாக ஆர்1 இன்ஸ்பயர்டு டே மற்றும் நைட் மோட்கள் கொண்ட டிஎஃப்டி மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த பைக்கிலும் ப்ளூடூத் கனெக்ட் உள்ளது. இதிலும் ஏகப்பட்ட தகவல்கள் கிடைக்கிறது. இது போக இந்த பைக்கில் ஸ்பெஷல் ஸ்பிலிட் சீட்பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்க வீலை பொருத்தவரை 140 மிமீ பெரிய டயர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பழைய பைக்கை விடக் குறைவான எடையில் இது இருக்கிறது. புதிய எல்இடி் ஃபிளாஷர்கள், அப்சைடு டவுண் ஃபோர்க்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்15 எம் பைக்கின் விலையைப் பொருத்தவரை ரூ1,93,900 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுவே ஆர்15 வெர்ஷன் 4 பைக் ரேஸிங் ப்ளூ, டார்க் நைட், மெட்டாலிக் ரெட் ஆகிய நிறங்களில் ரூ1,80,900 முதல் ரூ1,85,900என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









