"வர்மன்னா சும்மாவா".. காட்டு மிராண்டியை போல இருக்கும் பைக்கை விற்பனைக்கு களமிறக்கிய யமஹா!

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா (Yamaha), இந்தியாவில் இன்றைய தினம் இரு புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக சமீப நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக இன்று அது இரு புதிய பைக் மாடல்களை விற்பனைக்கு களமிறக்கி இருக்கின்றது.

யமஹா ஆர்3 (Yamaha R3) மற்றும் எம்டி-03 (Yamaha MT-03) ஆகியவையே அவை ஆகும். இந்த இரண்டில் எம்டி-03 பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இந்த பைக்கின் விலை என்ன? அதன் சிறப்பம்சங்கள்? மேலும், இதை யமஹா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் வழி ஆகியவை பற்றிய விபரங்களையே இந்த பதிவில் இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Yamaha mt 03

யமஹா எம்டி-03, இந்த பைக்கை யமஹா நிறுவனம் சிபியூ வாயிலாகவே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இது ஓர் மேட்-இன் இந்தோனேசியா வாகனம் ஆகும். இதனை சிபியூ வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதால் லேசாக அதிக விலையைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

அறிமுகமாக இந்த பைக்கிற்கு ரூ. 4.60 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 5 லட்சத்தை நெருங்கலாம். இதே வாகனம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தால், இப்போது நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதைவிட குறைவான விலையே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும்.

Yamaha mt 03 side look

அதேவேளையில், இப்போது வேண்டுமானால் இந்த பைக்கை யமஹா சிபியூ (CBU) வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கலாம், ஆனால், இதற்கு இந்தியாவில் மற்ற வாகனங்களுக்கு கிடைப்பதைப் போல நல்ல வரவேற்புக் கிடைக்கும் எனில், எம்டி03 இன் உற்பத்தியையும் யமஹா நம் நாட்டிலேயே தொடங்கிவிடும்.

அதாவது, யமஹா ஃபஸ்ஸினோ, எஃப்இசட் உள்ளிட்ட பைக்குகளைப் போல இதன் உற்பத்தி பணிகளும் இங்கேயே மேற்கொள்ளப்படும். ஆனால், இதற்கு எம்டி-03 அதன் சகோதர மாடல்களைப் போல இந்தியர்களின் மனம் கவர்ந்த மாடலாக மாற வேண்டும். யமஹா நிறுவனம் எம்டி15 உருவாக்கத்தில் பயன்படுத்தி இருக்கும் யுக்தியைப் பயன்படுத்தியே எம்டி03-யை தயார் செய்திருக்கின்றது.

Yamaha mt-03 runnning shot

அதே முரட்டுத் தனமான முன் பக்கமே இந்த பைக்கிற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. சொல்லப் போனால் இந்த முன் பக்கம் எம்டி-03யை ஓர் காட்டு மிராண்டியைப் போல் பிரதிபலிக்க செய்கின்றது. இதன் முன் பக்க முரட்டுத் தனமான தோற்றத்திற்கு ஏற்பவே இந்த பைக்கின் பக்கவாட்டு பேனல்களும் உள்ளன.

அதுவும், ரக்கடான தோற்றத்தையே இந்த பைக்கிற்கு வழங்கி இருக்கின்றது. இந்த பைக்கின் ஒட்டுமொத்த எடை 167 கிலோவாகும். இந்த பைக்கின் உயரம் 780 மிமீ ஆகும். இது அதிக உயரமானதாக தெரிந்தாலும், அனைவராலும் இதைக் கையாளக் கூடியதாக பைக்கின் எடை இருக்கின்றது.

இத்துடன், அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் விதமாக பைக்கின் முன் பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க் வழங்கப்பட்டு இருக்கின்றது. எஞ்ஜினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 321 சிசி பாரல்லல் ட்வின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 42 எச்பி மற்றும் 29.5 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

இதே திறன் கொண்ட மோட்டாரே ஆர்3 பைக்கிலும் யமஹா பயன்படுத்தி இருக்கின்றது. டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் மிக சிறந்த பிரேக்கிங் சிஸ்டத்திற்காக இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், பலதரப்பட்ட முக்கிய தகவல்களை வழங்கும் விதமாக எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் திரை இந்த எம்டி03-இல் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த பைக்கின் வருகை கேடிஎம் ட்யூக் 390 பைக்கிற்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கின் விலை ரூ. 3.1 லட்சம் மட்டுமே ஆகும். இதைவிட 1.50 லட்சம் அதிக விலைக் கொண்டதாக எம்டி03 காட்சியளிக்கின்றது. இந்த அதிக விலைக்கு ஏற்ப அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாக எம்டி03 காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹாவின் இந்த தயாரிப்பிற்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக்கை யமஹா இந்தியாவில் அறிமுகம் செய்வது இதுவே முதல் முறையாகும். இதனை தனது ப்ளூ ஸ்கொயர் விற்பனையகம் வாயிலாக விற்பனைக்கு வழங்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, December 15, 2023, 19:56 [IST]
English summary
Yamaha launches mt 03 in india at rs 4 60 lakh
மேலும்... #யமஹா #yamaha #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X