நாளைக்கு இந்தியால ரெண்டு பைக்கு அறிமுகமாக போகுது!.. ரெண்டையும் ஏதோ சாதாரண பைக்குனு நினைச்சுராதீங்க!
இந்தியா இருசக்கர வாகன பிரியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் இரு பைக் மாடல்கள் நாளை நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. அவை என்னென்ன மாடல்கள்? அதன் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இரண்டு சக்கர வாகன காதலர்களின் எதிர்பார்ப்பாக யமஹா ஆர்3 மற்றும் எம்டி 03 பைக் மாடல்கள் இருக்கின்றன. இவையே நாளைய தினம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. மோட்டோஜிபி 2023 நிகழ்விலேயே இந்த பைக்குகள் முதல் முறையாக வெளியீடு செய்யப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

அன்றைய தினத்தில் இருந்து பலரின் கவனத்தையும், எதிர்பார்ப்பையும் ஈர்க்க தொடங்கிவிட்டன இந்த பைக்குகள். பார்க்க வெவ்வேறு தோற்றத்தை இந்த பைக் மாடல்கள் கொண்டிருந்தாலும், எஞ்சின் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. ஆமாங்க, ரெண்டிலும் ஒரே திறன் கொண்ட எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்தியாவிற்கு ஏற்கனவே பரீட்சையமான ஓர் பைக் மாடலே ஆர்3 ஆகும். புதிய மாசு உமிழ்வு விதி காரணமாக இந்த பைக்கின் உற்பத்தி மற்றும் விற்பனை என அனைத்தும் நிறுத்தப்பட்டன. இந்த நிலையிலேயே அதனை மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது யமஹா.

அதேவேளையில், எம்டி-03 இந்தியாவிற்கு வருவது இதுவே முதல் முறையாகும். ஆகையால், இந்த பைக் இந்தியர்கள் கவனத்தை மிகப் பெரிய அளவில் ஈர்த்த வண்ணம் இருக்கின்றது. அதேவேளையில், யமஹா ஆர்3 இந்தியர்களுக்கு பிடித்தமான பைக் மாடல் என்பதால் அதன் வருகைக்கும் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது.
321 சிசி திறன் கொண்ட எஞ்சினே இந்த பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் லிக்யூடு கூல்டு பாரல்லல் டவின் மோட்டார் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 41.4 பிஎச்பி பவரையும், 29.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிஹ் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இந்த பைக்குகளின் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகளே வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, டூயல் சேனல் ஏபிஎஸ்-ம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இவற்றுடன் மிக சிறந்த சஸ்பென்ஷனுக்காக முன் வீலில் அப்-சைடு டவுன் ஃபோர்க்கும், பின் வீலில் மோனோஷாக்கும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், எல்இடி ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பைக் விற்பனைக்கு வரும்பட்சத்தில் கவாஸாகி நிஞ்சா 300, கேடிஎம் ஆர்சி 390 மற்றும் அப்ரில்லா ஆர்எஸ் 457 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
எம்டி-03 கேடிஎம் 390 ட்யூக் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. சிபியூ வாயிலாக இந்த பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ரூ. 3 லட்சம் தொடங்கி ரூ. 4 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. யமஹாவின் ப்ளூ ஸ்கொயர் ஷோரூம் வாயிலாகவே இந்த பைக்குகள் விற்பனைக்கு வர இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் யமஹா இருசக்கர வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அதன் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் யமஹா களமிறங்கி இருக்கின்றது. இது நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









