யமஹாவின் தரமான தயாரிப்புனு இதை சொல்லலாம்.. ஆர்எக்ஸ்100-ஐ போல சேல்ஸ் ஆகினா கூட சந்தேகப்படுவதற்கு ஒன்னுமில்ல!

இரண்டு சக்கர வாகன காதலர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக யமஹா எம்டி-09 பைக் மாடலின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் இருக்கின்றது. இதையே யமஹா நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. இந்த அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை யமஹா வெளியீடு செய்வது இதுவே முதல் முறையாகும்.

ஆகையால், இந்த நிகழ்வை திருப்பதி வெங்கடாசலபதி தரிசனத்திற்கு இணையாக பைக் காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் வெகு விரைவில் உலக சந்தையைக் களம் காண இருக்கின்றது. யமஹா எம்டி-09 எஸ்பி என்கிற பெயரிலேயே சந்தையில் வலம் வர இருக்கின்றது.

Yamaha mt-09 sp unveiled

இதன் வருகை முன்னணி நிறுவனங்களின் சூப்பர் பைக்குகளுக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் அப்டேட்டின்கீழ் பல்வேறு சிறப்பு வசதிகளையும், அம்சசங்களையும் சேர்த்து இருப்பதனாலேயே இவ்வாறு கருதப்படுகின்றது. அப்டேட்டின்கீழ் இந்த பைக்கில் டிஎல்சி கோட்டட் 41 மிமீ கேஒய்பி ஃபோர்க் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது முழுக்க முழுக்க அட்ஜஸ்டபிள் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதையே முன் பக்கத்தில் நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இத்துடன், பின் பக்கத்தில் ஒஹ்லின்ஸ் மோனோஷாக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ரிமோட் ப்ரீ-லோட் அட்ஜஸ்டர் வசதிக் கொண்டது. இந்த இரண்டும் ரைடை மிகவும் ரம்மியமானதாக மாற்றக் கூடியவை ஆகும்.

இத்துடன், புதிய பிரேக்கிங் சிஸ்டத்தையும் இந்த பைக்கில் யமஹா வழங்கி இருக்கின்றது. எம்டி-09 மாடலின் உயர்நிலை தேர்வில் பிரெம்போ ஸ்டைலிமா காலிபர்கள் கொண்ட 298 மிமி டிஸ்க் பிரேக் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் 245 மிமீ டிஸ்க் பிரேக் ஸ்விட்சபிள் ஏபிஎஸ் வசதியுடனும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த ஏபிஎஸ் அம்சமானது ஸ்டாண்டர்டு அம்சம் ஆகும். இதுதவிர, ரைடு கன்ட்ரோல் அம்சத்தையும் இந்த பைக்கில் யமஹா வழங்கி இருக்கின்றது. இந்த அம்சத்தைக் கொண்டு எஞ்ஜின் பவர் மற்றும் எலெக்ட்ரானிக் ரைடர் எய்ட்ஸ்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்துடன், ஸ்மார்ட் கீ சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

யமஹாவின் இந்த பைக்கே ஸ்மார்ட் கீ சிஸ்டத்தைப் பெறும் முதல் பைக்காகும். இந்த சாவியைக் கொண்டு பைக்கை லாக் மற்றும் அன்லாக் செய்தல் மற்றும் எஞ்ஜின் ஆன்/ஆஃப் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். இத்துடன், ஃப்யூவல் கேப்பை லாக் செய்ய முடியும் என தெரிகின்றது.

எஞ்ஜினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 890 சிசி, சிபி3 வகை எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் 3 சிலிண்டர், 4 வால்வுகள் கொண்ட டிஓஎச்சி லிக்யூடு கூல்டு எஞ்ஜின் ஆகும். இத்துடன் பிராண்ட் நியூ 5 அங்குல டிஎஃப்டி கலர் ஸ்கிரீன், மூன்றாம் தலைமுறை குயிக் ஷிஃப்டர் மற்றும் நான்கு விதமான ரைடிங் மோட்கள் உள்ளிட்டவையும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இதன் குயிக் ஷிஃப்டர் மிக சிறந்த ஷிஃப்ட் மற்றும் கடுமையான ஆக்சலரேஷனுக்கு வழி வகுக்கும். இதுதவிர பாதுகாப்பு மற்றும் மிக சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக இந்த பைக்கில் ஸ்லைடு கன்ட்ரோல் சிஸ்டம், முன் பக்க வீல் லிஃப்ட் கன்ட்ரோல் சிஸ்டம், இரண்டு மோட்கள் கொண்ட பிரேக் கன்ட்ரோல் சிஸ்டம், புதிய பேக் ஸ்லிப் ரெகுலேட்டர் மற்றும் எஞ்ஜின் பிரேக் மேனேஜ்மென்ட் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் எம்டி-09 எஸ்பி பைக் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரியவில்லை. 2024 ஆம் ஆண்டிற்குள் அது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவிலும் இது விற்பனைக்கு வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் இந்த பைக்கின் வழக்கமான வெர்ஷன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 10.64 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 4, 2023, 19:04 [IST]
English summary
Yamaha mt 09 sp unveiled here is more details about bike
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+